நோக்கியா ஒரு முடிவோடு தான் இருக்கு, மேலும் புதிய ஸ்மார்ட்போன், பீச்சர் கருவி.!

|

ஏற்கனவே பெரும்பாலான நோக்கியா ரசிகர்களால் நோக்கியா 6 வெளியான ஆவலை அடக்க முடியாமல் எப்போது இந்திய சந்தைக்கு வரும் எப்போது வாங்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த ஆர்வத்தை மேலும் கிளப்பும் வண்ணம் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 உடன் சேர்த்து நோக்கியாவின் கிளாசிக் கருவியான 3310 பீச்சர் கருவியும் அற்புதமான புதிய வடிவமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டது.

வழக்கமாக நோக்கியா வாங்கலாமா இல்லை ஆப்பிள் வாங்கலாமா அல்லது சாம்சங் வாங்கலாமா என்ற குழப்பம் எழும் ஆனால் இப்போதோ நோக்கியாவின் எந்த கருவியை வாங்குவதென்ற குழப்பத்தில் நாம் ஆழ்த்துள்ளோம். இந்நிலையில் நோக்கியா மேலும் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் பீச்சர் கருவிகளை வெளியிட உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

120 உலக சந்தைகளில்

120 உலக சந்தைகளில்

இதைத்தான் பல மாதங்களாக சொல்றீங்க ஆனா மொபைல் ரிலீஸ் ஆன மாதிரி இல்லையே என்ற எண்ணம் உங்களுக்குள் எழலாம். மறந்துவிட விட வேண்டாம் நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் இந்த காலாண்டில் சுமார் 120 உலக சந்தைகளில் அதன் கருவிகளை வெளியிடுகிறது.!

சில சுவாரஸ்யமான தகவல்

சில சுவாரஸ்யமான தகவல்

நோக்கியா 6, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3310 கருவிகள் வெளியாகிவிட்ட நிலையில் நோக்கியா 9 மற்றும் நோக்கியா பி1 ஆகிய கருவிகள் சார்ந்த லீக்ஸ் தகவல்கள் அனுதினமும் வெளியாகிக் கொண்டிருக்க இப்போது நோக்கியா ரசிகர்கள் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை நோக்கியா நிறுவனம் வழங்கி உள்ளது.

ஜூன் மாத வாக்கில்

ஜூன் மாத வாக்கில்

அஜய் மேத்தா (எச்எம்டி நிறுவனத்தின் இந்திய ப்ரெசிடெண்ட் ) கூற்றின்படி நோக்கியா நிறுவனம் அதன் அடுத்த போன்களுக்கான தளத்தில் இறங்கிவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். கூறப்படும் அடுத்த நோக்கியா போன்களின் தொகுப்பானது இந்த ஆண்டின் ஜூன் மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பீச்சர் மொபைல்

பீச்சர் மொபைல்

இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் நோக்கியாவின் அடுத்த கருவிகள் ஆனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களாக மட்டுமின்றி பீச்சர் மொபைல்களும் அடக்கம், அதாவது நோக்கியா 3310 போன்ற கருவிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

11 முதல் 12 மில்லியன்

11 முதல் 12 மில்லியன்

மேலும் மேத்தா, வெளியாகும் பீச்சர் கருவிகள் ஆனது ஒட்டுமொத்த மொபைல் போன் சந்தையின் 55 சதவீதம் ஆக்கிரமிப்பை நிகழ்த்தும் என்றும் கூறியுள்ளார். எதிர்பார்க்கப்படும் நோக்கியா 7 மற்றும் நோக்கியா 8 ஆகிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பெயர்களும் எதிர்பார்ப்பு பாட்டிடலில் இடம்பெறுகின்றன. என்றும் கூறியுள்ளார்.

ஆறு முதல் ஏழு ஆண்ட்ராய்டு

ஆறு முதல் ஏழு ஆண்ட்ராய்டு

முந்தைய வதந்திகளால், இந்த ஆண்டு ஆறு முதல் ஏழு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடும் திட்டத்தில் நோக்கியா நிறுவனம் உள்ளது. மேலும் வெளியான வதந்திகளின்படி அடுத்தது நோக்கியா 9 ஸ்மார்ட்போன் அதிக வாய்ப்பு இருக்கிறது. அக்கருவி சமீபத்திய ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி கொண்ட ஒரு தலைமை ஸ்மார்ட்போனாக வெளியாகலாம்.

நோக்கியா 7 மற்றும் 8

நோக்கியா 7 மற்றும் 8

நோக்கியா 9 மட்டுமினிற் ஸ்னாப்ட்ராகன் 660 சிப்செட் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நோக்கியா 7 மற்றும் நோக்கியா 8 ஆகிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பெயர்களும் எதிர்பார்ப்பு பாட்டிடலில் இடம்பெறுகின்றன.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இனி ஆப்பிள் ஐபாட் பாவம், அறிமுகம் புதிய சோனி இ இன்க் டேப்ளெட்.!

Best Mobiles in India

English summary
Nokia to announce new smartphones and feature phones in Q2 2017. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X