"வாழைப்பழ போன்" எனப்படும் நோக்கியா 8110 4ஜி சாதனத்தில் வாட்ஸ்ஆப் ஆதரவு.!

நோக்கியா 8110 மொபைலில், 2.4' இன்ச் QVGA வளைந்த டிஸ்பிளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.

|

"வாழைப்பழ போன்" எனப்படும் நோக்கியா 8110 4ஜி சாதனம் ஜியோபோனுக்கு போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது, நோக்கியா 8110 4ஜி மாடல் அறிமுகம் செய்யும்போது வாட்ஸ்ஆப் வசதி வழங்கப்படவில்லை, ஆனால் தற்சமயம் இந்த போன் மாடலுக்கு வாட்ஸ்ஆப் வசதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக நோக்கியா 8110 4ஜி சாதனத்தை ரூ.4,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

நோக்கியா 8110 மொபைலில், 2.4' இன்ச் QVGA வளைந்த டிஸ்பிளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. நோக்கியா 8110 இல் வழங்கப்பட்டுள்ள ஸ்லைடரை பயன்படுத்தி அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் முடியும்.

 ஸ்னாப்டிராகன் 205

ஸ்னாப்டிராகன் 205

நோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட டூயல்- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் பனானா போன் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அதன் எல்லோ கலர் மற்றும் அதன் வடிவம் தான் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"ஸ்னேக் கேம்"

நோக்கியா 8110 4ஜி மொபைலில் பேஸ்புக், டிவிட்டர், கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளின் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளது. நோக்கியாவின், இன்னொரு அடையாளமான "ஸ்னேக் கேம்" புது பொலிவுடன் இந்த மொபைலில் களமிறங்கியுள்ளது.

 நோக்கியா 8110 4ஜி விபரக்குறிப்பு:

நோக்கியா 8110 4ஜி விபரக்குறிப்பு:

- 2.4' இன்ச் கொண்ட 320x24 பிக்சல் உடைய QVGA டிஸ்பிளே - 512 எம்.பி. ரேம்
- 4 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் ஆக்டா கோர் குவால்காம் 205 சிப்செட் - அட்ரினோ 304 GPU
- கை ஓ.எஸ் இயங்குதளம்
- 2 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- எல்.இ.டி பிளாஷ்
- டூயல் சிம் ஸ்லாட்
- 4ஜி வோல்ட்இ
- வைபை
- ப்ளூடூத்
- யு.எஸ்.பி 2
- 2000 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Nokia 8110 4G with KaiOS now has WhatsApp support: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X