பேரு Nokia 8210 ஞாபகம் இருக்கா? 23 வருடத்திற்கு பிறகு மிரட்டலான புது பொலிவுடன் இந்தியாவில் அறிமுகம்!

|

நோக்கியா பிராண்ட் உரிமம் பெற்ற HMD குளோபல் மூலம் நோக்கியா 8210 4G (Nokia 8210 4G) என்ற புதிய ஃபீச்சர் போன் (feature phone) செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய Nokia 8210 4G சாதனம் புதிய வடிவமைப்பு மறுபாடுகளுடன் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தைக்குள் கால் பதிக்கிறது. இந்த புதிய நோக்கியா 8210 4ஜி மாடல் இரண்டு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 8210 4G இந்தியாவில் அறிமுகம்

நோக்கியா 8210 4G இந்தியாவில் அறிமுகம்

கடந்த மாதம், HMD Global நிறுவனம் நோக்கியா 2660 ஃபிளிப் மற்றும் நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ ஆகிய இரண்டு மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்த பிறகு, இந்த புதிய நோக்கியா 8210 4G மாடலை HMD குளோபல் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 1999 இல் பாரிஸ் பேஷன் வீக்கின் போது அறிமுகப்படுத்தப்பட்ட புகழ்பெற்ற நோக்கியா 8210 ஐக் கௌரவப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

23 வருடங்களுக்குப் பிறகு களமிறங்கும் நோக்கியாவின் பெஸ்ட் போன்

23 வருடங்களுக்குப் பிறகு களமிறங்கும் நோக்கியாவின் பெஸ்ட் போன்

கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு இந்த மாடல் இப்போது மீண்டும் சந்தைப்படுத்தப்படுகிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Nokia 8210 4G மாடல் போன், Unisoc T107 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. நோக்கியா 8210 ஆனது 48MB ரேம் மற்றும் 128MB கொண்ட இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த Nokia 8210 4G டிவைஸ் டூயல் சிம் இணைப்பை ஆதரிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. இந்த டிவைஸ் 32 ஜிபி வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் அம்சத்தையும் ஆதரிக்கிறது.

புதிய Nokia 8210 4G டிவைஸில் என்ன ஸ்பெஷல்?

புதிய Nokia 8210 4G டிவைஸில் என்ன ஸ்பெஷல்?

இந்த புதிய Nokia 8210 4G டிவைஸ் அதன் வகையான நீக்கக்கூடிய பேட்டரி உடன் வருகிறது. இந்த சாதனம் மற்றும் 0.3 மெகாபிக்சல் கொண்ட ஒற்றை பின்புற கேமரா சென்சார் உடன் வருகிறது. இந்த புதிய நோக்கியா 8210 4ஜி மாடலில் உள்ள முக்கியமான சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றென்று நாம் கூறலாம். Nokia 8210 ஆனது வயர்லெஸ் FM ஸ்ட்ரீமிங் ஆதரவை வழங்குகிறது. இந்த புதிய டிவைஸ் MP3 பிளேயரையும் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

27 நாட்கள் நீடிக்கும் பேட்டரி சக்தியா?

27 நாட்கள் நீடிக்கும் பேட்டரி சக்தியா?

புதிய ஃபீச்சர் போன் 1,450எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது, இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 27 நாட்கள் ஸ்டான்பை நேரத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பேக்கப்பை விட, ஃபீச்சர் போன்களின் பேட்டரி ஆயுள் மிகவும் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தடையில்லாத இணைப்பு அம்சம் வேண்டும் என்பவர்களுக்கு, சார்ஜ்ர்களை அடிக்கடி கையில் எடுக்க பிடிக்காத நபர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.

இந்தியாவில் நோக்கியா 8210 4ஜி விலை என்ன?

இந்தியாவில் நோக்கியா 8210 4ஜி விலை என்ன?

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய நோக்கியா 8210 4ஜி மாடலின் விலை இந்தியாவில் ரூ. 3,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டார்க் ப்ளூ மற்றும் ரெட் ஆகிய இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கிறது. தற்போது, இந்த நோக்கியா 8210 4ஜி மாடல் மொபைல் போன், நோக்கியாவின் இந்தியா இணையதளம் மற்றும் அமேசான் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கிறது. Nokia நிறுவனம் இந்த போனின் மீது ஒரு வருட மாற்று உத்தரவாதத்தை வழங்குகிறது.

இந்தியாவின் முதல் 'அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில்' ரெடி! எங்கிருந்து எங்கு வரை செல்கிறது தெரியுமா?இந்தியாவின் முதல் 'அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில்' ரெடி! எங்கிருந்து எங்கு வரை செல்கிறது தெரியுமா?

நோக்கியா 8210 4ஜி சிறப்பம்சம்

நோக்கியா 8210 4ஜி சிறப்பம்சம்

Nokia 8210 4G ஆனது இரட்டை சிம் ( நானோ ) ஆதரவுடன் வருகிறது. இந்த புதிய நோக்கியா 8210 4ஜி மொபைல் போன் Series 30+ இயங்குதளத்தில் இயங்குகிறது. புதிய நோக்கியா 8210 4ஜி ஃபீச்சர் போன் 2.8' இன்ச் அளவு கொண்ட QVGA டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த புதிய சாதனம் Unisoc T107 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. நோக்கியா 8210 4ஜி டிவைஸ் 128MB ரேம் மற்றும் 48MB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் ஸ்டோரேஜை 32ஜிபி வரை விரிவாக்கக் கூடிய ஆதரவும் இதில் உள்ளது.

நோக்கியா 8210 4ஜி போனின் கேமரா

நோக்கியா 8210 4ஜி போனின் கேமரா

நோக்கியா 8210 4ஜியின் பின்புறத்தில் 0.3 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. இது வயர்டு மற்றும் வயர்லெஸ் பயன்முறையுடன் கூடிய எஃப்எம் ரேடியோ மற்றும் எம்பி3 பிளேயரையும் கொண்டுள்ளது. இது 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் மைக்ரோ-USB போர்ட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Nokia 8210 4G ஃபீச்சர் போன் ஆனது 1,450mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

உலகம் அழியும் போது மனிதர்களின் கடைசி செல்பி இப்படி தான் இருக்குமா? Ai வெளியிட்ட பயங்கரமான படங்கள்!உலகம் அழியும் போது மனிதர்களின் கடைசி செல்பி இப்படி தான் இருக்குமா? Ai வெளியிட்ட பயங்கரமான படங்கள்!

யாருக்கெல்லாம் இந்த நோக்கியா 8210 4ஜி மாடல் பெஸ்ட்?

யாருக்கெல்லாம் இந்த நோக்கியா 8210 4ஜி மாடல் பெஸ்ட்?

இது 4G நெட்வொர்க்கில் 6 மணிநேர டாக் டைம் நேரத்தை வழங்குகிறது. அதேபோல், 27 நாட்கள் வரை ஸ்டான்பை நேரத்தையும் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. 4ஜி இணக்கத்துடன் கம்மி விலையில், நீடுது நிலைக்கும் பேட்டரி உடன் ஒரு புதிய டிவைஸை நீங்கள் வாங்க நினைக்கிறீர்கள் என்றால் இந்த நோக்கியா 8210 4ஜி மாடல் உங்களுக்கானது தான். அமேசான் இல் அடுத்து நடக்கவிருக்கும் சிறப்பு விற்பனை தினங்களில் இதன் விலை இன்னும் கணிசமாக குறைய அதிக வாய்ப்புள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 8210 4G VoLTE feature phone with wireless FM Radio launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X