மிரட்டலான நோக்கியா 6 விற்பனை இன்று தொடங்குகிறது.!
நோக்கியா 6 பொருத்தவரை 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கைரேகை ஸ்கேனர் இவற்றில் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த வருட இறுதியில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் மிரட்டலான நோக்கியா 6 ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருகிறது, இன்று மதியம் 12மணி முதல் இதன் விற்பனை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த நோக்கிய 6 ஸ்மார்ட்போன்.
இன்று காலை 11.50-மணி முதல் அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய முயன்றால் மிக எளிமையாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10நிமிடங்களுக்கு முன்பே இவற்றின் விற்பனை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் வலைதளத்தில் உங்களுக்கு இருப்புதொகை இருந்தால் அவற்றைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதன்பின் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே பெயர், முகவரி,பணம் செலுத்தும் விவரங்கள் போன்ற விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு எளிமையாக முன்பதிவு செய்யமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஒஎஸ் செயலி இடம்டபெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

கைரேகை ஸ்கேனர்:
நோக்கியா 6 பொறுத்தவரை 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கைரேகை ஸ்கேனர் இவற்றில் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3ஜிபி ரேம் ;
இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்டுள்ளது, அதன்பின்பு மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி இவற்றில்உள்ளது,பல்வேறு இணைப்பு சாதனங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
இதன் கேமரா வடிவமைப்பில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது, நோக்கிய 6 பிரைமரி கேமரா பொருத்தவரை 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, அதன்பின்பு செல்பீ கேமரா 8மெகாபிக்சல் ஆக உள்ளது.

பேட்டரி:
நோக்கிய 6 3000எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி கொண்டுள்ளது, இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

விலை:
நோக்கிய 6 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications