Home
News

மார்ச் 19: மிரட்டலான நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 19-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவரும்.

நோக்கியா 5.2

நோக்கியா 5.2

மேலும் நோக்கியா 5.2 சாதனம் மார்ச் 19 அன்று லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்யப்படும் எனத்தகவல் வெளிவந்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வின் போது நோக்கியா 8.2 5ஜி, நோக்கியா 5.2, நோக்கியா 1.3 மற்றும் ஒரிஜினல் சீரிஸ் பீச்சர் போன் ஆகியவைகள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் ஆனர் 3ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஆக்டோ-கோர்பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவரும். மேலும் இந்த சாதனத்தில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இடம்பெற்றுள்ளதால்இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு

மேலும் நோக்கியா 5.2 புகைப்படம் ஆனது, அடிவாரத்தில் நோக்கியா பிராண்டிங் பொறிக்கப்பெற்ற வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு இடம்பெறும் என்பதை காட்டுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் குவாட்-கேமரா அமைப்பு மற்றும்அதற்கு கீழே நோக்கியா பிராண்ட்டிங் உடனான கைரேகை சென்சார் இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

6.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளே

6.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளே

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 16மெகாபிக்சல் முதன்மை கேமராவு

16மெகாபிக்சல் முதன்மை கேமராவு

வெளிவந்த தகவலின் அடிப்படையில் நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனில் 16மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் 8 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை சென்சார் வசதியும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3500எம்ஏஎச் பேட்டரி

3500எம்ஏஎச் பேட்டரி

மேலும் 8எம்பி செலபீ கேமரா ஆதரவும், 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவும் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.13,300-விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 5.2 spotted on Geekbench Expected Specs and Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X