நோக்கியா டி1சி கருவி : இரண்டு சூப்பர் வகைகளில் வெளியாகும்.!?
சமீபத்தில் வெளியாகியுள்ள லீக் தகவல்கள் மூலம் வரவிருக்கும் நோக்கியா டி1சி ஸ்மார்ட்போனின் கேமிரா, ரேம் மற்றும் டிஸ்ப்ளே சார்ந்த மேலும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நோக்கியா நிறுவனம் 2017-ஆம் ஆண்டில் அதன் நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் கொண்டு வணிகத்தில் மீண்டும் நுழைய இருக்கிறது என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்தே விடயமே. அதை நோக்கியா நிறுவனமும் அதிகாரப்பூர்வமான செய்தி மூலம் உறுதி செய்தது.
முதலில் நோக்கியா எம்டபுள்யூசி 2017-ல் மூன்று முதல் நான்கு ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் கருவிகளை அறிமுகம் செய்யும் மற்றும் நிறுவனம் ஒரு நுழைவு அளவிலான மற்றும் ஒரு மிட்-ரேஞ்சர் மொபைல் ஆகியவைகளை சேர்த்து அதன் இரண்டு பிளாக்ஷிப் தொலைபேசிகளை அறிமுகம் செய்யும் என்றும் என்ற வதந்திகள் கிளம்பின.
உடன் நோக்கியா டி1சி கருவியானது நுழைவு நிலை அம்சங்கள் கொண்ட நோக்கியாவின் நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று லீக் தகவல்கள் கூறியிருந்தது. இது சார்ந்த பல லீக் தகவல்கள் கிடைத்த வண்ணம் இருக்க தற்போது சமீபத்தில் வெளியாகியுள்ள லீக் தகவல்கள் மூலம் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் கேமிரா, ரேம் மற்றும் டிஸ்ப்ளே சார்ந்த மேலும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இரண்டு வகைகளில்..
என்பியூ-வின் கருத்துப்படி நோக்கியா டி1சி கருவியானது இரண்டு வகையான டிஸ்ப்ளே மாறுபாடு அளவுகளில் வெளியாகும். ஆனால், இங்கே முக்கியமான விடயம் என்னவென்றால் டிஸ்ப்ளேவில் மட்டுமல்ல இன்டர்னெல் ஆகவும் இரண்டு கருவிகளும் வேறுபடுகின்றன.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

5 இன்ச் வேரியண்ட்
குறைந்த அளவிலான மாறுபாடு கொண்ட 5 இன்ச் 1080பி ஸ்க்ரீன் வேரியண்ட் கருவியில் 2ஜிபி மற்றும் ஒரு 13எம்பி பின்புற மற்றும் ஒரு 8எம்பி முன்பக்க சென்சார் கேமிரா, 16ஜிபி அளவிலான இண்டர்னல் மெமரி ஆகியவைகள் இடம்பெறலாம்.

5.5 இன்ச் வேரியண்ட்
மற்றொரு நோக்கியா டி1சி மாறுபாடில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வரையிலான இண்டர்னல் மெமரி சேர்த்து ஒரு 5.5-அங்குல 1080பி ஸ்க்ரீன் இடம் பெறலாம். மேலும், இந்த மாறுபாத்தின் பின்புற கேமரா 16எம்பிமுமற்றும் முன்பக்க கேமிரா 8எம்பியாக இருக்க வாய்ப்புண்டு.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அக்டா-கோர் கார்டெக்ஸ்-ஏ53 சிபியூ
இந்த கசிவில் ஒரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இரண்டு வகைகளிலுமே அட்ரெனோ 505 ஜிபியூ பொருத்தப்பட்ட 1.4 ஜிகாஹெர்ட்ஸ் அக்டா-கோர் கார்டெக்ஸ்-ஏ53 சிபியூ எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்
அனைத்தை காட்டிலும் சிறந்த அம்சமாக நோக்கியா டி1சி (இரண்டு வகைகளிலுமே) பெட்டிக்கு வெளிய ஆண்ட்ராய்டு நௌவ்கட் எதிரப்பார்க்கப்படுகிறது. இதுவொரு புதிய கசிவு இல்லை என்றாலும் கூட இந்த தொலைபேசியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க
வேற லெவலில் வெளியாகும், சியோமி மி 5சி : லைவ் லீக் தகவல்கள்.!


Click it and Unblock the Notifications