போனுக்குள்ள இயர்போனா? அம்மாடியோவ்! Nokia -வின் இந்த மாடல் போனில் இவ்வளவு டிவிஸ்ட்-ஆ

|

உலகமே நத்திங் போன் 1 (Nothing Phone 1) டிவைஸ் பற்றியும், அதன் மிரட்டலான டிசைன் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், ''நாங்களும் ஒன்னும் சும்மா இல்ல, எங்ககிட்டையும் கெத்து காட்டும் வகையில் புது டிசைன் மொபைல் போன்கள் எல்லாம் இருக்கிறது'' என்பதை நிரூபிக்கும் விதத்தில் Nokia நிறுவனமும் சில நம்ப முடியாத சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், இப்படி ஒரு புதுவிதமான டிசைனை இதுவரை எந்த நிறுவனமும் செய்திருக்கவில்லை.

போனுக்குள்ள இயர்போன்ஸ் இருந்து பார்த்திருக்கீங்களா?

போனுக்குள்ள இயர்போன்ஸ் இருந்து பார்த்திருக்கீங்களா?

ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ்களை (TWS) எப்பொழுதும் நாம் ஒரு சிறிய கேஸுக்குள் தானே பார்த்திருக்கிறோம். எப்போதாவது TWS இயர்பட்ஸ்களை ஒரு மொபைல் போனிற்குள் வைத்து சார்ஜ் செய்வது போல் யோசனை செய்து பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால், இதோ இப்போது நேரடியாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நோக்கியா நிறுவனம் TWS கேஸை ஏன் ஒரு போனாக மாற்றக்கூடாது? என்று மாற்றி யோசித்து இந்த புதிய Nokia 5710 XpressAudio டிவைஸை உருவாக்கியுள்ளது.

புதிய Nokia 5710 XpressAudio மொபைல் போன்

புதிய Nokia 5710 XpressAudio மொபைல் போன்

HMD குளோபலின் மிரட்டலான புதிய 'மாற்றி யோசி' சிந்தனை இதுதான். நோக்கியாவின் ஆர்கைவில் இருந்து இன்றைக்கு மீண்டும் ஒரு புதிய மறுவடிவமைப்பை பெற்றிருக்கும் ரெட்ரோ கிளாசிக் டிவைஸ் சாதனம் தான் இந்த புதிய Nokia 5710 XpressAudio மொபைல் போன். பார்ப்பதற்கே வித்தியாசமாக இருப்பதுடன், உலக ஸ்மார்ட்போன் பயனர்களின் கவனத்தை இந்த டிவைஸ் இப்போது தன்வசம் ஈர்த்துள்ளது. நோக்கியா ரசிகர்களுக்கு இது டபுள் சந்தோஷத்தை உருவாக்கியுள்ளது.

ஸ்லைடு-டவுன் பேனலுடன் உள்ளே இயர்பட்ஸ் சார்ஜிங்

ஸ்லைடு-டவுன் பேனலுடன் உள்ளே இயர்பட்ஸ் சார்ஜிங்

இந்த புதிய நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ மொபைல் போன், பின்புறத்தில் ஸ்லைடு-டவுன் பேனலுடன் சாதாரண தோற்றமுடைய ஒரு ஃபீச்சர் போனைப் போல் காட்சியளிக்கிறது. ஆனால், இந்த டிவைஸில் இருக்கும் டிவிஸ்ட்டே இந்த ஸ்லைடரின் பின்பக்கம் ஒளிந்துள்ளது. இதைத் திறக்கும் போது TWS இன் ஒரு ஜோடி இயர்பட்ஸ் கருவிகள் வெளிப்படுத்துகிறது. இந்த இயர்பட்ஸ்களை போனுக்குள் வைக்கும் போது இவை சார்ஜ் செய்யப்படும் படி நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது.

Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!

மியூசிக் பிரியர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா XpressMusic மாடல்

மியூசிக் பிரியர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா XpressMusic மாடல்

நிச்சயமாக இதுவரை நாம் பார்த்த மிகவும் அசாதாரணமான போன் டிசைன்களில் இது தனித்துவமான ஒன்றாகும். HMD குளோபல் நிறுவனம், பல தசாப்தங்களுக்கு முன்னாள் இருக்கும் மறந்துபோன கிளாசிக் போன்களில் வேடிக்கையான திருப்பங்களைக் கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நோக்கியா XpressMusic மாடல் மொபைலை நிறுவனம் 2000-களின் நடுப்பகுதி முதல் இறுதி வரையிலான காலகட்டத்தில் மியூசிக் பிரியர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட மாடலாகும்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு புது டிஸைனுடன் அறிமுகம்

22 ஆண்டுகளுக்குப் பிறகு புது டிஸைனுடன் அறிமுகம்

Nokia 5710 XpressAudio மொபைலின் பாடியில், மியூசிக் பிளேயரை கட்டுப்படுத்தும் பிஸிக்கல் கீஸ்-களை நிறுவனம் வழங்கியிருந்தது. நோக்கியா ரசிகர்களுக்கு இந்த 5710 XpressAudio மொபைல் ஒரு மியூசிக் கேட்ஜெட்டாக காட்சியளித்தது. இப்போது, நோக்கியா நிறுவனம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மொபைல் போனிற்கு ஒரு புது வடிவத்தை வழங்கியுள்ளது. போனுக்குள் TWS இயர்பட்ஸ்களை வைத்து ஸ்மார்ட்போன் பிரியர்களின் கவனத்தை நோக்கியா இப்போது ஈர்த்துள்ளது.

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

இந்த TWS இயர்பட்ஸ் எவ்வளவு நேரம் சார்ஜ் நிற்கும்?

இந்த TWS இயர்பட்ஸ் எவ்வளவு நேரம் சார்ஜ் நிற்கும்?

Nokia 5710 XpressAudio மொபில் உடன் வழங்கப்பட்டிருக்கும் TWS இயர்பட்ஸ்களை போனில் இருந்து நீக்கிவிட்டால் சுமார் இரண்டரை மணிநேரம் வரை இவற்றைப் பயன்படுத்த முடியும். மொபைல் உடன் வைத்து சார்ஜ் செய்து பயன்படுத்தினால் 4 மணி நேரம் வரை இவற்றை நீங்கள் பயன்படுத்த முடியும். இதை மொபைலில் இருந்து சார்ஜ் செய்யும் பட்சத்தில், போனின் பேட்டரி ஆயுள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பற்றிய தகவல்களை HMD நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இது ஸ்மார்ட்போன் இல்லையா? அப்போ?

இது ஸ்மார்ட்போன் இல்லையா? அப்போ?

உங்களிடம் சார்ஜர் இருக்கும் வரை இதைப் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. போனுடன் வழங்கப்படும் இந்த TWS இயர்பட்ஸ்களை உயர்-ஸ்பெக் அம்சத்துடன் எதிர்பார்க்க வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதில் நாய்ஸ் கான்சலேஷன் (ANC) போன்ற அம்சங்களை எதிர்பார்க்க முடியாது. காரணம், இந்த நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ டிவைஸ் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, இந்த Nokia 5710 XpressAudio ஒரு ஃபீச்சர் ஃபோன் மாடலாகும்.

இந்த 6 விஷயம் தெரியாம Washing Machine வாங்காதீங்க! டாப் or ஃபிரண்ட் லோட்! எது பெஸ்ட்?இந்த 6 விஷயம் தெரியாம Washing Machine வாங்காதீங்க! டாப் or ஃபிரண்ட் லோட்! எது பெஸ்ட்?

புதிய நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ சிறப்பம்சம்

புதிய நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ சிறப்பம்சம்

இது ஒரு ஸ்மார்ட்போன் மாடல் அல்ல என்பதை மறக்காதீர்கள். இந்த நோக்கியா டிவைஸ், நோக்கியாவின் S30+ சாப்ட்வேர் மூலம் இயக்குகிறது. இது Unisoc T107 சிப்செட் உடன் இணைந்து இயங்கும் ஒரு 4G மோடம்-ஐ கொண்டுள்ளது. இந்த புதிய நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ டிவைஸ் 2.4' இன்ச் கொண்ட QVGA டிஸ்பிளே உடன் வருகிறது. இதன் பின்புறத்தில், VGA கேமரா மற்றும் உடலில் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது. இந்த போன் 1,450mAh பேட்டரி உடன் வருகிறது. இது மிகவும் சிறிய திறன் கொண்டதாக உங்களுக்குத் தோன்றலாம்.

என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

ஆனால், 4G நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் போது 20 நாட்களுக்கு மேல் இது நீடிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய Nokia 5710 Xpressaudi ஃபீச்சர் ஃபோன், இந்த ஜூலை மாதத்தில் UK இல் ரெட் / பிளாக் அல்லது ரெட் / வைட் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இவை வெறும் 75 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு (சுமார் $90) வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இதன் விலை சுமார் ரூ. 7178 என்ற புள்ளியில் வருகிறது.

2022ல் நோக்கியா அறிமுகம் செய்யும் மற்ற போன் மாடல்கள் இது தானா?

2022ல் நோக்கியா அறிமுகம் செய்யும் மற்ற போன் மாடல்கள் இது தானா?

நீங்கள் ஒரு வயர்லெஸ் இயர்பட்களை வாங்க எண்ணம் இருந்தால், அதை ஒரு புதிய போன் உடன் பெறுவது சிறப்பானது தானே. அப்படி ஒரு விருப்பத்தை இப்போது நோக்கியா மட்டுமே வழங்குகிறது என்பதால் இது ஒரு சிறந்த ஒப்பந்தம் தான். Nokia 5710 XpressAudio உடன் சேர்த்து நிறுவனம் இன்னும் மூன்று புதிய ஃபியூச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்கிறது. அதில் ஒரு மாடல் பிலிப் மொபைல் போன் மாடலாகும். மற்றொரு மாடல் சாதாரண மொபைல் மாடலாகும். இத்துடன் நிறுவனம் ஓவர் டேப்லெட் சாதனத்தையும் வெளியிடவுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 5710 XpressAudio Phone Has a Pair Of True Wireless Earbuds Inside

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X