மீண்டும் நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.!
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் மீண்டும் தனது நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது, அதன்படி நோக்கியா 5.1 (3ஜிபி ரேம்;) பிளஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.10,599-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,749-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பின்னர் நோக்கியா 6.1 பிளஸ் (4ஜிபி ரேம்) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,749-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 6.1 பிளஸ் டிஸ்பிளே:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது

நோக்கியா 5.1 பிளஸ் டிஸ்பிளே:
இக்கருவி 5.86-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

பேட்டரி
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, வைஃபை,ப்ளூடூத் வி4.2, 3.5எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications