Home
News

Nokia C01 Plus வெறும் ரூ. 6,299 தானா? இப்போது கூடுதல் ஸ்டோரேஜ் மாடலுடன் அறிமுகம்.. கம்மி விலையில் பெஸ்ட் போன்

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா சி01 பிளஸ் (Nokia C01 Plus) கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சமீபத்திய நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலின் மற்றொரு ரேம் மற்றும் சேமிப்பக மாறுபாட்டை நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாறுபாட்டுடன், பட்ஜெட் சார்ந்த நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் இப்போது நாட்டில் வாங்குவதற்கு இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

பட்ஜெட் விலையில் பெஸ்டான போன் Nokia C01 Plus ஸ்மார்ட் போன் தான்

பட்ஜெட் விலையில் பெஸ்டான போன் Nokia C01 Plus ஸ்மார்ட் போன் தான்

Nokia C01 Plus ஸ்மார்ட் போன் ஆனது 5.45' இன்ச் HD+ கொண்ட டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட் போன் 1.6GHz ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சத்திற்காக இது 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைப் பெறுகிறது. இது முன் மற்றும் பின்புற கேமராவிற்கு ஃபிளாஷ் ஆதரவையும் வழங்கியுள்ளது. Nokia C01 Plus ஆனது ஆண்ட்ராய்டு 11 (Go பதிப்பு) இல் இயங்குகிறது.

இந்தியாவில் நோக்கியா சி01 பிளஸ் விலை

இந்தியாவில் நோக்கியா சி01 பிளஸ் விலை

நோக்கியா C01 பிளஸின் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ. 6,799 ஆக இருக்கிறது. பட்ஜெட் சார்ந்த நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 2021 இல் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி சேமிப்பு மாறுபாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இதன் விலை ரூ. 5,999 ஆக இருந்தது, ஆனால், இப்போது இதன் விலை சற்று அதிகரிக்கப்பட்டு ரூ. 6,299 என்ற விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. Nokia.com, Amazon மற்றும் Flipkart போன்ற முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலம் வாங்குவதற்கு இது கிடைக்கிறது.

Nokia C01 Plus ஸ்மார்ட் போன் மீது கிடைக்கும் சலுகைகள்

Nokia C01 Plus ஸ்மார்ட் போன் மீது கிடைக்கும் சலுகைகள்

நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் விருப்பமும் அதே நீலம் மற்றும் சாம்பல் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கான சலுகைகள் பற்றி பார்க்கையில், ஜியோ சந்தாதாரர்களுக்கு அற்புதமான சலுகைகள் கிடைக்கிறது. ஜியோ சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த நன்மையின் மதிப்பு சுமார் ரூ. 4,899 ஆகும். முதலில், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு "உடனடி விலை ஆதரவு" என்ற சலுகையின் மூலம் ரூ. 600 வழங்கப்படுகிறது.

ஜியோ வழங்கும் இந்த கூடுதல் சலுகைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

ஜியோ வழங்கும் இந்த கூடுதல் சலுகைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

இது புதிய நோக்கியா C01 பிளஸ் ஸ்மார்ட் போனின் விலையை ரூ. 5,699 மற்றும் ரூ. 6,199 என்று குறைக்கிறது. இது முறையே நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட் போனின் 16 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் சேமிப்பு வகைகளுக்குப் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது. இத்துடன், கூடுதலாக ஜியோ சந்தாதாரர்கள் ரூ. 299 மதிப்பிலான ரீசார்ஜ் நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது. அதற்கு மேல், Myntra, PharmEasy, Oyo மற்றும் MakeMyTrip முழுவதும் ரூ. 4,000 வரை பலன்கள் கிடைக்கும்.

நோக்கியா C01 பிளஸ் ஸ்மார்ட்போன் விபரம்

நோக்கியா C01 பிளஸ் ஸ்மார்ட்போன் விபரம்

நோக்கியா C01 பிளஸ் ஸ்மார்ட்போன் 5.45 இன்ச் எச்டி+ அளவு கொண்ட 720 x 1,440 பிக்சல்கள் உடைய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 18:9 விகிதமும் 295பிபிஐ பிக்சல் அடர்த்தியும் கொண்டுள்ளது. இது 1.6GHz ஆக்டா கோர் Unisoc SC9863a சிப்செட் மூலம் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி வரையிலான உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128ஜிபி வரை மூலம் உள் நினைவகத்தை விரிவாக்க முடியும். இது டூயல் சிம் (நானோ) உடன் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இயங்குதளத்தில் இயங்குகிறது.

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

கேமரா அம்சம் பற்றி பார்க்கையில், Nokia C01 Plus ஆனது f/2.4 துளை மற்றும் 2 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் கொண்ட ஒரு ஒற்றை 5-மெகாபிக்சல் கேமராவை பின்புறத்தில் கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களும் LED ஃபிளாஷ் ஆதரவைப் பெறுகின்றன. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi உடன் 802.11b/g/n, ப்ளூடூத் v4.2, மைக்ரோ-USB போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். Nokia C01 Plus இல் உள்ள சென்சார்களில் முடுக்கமானி, சுற்றுப்புற ஒளி சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், GPS, A-GPS மற்றும் முக அங்கீகாரம் ஆகியவை அடங்கும்.

கம்மி விலையில் நம்பகமான புது போனை வாங்கலாம்

கம்மி விலையில் நம்பகமான புது போனை வாங்கலாம்

Nokia C01 Plus ஆனது 5W சார்ஜிங் ஆதரவுடன் 3,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. தவிர, ஃபோன் 147.95x71.8x9.3mm அளவுகள் மற்றும் தோராயமாக 157 கிராம் எடையுடையது. குறைந்த விலையில் ஒரு அற்புதமான ஸ்மார்ட் போன் சாதனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் நோக்கியாவின் இந்த புதிய நோக்கியா C01 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை கருத்தில்கொள்ளலாம். முன்பைவிட இப்போது இந்த மாடல் கூடுதல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்துடன் கிடைக்கிறது என்பது சிறப்பான விஷயம். அதிகபட்சமாக, நீங்கள் வெறும் ரூ. 6,299 செலவு செய்தால் ஒரு நம்பகமான புது போனை வாங்கலாம் என்பது அற்புதமான டீல் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Nokia C01 Plus Gets New 32GB Storage Variant in India 16GB Model Gets Price Hike : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X