Home
News

அறிமுகம் : ஆண்ட்ராய்டு நோக்கியா 6, என்ன விலை, என்னென்ன சிறப்பம்சங்கள்?

எந்த முழக்கமும் இல்லாமல், எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அதன் வலைத்தளத்தின் அறிவிப்பு ஒன்றின் மூலமாக நோக்கியா 6 கருவியை வெளியிட்டுள்ளது.

By Muthuraj

இந்த 2017-ஆம் ஆண்டு முன்னாள் நோக்கியா வாசிகளுக்கான ஆண்டு என்பதில் சந்தேகமே வேண்டாம். நாம் அனைவரும் நன்கு அறிந்தப்படி இந்த 2017-ஆம் ஆண்டில் நோக்கியா நிறுவனம் எச்எம்டி க்ளோபல் நிறுவனத்துடன் இணைந்து நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளை வெளியிடுகிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பிற ஆண்ட்ராய்டு கருவி உற்பத்தியாளர்களும் சேர்ந்து நோக்கியாவின் மறுவருகைக்காக காத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் எச்எம் டி க்ளோபல் நிறுவனம் - அதாவது இப்போது நோக்கியா பிராண்ட் உரிமைகளை வைத்துள்ள நிறுவனம் - நோக்கியா 6 என்ற ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட்ட்டுள்ளது.

சரி, இக்கருவியின் விலை மற்றும் அம்சங்கள் என்னென்ன..? எங்கு கிடைக்கும் போன்ற விரிவான தகவல்களை உள்ளடிக்கிய தொகுப்பே இது.

நோக்கியா 6

நோக்கியா 6

பிற நிறுவன ஸ்மார்ட்போன் அறிமுக விழா போன்ற எந்த முழக்கமும் இல்லாமல், எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அதன் வலைத்தளத்தின் அறிவிப்பு ஒன்றின் மூலமாக நோக்கியா 6 கருவியின் வெளியீட்டை அறிவித்தது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மூலம் இயங்கும் இக்கருவி 2.5டி கொரில்லா கண்ணாடி கொண்டு மூடப்பட்டிருக்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

உடன் இந்த நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்புடன் இணைந்து க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

3000எம்ஏஎச் பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி

ஒரு நீக்கமுடியாத 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவி ஒரு இரட்டை சிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். 6000 தொடர் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யூனிபாடி நோக்கியா 6 கருவியின் ஹோம் பட்டனில் ஒரு பதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.

கேமிரா

கேமிரா

ஆட்டோ ஃபோகஸ் மற்றும் இரட்டை-டோன் ஃபிளாஷ், எப்/2.0 கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமிரா அத்துடன் எப்/2.0 கொண்ட செல்பீகளுக்கான 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளத்து. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான ஒலிக்கான டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் மற்றும் 'டூவல் ஸ்பீக்கர்ஸ்' கொண்டுள்ளது. இக்கருவியின் மென்பொருள் அம்சங்கள் சார்ந்த தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில்

இந்தியாவில்

நோக்கியா 6 அக்கருவி சுமார் ரூ.16,750/- என்ற விலையில் தற்போது சீனாவில் மட்டுமே, அதுவும் ஜேடி.காம் என்ற வலைத்தளம் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. இந்தியாவில் 2017-ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதாவது ஜூன் மாதத்திற்குக்குள் வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கிடைக்கும் மிகச் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
Nokia 6 Android Phone Launched: Price, Specifications, Release Date, and More. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X