Just In
- 14 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 17 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 17 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 18 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மூன்று ரியர் கேமராவுடன் வெளிவந்த நோக்கியா 3.4: நம்பி வாங்கலாமா?
எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. பட்ஜெட் விலையில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளிவந்தாலும் மற்ற நிறுவனங்களை விட சிறப்பான அம்சங்களையே வழங்கி வருகிறது. அதன்படி அன்மையில் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

நோக்கிய 3.4
சிறந்த வடிவமைப்பு, அசத்தலான கேமராக்கள், தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுட் வெளிவந்தது இந்த அட்டகாசமான நோக்கிய 3.4 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனம் ரூ.11,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக ஆன்லைன் தளங்களில் தேர்வு செய்யப்பட்டவங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த நோக்கியா 3.4ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும். மேலும் இப்போது நோக்கியா 3.4 சாதனத்தின் முழு விவரங்களைப் பார்ப்போம்.

ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
வீடியோ கேம், திரைப்படம் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப் வசதிகளை பயன்படுத்தும்போது கூட மிக அருமையாக செயல்படுகிறது. நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1560 பிக்சல் தீர்மானம், 19.5:9 திரைவிகிதம், 400 nits பிரைட்நஸ் உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். கிட்டத்தட்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றுள்ளது.

பட்ஜெட் விலைக்கு தகுந்தபடி சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் ஆனது பட்ஜெட் விலைக்கு தகுந்தபடி இடம்பெற்றுள்ளது. அதன்படி நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் அட்ரினோ 610 ஜிபியு மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் இந்த சாதனத்தில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்உள்ளிட்ட வசதிகள் இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். இருந்தபோதிலும் இந்த நோக்கியா 3.4 சாதனத்தில் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு நன்றாக தான் உள்ளது.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த
ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

13எம்பி பிரைமரி சென்சார்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இப்போது வரும் மற்ற நிறுவனங்களின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் 48எம்பி ரியர் கேமராவுடன் தான் வருகின்றன. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்3 சாதனம் கூட 48எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்தது. இந்த நோக்கியா 3.4 சாதனத்திலும் 48எம்பி கேமரா இடம்பெற்றிருந்தால் பயன்படுத்துவதற்கு நன்றாக இருந்திருக்கும்.

பேட்டரி பேக்கப்
பட்ஜெட் விலைக்கு தகுந்தபடி அசத்தலான பேட்டரி வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். கண்டிப்பாக வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பயன்படுத்த தகுந்தபடிஇந்த சாதனம் நல்ல பேட்டரி பேக்கப் கொடுக்கும்.

மேலும் 4 ஜி ,வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறுஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் ஒரு சில நல்ல அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470