நோக்கியா & வோடபோன் அறிவித்துள்ள புதிய டேட்டா ஆபர் என்ன?

By Prakash
|

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. மேலும் இவை பல்வேறு வரவேற்ப்பை பெற்றது.

தற்போது புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வாங்குவோர்க்கு கூடுதலாக 4ஜி டேட்டா ஆபரை அறிவித்துள்ளது வோடபோன் நிறுவனம், இந்த குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் மற்றும் வோடபோன் நிறுவனமும் சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 நோக்கியா:

நோக்கியா:

வோடபோன் தற்போது அறிவித்துள்ள ஆபர் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்கள் வாங்குவோர்களுக்கு
கூடுதலாக 5ஜிபி 4ஜி அல்லது 3ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த ஆபர் பல்வேறு மக்கள் பயன்படுத்தும் வகையில்
அமைந்துள்ளது.

நோக்கியா 6:

நோக்கியா 6:

நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் இந்தியாவில் பிரத்யேகமாக விறபனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு வோடபோன் கூடுதலாக 9ஜிபி 4ஜி அல்லது 3ஜி டேட்டா ஆபரை வழங்குகிறது.

சந்தீப்:

சந்தீப்:

வோடபோன் இந்தியாவின் பிரதம வர்த்தக அதிகாரியான சந்தீப் தெரிவித்தது என்னவென்றால் இந்த புதிய திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மூலம் மிகச் சிறப்பான சேவையை பெற உதவுகிறது. வோடபோன் சூப்பர்நெட், குவாண்டம் தரவு வீடியோ அழைப்புகள் மற்றும் பல்வேறு டேட்டா சேவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நோக்கியா 3 டிஸ்ப்ளே, ரேம்:

நோக்கியா 3 டிஸ்ப்ளே, ரேம்:

நோக்கியா 3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் இக்கருவி ஒரு பாலிகார்பனேட் உடலை கொண்டுள்ளது. 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த சாதனம் ஒரு மைக்ரோஎஸ்டி அதை வழியாக 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட 2 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஜோடியாக ஒரு க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி6737 எஸ்ஓசிமூலம் இயங்குகிறது

நோக்கியா 3  விலை:

நோக்கியா 3 விலை:

நோக்கியா 3 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9.499/- என்ற இந்திய விலை நிர்ணயம் பெற்றுள்ளது. எச்எம்டி நிறுவனம் இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களை நியமனம் செய்துள்ளது மற்றும் நாடு முழுவதும் 80,000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகளில் இக்கருவி கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Nokia 3 5 6 Users Offered Up to 9GB Additional Data From Vodafone ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X