ஆண்ட்ராய்ட் O மற்றும் ஆண்ட்ராய்ட் P ஓஎஸ் உடன் வெளிவரவுள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

நோக்கியா வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அந்நி'றுவனம் வெளியிட்டுள்ளது. அதுதான் நோக்கியா மாடல்களில் ஆண்ட்ராய்ட் ஓஎஸ் அப்டேட் செய்யப்படவுள்ளது என்ற அறிவிப்பு. ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் செய்யப்படுவது மட்டுமின்றி மாதாந்திர பாதுகாப்பு நடவடிக்கைக்கும் அந்நிறுவனம் உத்தரவாதம் தருகிறது.

ஆண்ட்ராய்ட் O மற்றும் ஆண்ட்ராய்ட் P ஓஎஸ் உடன் வெளிவரவுள்ள நோக்கியா ஸ்ம

நோக்கியாவின் மார்க்கெட்டிங் நிறுவனமான HMD சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 மாடல்கள் உள்பட அனைத்து நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்ட் O என்ற ஓஎஸ் அப்டேட் செய்யபடும் என்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே நோக்கியாவின் மாடல்களில் ஆண்ட்ராட்ய் 7.1.1 நெளகட் அப்டேட் செய்யப்பட்டிருப்பதும் அவை கடந்த மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் மார்க்கெட்டில் கிடைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நோக்கியா நிறுவனம் தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றையும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்ட் ஓ அப்டேட் செய்யப்படுவது மட்டுமின்றி ஆண்ட்ராய்ட் P அம்சமும் இடம் பெறவுள்ளது.

ஆண்ட்ராய்ட் P வரும் 2018ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள டெக்னாலஜி ஆகும். சமீபத்தில் நடந்த MWC கூட்டத்தில் கூட நோக்கியா நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வருட இறுதிக்குள் நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் மாடல்களில் ஆண்ட்ராய்டு ஓ அப்டேட் செய்யப்படும் என்றும், ஆண்ட்ராய்ட் P அடுத்த வருடத்திற்குள் அப்டேட் செய்யப்படும் என்றும் தெரிகிறது.

நீங்கள் ஒரு சிறந்த அப்டேட் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனை பெற வேண்டுமானால் நோக்கிய ஆண்ட்ராய்ட் அப்டேட் செய்யப்பட்ட போனை பெற இன்னும் இரண்டு வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
HMD Global has confirmed that the Nokia 6, Nokia 5 and Nokia 3 Android smartphones will receive Android O and Android P updates.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X