சி1 சிங்கத்துடன் களமிறங்கும் நோக்கியா..!!
நோக்கியா நிறுவனம் சில காலமாக சந்தையை விட்டு விலகி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சந்தையில் முதல் இடத்தை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டுடன் இழந்த நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கி கொண்டது.

இந்நிலைமையில் மைக்ரோசாப்ட் ஒப்நதம் முடிந்த பின் அடுத்தாண்டின் நான்காவது காலாண்டில் மீண்டும் நோக்கியா கருவிகள் வெளியாகும் என நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜீவ் சூரி தெரிவித்துள்ளார்.
நோக்கியா சின்னம் மற்றும் பெயர் பொறித்த முதல் ஸ்மார்ட்போன் கருவியாக நோக்கியா சி1 இருக்கும் என செய்திகள் வெளியாக துவங்கி விட்டன. மேலும் இந்த கருவியின் சிறப்பம்சங்களும் மெல்ல கசிந்திருக்கின்றன.

சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா சி1 கருவியானது 5.0 அல்லது 5.5 இன்ச் எஃப்எச்டி திரை கொண்டிருக்கும் என்றும் 32 ஜிபி மெமரி 2 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி 3 ஜிபி ரேம் என இரு வகை மெமரி கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவோடு இந்த கருவி ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளம் என இரு மாடல்கள் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
எனினும் நோக்கியா விரும்பிகள் இந்த கருவியை வாங்க அடுத்தாண்டின் நான்காவது காலாண்டு வரை காத்திருக்க வேண்டும்.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications