சிங்கிள் சார்ஜில் 3 நாட்களுக்கு பேட்டரி.. 6.7-இன்ச் டிஸ்பிளே.. பிரபலமான நோக்கியா போனுக்கு ஆஃபர்.. விடாதீங்க..
நோக்கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் அதிக வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தனித்துவமான வடிவமைப்பு, சிறந்த பாதுகாப்பு வசதி, அட்டகாசமான கேமரா எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டு இந்த நோக்கியா போன்கள் வெளிவருகின்றன.
அதேபோல் விரைவில் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது நோக்கியா நிறுவனம். இந்நிலையில் பிரபலமான நோக்கியா போனுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நோக்கியா சி31 ஸ்மார்ட்போனுக்கு தற்போது அமேசான் (amazon) தளத்தில் 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த நோக்கியா சி31 (Nokia C31) ஸ்மார்ட்போன் முன்பு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அமேசான் தளத்தில் இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த போனை ரூ.8,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த நோக்கியா சி31 ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். இப்போது இந்த நோக்கியா சி31 போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 720×1600 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக ஆக்டோ-கோர் Unisoc SC9863A1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது நோக்கியா சி31 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது அட்டகாசமான நோக்கியா சி31 ஸ்மார்ட்போன். இந்த போனின் மென்பொருள் மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நோக்கியா நிறுவனம்.
அதேபோல் நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி வசதிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை மிகவும் குறைவு.
4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி4.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி31 ஸ்மார்ட்போன். சார்கோல் ((Charcoal) மற்றும் சியான் (Cyan) நிறங்களில் இந்த நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. கம்மி விலையில் கிடைக்கும் ரெட்மி போன்களை விட சிறந்த பாதுகாப்பு வசதி கொண்ட நோக்கியா போன்களை வாங்குவது நல்லது.


Click it and Unblock the Notifications








