Home
News

நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1.!

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/ 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் இப்போது புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி அந்நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6.1 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் முறையே அதன் உண்மை விலை ரூ.16,999 மற்றும் ரூ.18,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,499 மற்றும் ரூ.17,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 6.1

நோக்கியா 6.1

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 630

ஸ்னாப்டிராகன் 630

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்.

 மெமரி

மெமரி

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/ 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

கேமரா

இந்த நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிளாக், வைட், புளு போன்ற நிறங்களில் இந்த நோக்கியா6.1 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Nokia 6.1 receives a price cut in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X