அதிரடியாக ப்ரோ மாடல் போனை ரூ.6999-க்கு ரிலீஸ் செய்த Nokia! ஆஃப்பர் உடன் இன்னும் கம்மி விலையா?
பல ஆண்டுகளாக இந்தியர்களின் நம்பிக்கையை பெற்ற பிராண்டாக திகழும் நோக்கியா (Nokia) தற்போது ஒரு புதிய வேரியண்ட் ஸ்மார்ட்போன் மாடலை மலிவு விலையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. நோக்கியா வரிசையில், அதிகம் விற்பனையான நோக்கியா C12 ப்ரோ (Nokia C12 Pro) மாடல் இதுவாகும்.
நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான உரிமத்தை பெற்றுள்ள HMD குளோபல் நிறுவனம், இந்த ஆண்டு மார்ச் மாதம் நோக்கியா C12 ப்ரோ என்ற மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் இப்போது அதன் தொடக்க நிலை ஆண்ட்ராய்டு போன் ஆனா நோக்கியா C12 ப்ரோ போனுக்கான புதிய கலர் வேரியண்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

நோக்கியா சி12 ப்ரோவின் புதிய பர்பிள் நிற மாறுபாட்டை வெளியிடுவதை நோக்கியா ட்விட்டரில் அறிவித்துள்ளது. நோக்கியா மொபைல் இந்தியா ட்வீட் செய்த பதிவில், "புதிய Nokia C12 உடன் பர்பிள் நிறத்தில் பாப் செய்யுங்கள். உலகத்தை ஆச்சர்யப்படுத்துங்கள். உடனே விரைந்து செல்லுங்கள்!". இந்த போனின் நிறம் தவிர மற்ற அனைத்து விவரக்குறிப்புகளும் ஒரே மாதிரியானவை.
பர்பிள் நிறம் தவிர லைட் மிண்ட், சார்கோல் மற்றும் டார்க் சியான் வண்ண விருப்பங்களிலும் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கலாம். நோக்கியா சி12 ப்ரோ இரண்டு வகைகளில் வருகிறது. இதன் முதல் அடிப்படை வேரியண்ட் மாடல் 2ஜிபி ரேம் உடன் ரூ.6,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் 3ஜிபி ரேம் மாடல் ரூ.7,499 விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் Nokia.com மற்றும் இ-காமர்ஸ் இணையதளங்கள் மற்றும் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்கள் வழியாக வாங்க கிடைக்கிறது. Nokia C12 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 20:9 விகிதத்துடன் கூடிய பெரிய 6.3' இன்ச் HD+ டிஸ்ப்ளேவை மலிவு விலையில் வழங்குகிறது.

நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவைப் பாதுகாக்க, இதில் 2D டஃப்னட் கிளாஸ் லேயர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மலிவு விலை நோக்கியா சி12 ப்ரோ சாதனம் ஆக்டா-கோர் யூனிசோக் SC9863A1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 3ஜிபி வரை ரேம் வசதியை கொண்டுள்ளது. இது 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடுதல் ஸ்டோரேஜ்ஜிற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் அம்சத்தையும் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் நோக்கியா சி12 ப்ரோ இரண்டு வருட வழக்கமான பாதுகாப்பு இணைப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. கூடுதலாக, ஸ்மார்ட்போன் 12 மாத மாற்று உத்தரவாதத்துடன் வருகிறது. நோக்கியா சி12 ப்ரோ ஒரு நுழைவு நிலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். இது டூயல் சிம் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
இது எல்இடி ப்ளாஷ் கொண்ட 8MP சிங்கிள்-லென்ஸ் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP52 மதிப்புடன் வருகிறது. இது டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது. இது 10W சார்ஜிங் ஆதரவுடன் 4000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. மலிவு விலையில் ஆண்ட்ராய்டு போன் வாங்க நினைப்பவருக்கு இது பெஸ்ட் சாய்ஸ் போனாகும்.


Click it and Unblock the Notifications