நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் : மிக விரைவில்..

By Meganathan
|

புதிய வகை ஆண்ட்ராய்டு போன் மற்றும் டேப்ளெட் கருவிகளுடன் நோக்கியா இந்த ஆண்டு சந்தையில் மீண்டும் களமிறங்க இருப்பதாகத் தெரிவித்திருந்தது. விரைவில் வெளியாகும் எனக் கடந்த சில வாரங்களாக இணையத்தில் இது குறித்த தகவல் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில் மீண்டும் களமிறங்க இருக்கும் நோக்கியா எச்எம்டி (HMD) எனும் நிறுவனத்துடன் இணைந்து புதிய கருவிகளுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

தகவல்

தகவல்

ஆண்டு இறுதி கிட்டதட்ட நெருங்கி விட்ட நிலையில் நோக்கியா கருவிகள் இன்னும் வெளியாகவில்லை என்ற ஆவல் அதிகரித்த நிலையில் நோக்கியா மூன்று போன்களுடன் களமிறங்கத் தயாராகி விட்டது என்ற செய்தி கசிந்துள்ளது. எனினும் டேப்ளெட் கருவி குறித்த தகவல் மர்மமாகவே இருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஃபிளாக்ஷிப்

ஃபிளாக்ஷிப்

மூன்று புதிய நோக்கியா கருவிகளில் இரண்டு கருவிகள் விலை உயர்ந்த அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஃபிளாக்ஷிப் கருவிகளாக இருக்கும் என்றும் மூன்றாவது கருவியானது வழக்கமான நோக்கியா விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா D1C

நோக்கியா D1C

பலமுறை இணையங்களில் கசிந்த நோக்கியா D1C கருவியானது 1080p ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், Adreno 505 GPU 3ஜிபி ரேம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அம்சங்கள்

அம்சங்கள்

32 ஜிபி இன்டர்னல் மெமரியும், ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளமும், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது.

ஃபிளாக்ஷிப் கருவிகள்

ஃபிளாக்ஷிப் கருவிகள்

நோக்கியா ஃபிளாக்ஷிப் கருவிகளில் 5.2 இன்ச் மற்றும் 5.5 இன்ச் திரை 2K ரெசல்யூஷன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர், 22.6 எம்பி பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ், 4K வீடியோ பதிவு செய்யும் வசதியும் கொண்டிருக்கலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எச்எம்டி

எச்எம்டி

புதிய நோக்கியா கருவிகளை எச்எம்டி நிறுவனம் தயாரித்து வருகின்றது. நோக்கியா பிரான்டு பீச்சர் போன், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளை தயாரிக்க இருக்கின்றது. நோக்கியா பிரான்டு பயன்படுத்தும் முழு உரிமையினை எச்எம்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Nokia D1C Android device spotted online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X