இனி ஆட்டம் வேறமாதிரி: வளர்ச்சிக்கு என்ன வேணும்னாலும் செய்வோம்- 10,000 பணியிடங்களை குறைக்க போகும் நோக்கியா!

|

கீபோர்ட் சாதனங்கள் மக்கள் அதிகம் பயன்படுத்திய காலத்தில் புகழ்பெற்ற நிறுவனமாக இருந்தது நோக்கியா. தொழில்நுட்பம் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற தொலைபேசிகளின் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன்கள் மக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதல் பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு புதுபுது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது.

ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் நோக்கியா

ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் நோக்கியா

நோக்கியா நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது. நோக்கியா பட்ஜெட் விலையிலும், முதன்மை ரக அம்சங்களோடும் பல்வேறு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தாலும் வாடிக்கையாளர்களிடம் பெரிதளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

புதிய தலைமை நிர்வாகி பெக்கா லண்ட்மார்க்

புதிய தலைமை நிர்வாகி பெக்கா லண்ட்மார்க்

புதிய தலைமை நிர்வாகி பெக்கா லண்ட்மார்க் தலைமையில் பரந்தளவிலான மறுசீரமைப்பை நோக்கியா அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சந்தை முன்னேற்றங்களுக்கு வேலை இழப்புகளை நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோக்கியா புதிய தலைமை நிர்வாக அதிகாரி

நோக்கியா புதிய தலைமை நிர்வாக அதிகாரி

பல வருடங்களாக வணிகத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நோக்கியா சில ஆண்டுகளாக சரிவையே சந்தித்து வருகிறது. இதையடுத்து கடந்தாண்டு நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்ற பெக்கா லண்ட்மார்க், நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

பெக்கா லண்ட்மார்க்கின் நடவடிக்கை

பெக்கா லண்ட்மார்க்கின் நடவடிக்கை

நோக்கியா நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி பெக்கா லண்ட்மார்க்கின் முதல்கொள்கையாக கூறப்படுவது, நோக்கியா 5ஜி அறிமுகத்தில் முன்னணி நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதுதான். 600 மில்லியன் யூரோ (715 மில்லியன் டாலர்) செலவுக் குறைப்பு திட்டத்தின் ஒருபகுதியாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது பணியார்களில் 11 சதவீதம் குறைக்கப்படும் என ஃபின்னிஷ் தொலைத் தொடர்பு சாதன தயாரிப்பாளர் நோக்கியா முடிவெடுத்துள்ளது.

ராசா., நம்பி பொறுப்ப கொடுக்குறோம்: நீங்களே ரோடு போடலாம்., சாலை பெயரையும் மாற்றலாம்- ராசா., நம்பி பொறுப்ப கொடுக்குறோம்: நீங்களே ரோடு போடலாம்., சாலை பெயரையும் மாற்றலாம்- "கூகுள் மேப்" அப்டேட்!

பணியிடம் குறைப்பு நடவடிக்கை

பணியிடம் குறைப்பு நடவடிக்கை

புதிய தலைமை நிர்வாகி பெக்கா லண்ட்மார்க் தலைமையில் பரந்தளவிலான மறுசீரமைப்பை நோக்கியா அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சந்தை முன்னேற்றங்களுக்கு வேலை இழப்புகளை நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளபடி சுமார் 90,000 ஊழியர்களில் இருந்து அடுத்த 18-24 மாதங்களில் 80,000 முதல் 85,000 ஊழியர்கள்வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

5ஜி-ல் முன்னணி என்பதே குறிக்கோள்

5ஜி-ல் முன்னணி என்பதே குறிக்கோள்

5ஜி-ல் நோக்கியா முன்னணி நிறுவனமாக வேண்டும் எனவும் அதற்கு நோக்கியா எதை வேண்டுமானாலும் செய்யும் எனவும் புதிய தலைமை நிர்வாகி கூறினார். அதேபோல் தற்போது ஹூவாய் நிறுவனத்தின் பங்கை கைப்பற்றி இருக்கிறது. சூப்பர் ஃபாஸ்ட் 5ஜி உபகரணங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்த எரிக்சன், ஹூவாய் ஆகியவற்றுடன் மூன்றாவது போட்டியாளராக நோக்கிய நிறுவனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெறுவது உறுதி

வெற்றி பெறுவது உறுதி

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் லண்ட்மார்க் தலைமை பொறுப்பேற்ற பிறகு, முந்தையை தலைமை நிர்வாக அதிகாரியான ராஜீவ் சூரியின் எண்ட் டூ எண்ட் தீர்வுகள் மூலோபாயத்தை முழுவதுமாக கைவிட்டார். அதோடு 5ஜி-ல் வெற்றி பெற தான் எதை வேண்டுமானாலும் முதலீடு செய்வேன் என குறிப்பிட்டார்.போட்டியிட தேர்வு செய்யும் பகுதியில் தாங்கள் வெற்றி பெறுவோம் என லண்ட்மார்க் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எரிக்சன் மற்றும் ஹூவாய் நிறுவனத்துடன் போட்டிப்போடும் என செய்திகள் பரவும் நிலையில் அதன் முதலீடு செலவை பொருட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 வேலைகளை குறைப்பதற்கான திட்டங்களை நோக்கியா மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடரும் பணியிட நடவடிக்கை

தொடரும் பணியிட நடவடிக்கை

நோக்கியாவின் முந்தைய சுற்று செலவுக்குறைப்பு நடவடிக்கையாக 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட வேலைக் குறைப்பு நடவடிக்கை நடந்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டில் அல்காடெல்- லூசண்ட் கையகப்படுத்தப்பட்ட போது இதேபோல் வேலைஇடங்கள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Source: theguardian.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia Announced that it will Cut 10,000 Jobs in the Next 24 Months

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X