Home
News

புதிய நோக்கியா 8 மற்றும் நோக்கியா 9 ஆகியவை ஜனவரி 19 அன்று அறிமுகம்?

By Jijo Gilbert

நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை விற்பனைச் செய்யும் உரிமையை ஹெச்எம்டி க்ளேபல் நிறுவனம் பெற்று ஒரு வருடம் நிறைவடைந்து உள்ளது.

புதிய நோக்கியா 8 மற்றும் நோக்கியா 9 ஆகியவை ஜனவரி 19 அன்று அறிமுகம்?

இந்தத் தருணத்தைக் கொண்டாடும் வகையில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நோக்கியா 9 ஸ்மார்ட்போனை, அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியிட இந்நிறுவனம் முடிவு செய்திருக்கும் ஒரு புத்தம் புதிய தகவலை சீன வெளியீட்டாளரான மைடிரைவர்ஸின் கிஸ்மோசைனா மூலம் தெரியவந்துள்ளது.

இதில் நோக்கியா 9 மட்டுமின்றி, அதனோடு இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போனும் வெளியிடப்படலாம் என்ற ஊகமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எளிய வடிவமைப்பு மற்றும் முன்னணி சிறப்பம்சங்களுடன் கூடிய நோக்கியா 8 ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹெச்எம்டி க்ளேபல் நிறுவனம் அறிவித்தது.

சுமாரான விலை நிர்ணயத்தைப் பெற்றதால், ஒன்பிளஸ் 5டி, சியாமி மி மிக்ஸ் 2 போன்ற மற்ற ஏற்கக்கூடிய முன்னணி தயாரிப்புகளுடன் இந்த ஸ்மார்ட்போன் போட்டியிடுகிறது. இந்நிலையில் நோக்கியா 9ஐ ஒரு உயர் மதிப்பு கொண்ட முன்னணி தயாரிப்பாக முன்நிறுத்தி, சாம்சங் கேலக்ஸி எஸ்8, நோட் 8 மற்றும் எல்ஜி வி30 போன்ற உயர் மதிப்பு மாடல்களுக்கு போட்டியாக நிறுத்த இந்நிறுவனம் முயற்சிப்பதாகத் தெரிகிறது.

மேலும் சிறந்த முன்னணி ஸ்மார்ட்போனாக நோக்கியா 9 மற்றும் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நோக்கியா 8 ஆகிய இரண்டையும் அடுத்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி ஹெச்எம்டி க்ளோபல் அறிமுகம் செய்ய உள்ளதாக மேற்கூறிய அறிக்கையின் மூலம் தெரிகிறது. முன்னதாக வெளியான மற்றொரு அறிக்கையில், ஹெச்எம்டி நிறுவனத்திடம் இருந்து இந்தாண்டு எந்தொரு ஸ்மார்ட்போன் அறிமுகமும் நடைபெறாது என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஊகிப்புகளின்படி, நோக்கியா 9 ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் இரட்டை முனை வளைவை (dual-edge curved) பெற்று, 2கே பகுப்பாய்வு திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மற்றொருபுறம், நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ஒரு முழு திரை வடிவமைப்பைப் பெற்று, 18:9 டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று நம்பப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள், சீன வாடிக்கையாளர்களுக்காக தனிப்பயனாக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்பட்டது.

மேலும் நோக்கியா 9 மற்றும் புதிய நோக்கியா 8 ஆகிய இரண்டிலும் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓஸி மற்றும் இரட்டை பின்பக்க கேமராக்களைப் பெற்றிருக்கும் என்று வதந்திகள் வெளியாகின.

அதே நேரத்தில் மேற்கூறிய இரண்டிலும் ஐபி67 கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் தண்ணீர் மற்றும் மாசு மூலம் உண்டாகும் பாதிப்பில் இருந்து தப்பலாம். மேலும் ஹெச்எம்டி நிறுவனம் மூலம் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 3.5மிமீ ஆடியோ ஜேக் அமைக்க வாய்ப்புள்ளது.

தற்போதைக்கு வெளியாகியுள்ள சில தகவல்களின் அடிப்படையில், நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இரு வகைகளைக் கொண்டதாக அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதில் ஒன்று 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி கொள்ளளவு தன்மையையும் பெற்றதாக அமைந்து, 3699 யென் (ஏறக்குறைய ரூ.36,000) விலை நிர்ணயிக்கப்பட்டதாக இருக்கும்.

மற்றொன்று 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொள்ளளவுத் தன்மை கொண்டு, 4199 யென் (ஏறக்குறைய ரூ.41,000) விலை நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நோக்கியா 8 பொறுத்த வரை, அதன் டிஸ்ப்ளே தவிர மற்ற எதுவும் தெரியவரவில்லை.

Best Mobiles in India

English summary
Nokia 9 and Nokia 8 second-generation model are slated to be launched at an event on January 19, 2018 by HMD.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X