இந்த Nokia போனுக்கு தான் வெயிட்டிங்.. பெரிய டிஸ்பிளே.. மெகா சைஸ் பேட்டரி உடன் அறிமுகம்..
நோக்கியா (Nokia) நிறுவனம் புதிதாக நோக்கியா 7610 மினி 5ஜி 2023 (Nokia 7610 Mini 5G 2023) என்ற அட்டகாசமான ஸ்மார்ட்போன் சாதனத்தை வெளியிடவுள்ளது. இதன் வெளியீட்டு தேதி, விலை, முழு விவரக்குறிப்புகள் பற்றிய விபரங்கள் இங்கே.
நோக்கியா 7610 மினி 5ஜி மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது விரைவில் வெளியிடப்படும் 5G ஆதரவு ஸ்மார்ட்போன் ஆகும். எனவே, இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகள், மற்றும் பிற அம்சங்களை நாங்கள் வழங்குகிறோம். இந்த ஸ்மார்ட்போன் பல நாடுகளில் விரைவில் வெளியிடப்படும்.

நோக்கியா 7610 மினி 5ஜி 2023 விரைவில் வெளியிடப்பட உள்ளது. போனின் சமீபத்திய லீக் தகவல்கள் மக்களின் ஹைப்பை இன்னும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது பல அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் பெரிய ஸ்டோரேஜ் மற்றும் கூடுதல் ரேம் உடன் வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மொபைலில் சிறந்த கேமரா மற்றும் பேட்டரி பேக்கப் உள்ளது.
நோக்கியா 7610 மினி 2023 5ஜி ஸ்மார்ட்போன் (Nokia 7610 Mini 2023 5G Smartphone) ஆனது டூயல் (Dual) 64MP + TOF 3D கேமரா, 48 MP முன்பக்கம் செல்பி கேமரா, 12ஜிபி /16ஜிபி ரேம், மிகப்பெரிய பேட்டரியாக 6800mAh பேட்டரி போன்ற பல அம்சங்களுடன் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நோக்கியா 7610 மினி 5ஜி ஸ்மார்ட்ஃபோன் செப்டம்பர் 3 ஆம் தேதி அன்று வெளியிடப்படும்.
இது நோக்கியா 7610 மினியின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியாகும். இது நம் நாட்டில் பின்னர் வெளியிடப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் அதிவேக தரவு வேகத்திற்கான 5G நெட்வொர்க் உட்பட சில ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் வருகிறது. இந்த சாதனம் ஒரு பெரிய 6.9' இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது வீடியோக்களைப் பார்ப்பதற்கு அல்லது கேம்களை விளையாடுவதற்கு ஏற்றதாக அமைகிறது.

கூடுதலாக, டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 256ஜிபி /512ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் உடன் வருகிறது. Nokia 7610 Mini 5G ஆனது உயர்நிலை ஆண்ட்ராய்டு ஃபோனைத் தேடும் பயனர்களிடையே நிச்சயம் பிரபலமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த சக்திவாய்ந்த சாதனத்திலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்? இது GSM / CDMA / HSPA / LTE / 5G இணக்கத்துடன் வருகிறது. இது டூயல் நானோ சிம் உடன் வரும்.
இதன் டிஸ்பிளே சூப்பர் AMOLED, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது QWERTY டச் பேட் உடன் வெளிவர வாய்ப்புள்ளது. இதன் சிப்செட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 (Qualcomm Snapdragon 8 Gen 1) உடன் வெளிவரும். இது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வருகிறது. இது பாஸ்ட் பேட்டரி சார்ஜிங் 4.0+ உடன் வெளிவரும். நீண்ட எதிர்பார்ப்புடன் இருக்கும் அம்சமான வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு.
USB 4.0 அம்சத்துடன் வருகிறது. IP69 சான்றளிக்கப்பட்டது தண்ணீரில் 2 மணிநேரம் வரை 2மீ ஆழத்தில் இயங்க கூடியது. நோக்கியா 7610 மினி 2023 விலை பற்றி பேசுகையில், இது அமெரிக்க மக்களுக்கு $799 டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும். இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ.66,000 இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








