2.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 8110 (2018).!

நோக்கியா 8110 (2018) சாதனத்தில் 2எம்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஸ்மார்ட் பீச்சர் ஓஎஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த 4ஜி சாதனம்.

|

நோக்கியா நிறுவனம் விரைவில் நோக்கியா 8110 என்ற 4ஜி சதானத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி இக்கருவி பார்சிலோனாவில் நிகழ்ந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா 8110 மொபைல்.

2.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 8110 (2018).!

வாடிக்கையாளர்களுக்க தகுந்தபடி இந்த நோக்கியா 8110 சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல்தெரிவித்துள்ளது, அதன்பின்பு புதுமையான தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த சாதனம் வெளிவருவாதல் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நோக்கியா 8110 ஆனது கண்டிப்பாக கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் வரும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 சிறிய வடிவமைப்பு:

சிறிய வடிவமைப்பு:

நோக்கியா 8110 ஆனது மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் போன் ஆகும். மேலும் அசத்தலான வளைவு மற்றும் மிகச்சிறிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது இக்கருவி. அதன்பின்பு 2.4-இன்ச் டிஸ்பிளே மற்றும் 240x320 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த சாதனம்.

 நேவிகேஷன் பொத்தான்கள்:

நேவிகேஷன் பொத்தான்கள்:

எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில், இந்த சாதனம் தொடுதிரை அம்சங்களை கொண்டு வெளிவராது,
எனவே நேவிகேஷன் பொத்தான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

குவால்காம்:

குவால்காம்:

நோக்கியா 8110 (2018) சாதனம் பொறுத்தவரை இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, அதன்படி 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் எ205 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இக்கருவி.

சேமிப்பு:

சேமிப்பு:

512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் அதன்பின்பு வைஃபை 802.11, ஹாட்ஸ்பாட், எஃப்எம் ரேடியோ, டூயல்-சிம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

நோக்கியா 8110 (2018) சாதனத்தில் 2எம்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஸ்மார்ட் பீச்சர் ஓஎஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த 4ஜி சாதனம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை:

விலை:

ட்விட்டர், கூகுள் மேப்ஸ், பேஸ்புக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களுடன் வெளிவரும் நோக்கியா 8110 (2018) சாதனம், மேலும்
இக்கருவயின் விலைமதிப்பு ரூ.6,285 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 8110 2018 First Impressions ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X