Home
News

"வாழைப்பழ போன்" எனப்படும் நோக்கியா 8110 (2018); இந்திய வருகை எப்போது?

நோக்கியா 8110 (2018) சாதனம் பொறுத்தவரை இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, அதன்படி 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் எ205 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும்.

By Prakash S

எச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் நோக்கியா 8110 4ஜி சாதனத்தை வரும் மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் அடுத்த மாதம் நோக்கியா 1, நோக்கியா 6(2018), நோக்கியா 7 பிளஸ் நோக்கியா 8 சிரோக்கோ போன்ற அனைத்து மாடல்களையும் விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியா இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5,000-வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு நோக்கியா 6(2018) மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் முறையே ரூ.16,999 மற்றும் 25,000-வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போனின் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கும்.

 நோக்கியா 8110:

நோக்கியா 8110:

வாடிக்கையாளர்களுக்க தகுந்தபடி இந்த நோக்கியா 8110 சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல்தெரிவித்துள்ளது, அதன்பின்பு புதுமையான தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த சாதனம் வெளிவருவாதல் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நோக்கியா 8110 ஆனது கண்டிப்பாக கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் வரும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேவிகேஷன் பொத்தான்கள்:

நேவிகேஷன் பொத்தான்கள்:

எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில், இந்த சாதனம் தொடுதிரை அம்சங்களை கொண்டு வெளிவராது, எனவே நேவிகேஷன் பொத்தான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 குவால்காம்:

குவால்காம்:

நோக்கியா 8110 (2018) சாதனம் பொறுத்தவரை இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, அதன்படி 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் எ205 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இக்கருவி.

 சேமிப்பு:

சேமிப்பு:

512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் அதன்பின்பு வைஃபை 802.11, ஹாட்ஸ்பாட், எஃப்எம் ரேடியோ, டூயல்-சிம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கேமரா:

கேமரா:

நோக்கியா 8110 (2018) சாதனத்தில் 2எம்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஸ்மார்ட் பீச்சர் ஓஎஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த 4ஜி சாதனம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
விலை:

விலை:

ட்விட்டர், கூகுள் மேப்ஸ், பேஸ்புக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களுடன் வெளிவரும் நோக்கியா 8110 (2018) சாதனம், மேலும்
இக்கருவியின் விலைமதிப்பு ரூ.6,285 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 8110 4G Feature Phone to Launch in May With Bundled Tariffs ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X