Home
News

4,000 ரூபாயில் இப்படி ஒரு Nokia ஃபிலிப் போனா? இப்போது புதிதாக இன்னும் 2 நிறங்களில்! விலை அதே தானா?

நோக்கியா (Nokia) நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஃபிலிப் மாடல் மொபைல் ஆன நோக்கியா 2660 ஃபிளிப் மாடலில் ஆஸ்திரிய சில்லறை விற்பனையாளர் இரண்டு புதிய வண்ணங்களைச் சேர்த்துள்ளது. நோக்கியா 2660 ஃபிளிப் என்பது நோக்கியா 2660 இன் மறு அவதாரம் ஆகும்.

இதில் ஃபிளிப் மோனிகர் சேர்க்கப்பட்டுள்ளது. இது முதலில் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்த மூன்று நிறங்களும் இந்தியாவில் இப்போது வாங்க கிடைக்கிறது. நோக்கியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் தளம் வழியாக இவை வாங்க கிடைக்கிறது. ஆனால், இப்போது பசுமையான பச்சை நிறத்திலும் மற்றும் பிங்க் நிறத்திலும் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4,000 ரூபாயில் இப்படி ஒரு Nokia ஃபிலிப் போனா? புதிதாக 2 நிறங்களில்!

நோக்கியா 2660 ஃபிளிப்பின் புதிய வண்ண வகைகள் முந்தைய மாடலைப் போலவே இருக்கும். இதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. Nokia 2660 Flip ஆனது KaiOS இல் இயங்காத முதல் நோக்கியா ஃபிளிப் போன் சாதனம் ஆகும். இது 2.8' இன்ச் முதன்மை டிஸ்பிளேவுடன் வருகிறது. இதன் இரண்டாம் நிலை டிஸ்பிளேவானது 1.77' இன்ச் செகண்டரி டிஸ்ப்ளேவுடன் கொண்ட டூயல் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

Nokia 2660 Flip ஆனது Unisoc T107 சிப்செட் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 32GB வரையிலான ஸ்டோரேஜ் உடன் microSD மெமரி கார்டு வழியாக கூடுதல் ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது. Nokia 2660 Flip ஆனது MP3 பிளேயர், FM ரேடியோ மற்றும் புளூடூத் 4.2 இணைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் பேட்டரி பற்றி பேசுகையில், இந்த மொபைல் சாதனம் 1,450mah பேட்டரி உடன் வருகிறது.

நோக்கியா 2660 ஃபிளிப்பிற்கான சார்ஜிங் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் வழியாக சார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த நோக்கியா 2660 ஃபிலிப் போனில் 0.3MP கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் போன்ற அம்சங்கள் உள்ளது. இத்துடன் 5 தொடர்புகளை விரைவாக அழைப்பதற்கான அவசரகால பட்டன்னும் இதில் உள்ளது. நோக்கியா 2660 ஃபிளிப்பின் புதிய வண்ண வகைகளின் படி, கிரீன் மாடலில் தங்க நிற டி-பேட் மற்றும் கேமரா தீவு உள்ளது.

4,000 ரூபாயில் இப்படி ஒரு Nokia ஃபிலிப் போனா? புதிதாக 2 நிறங்களில்!

இந்த போனின் கீபேட் உடலின் க்ரீன் நிறத்தை விட கருமையாக உள்ளது. மறுபுறம், இந்த நோக்கியா 2660 ஃபிளிப்பின் பிங்க் மாடல் டி-பேடின் அடர் பிங்க் கீபேட் மற்றும் ரோஸ் பிங்க் ஃபினிஷ் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இரண்டு வண்ண வகைகளும் ஏற்கனவே சில்லறை விற்பனையாளரின் தரவுத்தளத்தில் பல படங்களைக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இன்னும் இந்த 2 நிறங்களும் அறிமுகமாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Nokia 2660 Flip இன் இரண்டு புதிய வண்ண வகைகள் எப்போது கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. Nokia 2660 Flip இன் அதிகாரப்பூர்வ தயாரிப்பு பக்கத்தில் இதுவரை எந்த வார்த்தையும் இல்லை. இருப்பினும், 2660 ஃபிளிப்பின் புதிய வண்ண வகைகளுக்கான அதே விலையை நோக்கியா வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், Nokia 2660 Flip மாடலின் விலை ரூ.4,499 மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 2660 Flip in two new colors price and specification details of the mobile
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X