வர்த்தக கூட்டணி ஏற்படுத்தி இருக்கும் நோக்கியா மற்றும் ஐடியா

Posted By: Staff
வர்த்தக கூட்டணி ஏற்படுத்தி இருக்கும் நோக்கியா மற்றும் ஐடியா

நோக்கியா நற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றன. நோக்கியாவின் மியூசிக் மற்றும் அப்ளிகேசன் ஸ்டோர்களுக்கான கேரியர் பில்லிங்கிற்காக இந்த ஒப்பந்தத்தை இந்த இரண்டு நிறுவனங்களும் செய்திருக்கின்றன.

தற்போது வோடோபோன் மற்றும் ஐடியா மட்டுமே மியூசிக் ஸ்டோருக்கான கேரியர் பில்லிங்கை வழங்கும் கேரியர் கூட்டாளிகளாக இருந்து வருகின்றன. ஏர்டெல், ரிலையன்ஸ், ஐடியா மற்றும் வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் நோக்கியா அப் ஸ்டோருக்கான கேரியர் பில்லிங்கை வழங்கி வருகின்றன.

ஐடியா மற்றும் வோடோபோன் ஆகியவற்றின் மியூசிக் கட்டணம் சமமாகவே இருக்கின்றன. இந்த மியூசிக் வசதியைப் பயன்படுத்துவோர் ஒரு வாரத்திற்கு ரூ.50, ஒரு மாதத்திற்கு ரூ.99 மற்றும் 3 மாதங்களுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். அதோடு இந்த இசை பதிவிறக்கம் செய்ய ஆகும் செலவையும் வாடிக்கையாளர்களே செலுத்த வேண்டும்.

நோக்கியா மியூசிக் ஸ்டோர் 4.5 மில்லியன் டிஆர்எம் இலவச பாடல்களை வழங்குகிறது. மேலும் 16 மொழிகளில் உள்ள பாடல்களை வழங்குகிறது. அதோடு ஒவ்வொரு நாளும் 1.4 மில்லியன் பாடல்கள் நோக்கியா மியூசிக் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படுவதாக நோக்கியா தெரிவித்திருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot