கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210.! பழைய போனை வைத்து பள்ளியில் பாடம் எடுத்த சிறுமி.!

|

கடந்த சில ஆண்டுகளில் மொபைல் போன்கள் (Mobile phones) நிறைய மாறிவிட்டன. உண்மையைச் சொல்லப் போனால் மொபைல் போன்களின் பரிணாம வளர்ச்சி எக்குத்தப்பாக எகிறிவிட்டது. இப்போது மொபைல் போன் என்ற சாதனம் மனித வாழ்வில் மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

வரலாற்றில் இருந்து மறையாத மாற்றம் மறக்கவே முடியாத சில மொபைல் போன்கள்.!

வரலாற்றில் இருந்து மறையாத மாற்றம் மறக்கவே முடியாத சில மொபைல் போன்கள்.!

என்னதான், மொபைல் போன்கள் குறுகிய காலத்திற்கும் மிக வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தாலும், ஒரு சில போன்களை வரலாற்றில் இருந்து நம்மால் பிரிக்கவே முடியாது. சில போன்களை பற்றி காலம் காலமாக மக்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். இது மனிதர்களின் மனதிலும், நினைவிலும் இருந்து என்றும் அழியாமல் நிலைத்து நிற்கிறது.

உறுதியான பெயருக்கு சொந்தமான Nokia மொபைல் போன்கள்

உறுதியான பெயருக்கு சொந்தமான Nokia மொபைல் போன்கள்

அப்படி ஒரு உறுதியான பெயருக்கு சொந்தமானது தான் Nokia மொபைல் போன்கள். அப்படி நாம் காலப்போக்கில் சற்று பின்னோக்கிச் சென்றால், ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னால் கடினமான மற்றும் நீடித்து நிலைக்கும் என்ற நற்பெயரைக் கொண்ட நோக்கியா மொபைல்களை யாருமே மறந்திருக்க முடியாது. அதேபோல், போனை ஸ்விட்ச் ஆன் செய்ததும் இரண்டு கைகள் கோர்த்துக்கொள்ளும் அந்த அனிமேஷனை யாரும் மறந்திருக்க முடியாது.

மாயம் இல்ல மந்திரம் இல்ல.! இனி WhatsApp மெசேஜ் உங்க கண்னுக்கு மட்டும் தெரியும்.! எப்படி தெரியுமா?மாயம் இல்ல மந்திரம் இல்ல.! இனி WhatsApp மெசேஜ் உங்க கண்னுக்கு மட்டும் தெரியும்.! எப்படி தெரியுமா?

பூமியில் அதிகமாக நீடித்து உழைத்த மொபைல் போன் எது?

பூமியில் அதிகமாக நீடித்து உழைத்த மொபைல் போன் எது?

நோக்கியா போன்களை விட அதிகமாகி நீடித்து உழைத்த போன்கள் இந்த பூமியில் இருக்கிறதா என்றால், அவற்றைத் தேடிப்பிடித்துச் சுட்டிக் காட்டுவது என்பது மிகவும் கடினமான விஷயம் தான். அப்படி ஒரு அசைக்க முடியாத உறுதியை நோக்கியா போன்கள் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ளது. இது தான் இன்று வரை நோக்கியா போன்கள் பற்றிய உண்மையாக இருக்கிறது.

கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210 பியூச்சர் போன்

கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210 பியூச்சர் போன்

சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் உள்ள உள்ளூர்வாசிகள் பல தசாப்தங்கள் பழமையான நோக்கியா 3210 (Nokia 3210) மொபைல் போன் சாதனத்தை ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுத்துள்ளனர். கடலில் அடித்துவரப்பட்ட இந்த போனை வால்கிங் சென்ற ஒரு பெண் கைப்பற்றியிருக்கிறார்.

WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!

பல ஆண்டுகளாக இந்த போன் கடலில் பயணித்ததா?

பல ஆண்டுகளாக இந்த போன் கடலில் பயணித்ததா?

பல ஆண்டுகளாக இந்த நோக்கியா 3210 கடலில் பயணித்து, இறுதியாக ஆஸ்திரேலியா கடற்கரைக்கு வந்துள்ளது என்பதை அதன் நிலை உறுதிப்படுத்துகிறது. காரணம், இந்த போனை சுற்றி ஆங்காங்கே கொட்டகைகளால் (barnacles) மூடியிருப்பதைப் புகைப்படம் தெளிவாகக் காண்பிக்கிறது.

கொட்டகைகள் என்றால் என்ன? இது எப்படி மொபைலில் காணப்பட்டது?

கொட்டகைகள் என்றால் என்ன? இது எப்படி மொபைலில் காணப்பட்டது?

கொட்டகைகள் என்பது கடலில் வாழும் ஒரு சிறிய வகை உயிரினமாகும். இது ஆமை, திமிங்கலம் போன்ற நீண்ட ஆயுள் கொண்ட உயிரினங்கள் அல்லது பறை, கல் போன்ற மிக உறுதியான இடங்களில் ஒட்டுக்கொள்ளும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் இவை ஆமை ஓடுகள் மற்றும் திமிங்கலங்கள் மீது ஒட்டு உண்ணியாகத் தொற்றி உயிர் வாழ்கிறது. இது நண்டு, மற்றும் இறால் குடும்ப வகையைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உப்பு நீரில் இருந்தும் இந்த போனில் எந்த பாதிப்பும் இல்லையா?

உப்பு நீரில் இருந்தும் இந்த போனில் எந்த பாதிப்பும் இல்லையா?

இப்படி ஒரு உயிரினம் இந்த நோக்கியா 3210 போனில் பின்னி - பிணைத்திருக்கிறது என்றால், கட்டாயமாக இது கடலில் நீண்ட நாட்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கிறது. இதில் ஆச்சரியம் என்ன வென்றால், உப்பு நீரில் இவ்வளவு காலம் இருந்தும், இது ஒரே துண்டாக எந்த பாதிப்பும் இல்லாமல், உறுதியான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குட்டி மகள் கேட்ட அந்த கேள்வி..

குட்டி மகள் கேட்ட அந்த கேள்வி.. "இது என்ன வித்தியாசமாக இருக்கிறது"?

இந்த மாதம், ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் பாம் பீச்சில் நடந்து செல்லும் போது, ​​ஒரு பெண் பல தசாப்தங்கள் பழமையான நோக்கியா 3210 போனை கடலில் இருந்து கண்டுபிடித்தார். அதைக் கண்டுபிடித்ததும், அவரது மகள் இது என்ன வித்தியாசமாக இருக்கிறதே என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.

நீங்க வாங்கும் புது போனில் நீங்க வாங்கும் புது போனில் "இந்த" சிப்செட் இல்லாட்டி வேஸ்ட்.! எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்.!

நோக்கியா 3210 பற்றி மகளுக்கு தாய் சொன்ன வரலாற்று கதை.!

நோக்கியா 3210 பற்றி மகளுக்கு தாய் சொன்ன வரலாற்று கதை.!

அந்த பெண், அவருடைய மக்களிடம் இது தான் பூமியில் மிகவும் பிரபலமான மொபைல் சாதனம் என்று மொபைல் பற்றிய பெருமையை, ஒரு வரலாற்று கதை போலக் கூறியிருக்கிறார். அதேபோல், நோக்கியா 3210 ஏன் மிகவும் உறுதியான கைபேசியாக இருந்தது என்ற உண்மைகளையும் அவருக்கு ஒரு சிறிய கதையாகக் கூறியிருக்கிறார் அந்த தாய்.

கடலில் இருந்து எடுத்த Nokia போனை பள்ளி எடுத்து சென்ற மாணவி.!

கடலில் இருந்து எடுத்த Nokia போனை பள்ளி எடுத்து சென்ற மாணவி.!

கடலில் இருந்து கண்டெடுத்த பழைய நோக்கியா 3210 மொபைல் போனை தன்னுடன் பள்ளிக்கு எடுத்துச் சென்று, நோக்கியா 3210 மொபைல் போன் பற்றிய வரலாற்றுக் கதையை கூறி, மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பழைய மொபைல் சாதனம் எப்படி இருந்தது என்பது பற்றிய உண்மையையும் விளக்கி பாடம் எடுத்திருக்கிறார்.

Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! "இதை" ரீசார்ஜ் செய்ய ஒரு தனி கெத்து வேணும்.!

நோக்கியா 3210 ஏன் பிரபலமானது? இதில் என்னவெல்லாம் இருந்தது தெரியுமா?

நோக்கியா 3210 ஏன் பிரபலமானது? இதில் என்னவெல்லாம் இருந்தது தெரியுமா?

இந்த சாதனம் 1999 ஆம் ஆண்டில் வெளிவந்தபோது, ​​நோக்கியா 3210 மிகவும் பிரபலமான தொலைப்பேசியாக இருந்தது, ஏனெனில் இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 22 மணிநேரம் நீடிக்கும் ஆற்றல் உடன் செயல்பட்டது. இதில் தான் பிரபலமான மொபைல் ஸ்னேக் கேம் (Mobile snake game) வெளியிடப்பட்டது.

பிரபலமான ஸ்னேக் கேம் முதல் கம்போஸர் சாப்ட்வேர் வரை.!

பிரபலமான ஸ்னேக் கேம் முதல் கம்போஸர் சாப்ட்வேர் வரை.!

இத்துடன், மெமரி கேம் மற்றும் ரொட்டேஷன் கேம்களையும் நோக்கியா 3210 கொண்டிருந்தது. இந்த கேம்களைச் சேர்ப்பது இளம் சந்தையில் விரைவாக வளர்ந்து வரும் விற்பனையை அதிகரிக்க உதவியது என்று அறிக்கைகள் கூறுகின்றன. Nokia 3210 ஆனது Nokia இன் கம்போசர் மென்பொருளுடன் நிறுவப்பட்ட முதல் தொலைப்பேசியாகும்.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

Nokia 3210 போனில் SMS மூலம் பிக்ச்சர் மெசேஜ் அனுப்பலாம்.!

Nokia 3210 போனில் SMS மூலம் பிக்ச்சர் மெசேஜ் அனுப்பலாம்.!

இது பயனர்கள் தங்கள் சொந்த மோனோடோன் ரிங்டோன்களை உருவாக்கி மற்ற நோக்கியா தொலைபேசிகளுக்கு அனுப்ப அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. SMS மூலம் ஏற்கனவே பதிவிறக்கம் செய்த பிக்ச்சர் மெசேஜ்களை பயனர்கள் ஒருவருக்கொருவர் அனுப்பவும் இந்த மொபைல் அனுமதித்தது என்பது கவனிக்கத்தக்கது.

பழைய நோக்கியா 3210 பெருமையை பாடமாக எடுத்த சிறுமிக்கு வாழ்த்து.!

பழைய நோக்கியா 3210 பெருமையை பாடமாக எடுத்த சிறுமிக்கு வாழ்த்து.!

அதன் போனின் போன் புக்கில் சுமார் 250 பெயர்கள் மட்டுமே ஸ்டோர் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் 160 மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையான பிறகு, 2005 இல் சந்தையில் இருந்து அகற்றப்பட்டது. இப்படி, கடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பழைய நோக்கியா 3210 மொபைல் போனை வைத்து, மாணவி மற்ற மாணவர்களுடன் அவர் அனுபவத்தைப் பாடமாக எடுத்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
Nokia 3210 Old Feature Phone Found In Australia Beach

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X