நோக்கியா 3 மாடலில் விரைவில் ஆண்ட்ராய்ட் 7.1.1 நெளகட் அப்டேட்.!

By Siva
|

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஆகிய மாடல்கள் இன்னும் இரண்டு வருடங்களில் ஆண்ட்ராய்ட் ஓஎஸ் அப்டேட் செய்யப்படும் என்றும் இந்த மாடல்களில் வரும் 2018அம் ஆண்டு ஆண்ட்ராய்டு ஓ மற்றும் ஆண்ட்ராய்ட் P ஆகிய ஓஎஸ்கள் அப்டேட் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், HMD உறுதியளித்துள்ளது.

நோக்கியா 3 மாடலில் விரைவில் ஆண்ட்ராய்ட் 7.1.1 நெளகட் அப்டேட்.!

தற்போது ஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட் ஓஎஸ் பெற்றிருக்கும் நோக்கியா 3 மாடல் கூட வெகுவிரைவில் அதிநவீன ஓஎஸ்களை பெற்றுவிடும் என்பது நோக்கியா வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிய செய்தி என்பதில் சந்தேகமில்லை.

ஆனாலும் HMD இந்த அப்டேட் நோக்கியா 3 மாடலில் உள்ள ஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட் ஓஎஸ் எப்போது அப்டேட் செய்யப்படும் என்ற தகவலை தெரிவிக்கவில்லை அதே போல் அப்டேட்டிங் விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை

ஆனால் அதே நேரத்தில் இந்த அப்டேட் செய்யப்பட்டுவிட்டால் நோக்கிய 3 மாடல் மிகுந்த பயனளிக்கும் போனாக மாறிவிடுவதோடு அதிக வசதிகளை பெறும் குறைந்த விலை போன் என்ற பெருமையையும் பெற்று கொள்ளூம்

நோக்கியா 3 மாடல் உலகின் பல நாடுகளில் தற்போது கிடைத்து கொண்டிருக்கின்றது. இன்னும் அறிமுகமாகாத நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த நோக்கியா 3 மாடல் ரூ.9,499 என்ற விலையில் கிடைத்து வருகிறது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் ஷோரூமில் மட்டுமின்றி குரோமா இணையத்தின் மூலம் ஆன்லைனிலும் கிடைக்கின்றது

பாலிகார்பனேட் பாடியுடன் கூடிய நோக்கியா 3 மாடல் 5 இன்ச் HD 720P ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டது. மேலும் இந்த போன் மெடியாடெக் MT6737 பிராஸசரையும், 2GB ரேம் மற்றும் 16GB இன்னர் ஸ்டோரேஜையும் கொண்டது. மேலும் இதில் 128GB வரை மெமரியை அதிகப்படுத்தும் எஸ்டி கார்ட் வசதியும் உண்டு.

மேலும் இந்த போனில் 8MP திறன் கொண்ட பின்கேமிராவும், 8MP திறன் கொண்ட செல்பி கேமிராவும் அடங்கியுள்ளது. இந்த நோக்கியா 3 போன் 4G, LTE வசதி கொண்டுள்ளதோடு 2560 mAh பேட்டரி திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 3 smartphone will soon receive the Android 7.1.1 Nougat update, claims a recent report.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X