அடுத்தப்படியாக நோக்கியா 4, 7 பிளஸ் மற்றும் 1 அறிமுகம்: நோக்கியா கேமரா அப்

|

கடந்த 2017 ஆம் ஆண்டு நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, நோக்கியா 8, நோக்கியா 7 மற்றும் நோக்கியா 2 என்று ஒரு நீண்ட வரிசையிலான ஸ்மார்ட்போன்களை ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டது.

அடுத்தப்படியாக நோக்கியா 4, 7 பிளஸ் மற்றும் 1 அறிமுகம்: நோக்கியா கேமர

இந்நிலையில் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 6 (2018) ஆகியவற்றை இந்நிறுவனம் இந்த மாதம் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இரண்டு மாடல்களின் அறிமுகம் குறித்து மட்டுமே தெரியவந்துள்ளது. ஆனால் 2018-ல் கூடுதல் ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்யாது என்று கூற முடியாது.

சமீபத்தில் நோக்கியா கேமரா அப் மூலம் கசிந்த தகவலும், இதையே குறிப்பிடுகிறது. சீன வெளியீட்டாளரான ஐடிஹோம், கிஸ்மோசைனா மூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நோக்கியா கேமரா அப்பின் ஏபிகே மூலம் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில ஃபோன்கள் ஏற்கனவே ஹெச்எம்டி மூலம் அறிமுகம் செய்யப்பட்டாலும், சில இன்னும் வெளிவர வேண்டியுள்ளது.

அடுத்தப்படியாக வெளிவரவுள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்களை குறித்து பார்த்தால், நோக்கியா 4, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 1 போன்ற பெயர்களை நோக்கியா கேமரா அப் வெளியிட்டுள்ளது. இதில் நோக்கியா 1, இந்நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதோடு, இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவல் ஏற்கனவே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இப்போது வெளியாகி உள்ள நோக்கியா 4 மற்றும் நோக்கியா 7 பிளஸ் குறித்த தகவல்கள் வியப்பளிப்பதாக உள்ளன.

இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் எப்போது நடைபெறும் என்ற நம்பத்தக்க தகவல் கிடைத்துள்ளது. நோக்கியா 9 மற்றும் நோக்கியா 6 (2018) ஆகியவற்றை ஜனவரி 19 ஆம் தேதி இந்நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என்று தெரிகிறது. இந்த வகையில், ஹெச்எம்டி நிறுவனம், 5 அல்லது அதற்கு அதிகமான ஸ்மார்ட்போன்களை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கலாம்.

மலிவு விலையில் ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்.!மலிவு விலையில் ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்.!

இதை தவிர, வரும் ஆகஸ்ட் மாதம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி உடன் கூடிய நோக்கியா 10 அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவல் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தனித்துவ வாய்ந்த மாடலைக் குறித்து, கசிந்த தகவலில் எதுவும் இடம்பெறவில்லை.

நோக்கியா கேமரா அப்பின் கசிந்த ஏபிகே தகவலில், அடுத்து வெளிவரவுள்ள மேற்கூறிய இந்த ஸ்மார்ட்போன்களின் பெயர்களைத் தவிர, அவற்றின் சிறப்பம்சங்களைக் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நோக்கியா 7 ஸ்மார்ட்போனின், ஒரு மேம்பட்ட வகையாக நோக்கியா 7 பிளஸ் அமையும் என்பதால், அதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு கசிந்த தகவல் என்பதால், இந்த ஆண்டே மேற்கூறிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. இது குறித்த கூடுதல் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகும் வரை, இதை ஒரு யூகமாக மட்டுமே எடுத்து கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia Camera app APK information has leaked the details of upcoming smartphones - Nokia 4, Nokia 7 Plus and Nokia 1. Nokia 1 is likely to be the company’s Android One smartphone to be launched this year. But we have not heard about the other two. We can expect the Nokia 7 Plus to use the Snapdragon 660 SoC.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X