Home
News

அதிரடி ஆஃப்பர்.. ரூ.4000 விலையில் 4ஜி Volte.. Nokia 2660 Flip போன்.. எங்கே வாங்கலாம்?

தாரமான மொபைல் போன்களை பல ஆண்டு காலமாக இந்தியர்களுக்கு வழங்கி வரும் ஒரு நம்பிக்கையான நிறுவனம் தான் நோக்கியா (Nokia). நோக்கியாவின் மொபைல் போன்கள் பல மாடல்களில், பல நிறங்களில், விதவிதமான வடிவமைப்புடன் குறைந்த விலையில் வருகின்றன.

அன்று முதல் இன்று வரை நோக்கியாவின் தயாரிப்புகளுக்கென்று ஒரு சிக்னேச்சர் டச் ஒன்று உள்ளது. மொபைல் மற்றும் பியூச்சர் போன் (feature phone) சந்தையில், மிகப்பெரிய ஜாம்பவானாக வளம் வந்த நிறுவனம் நோக்கியா மட்டுமே என்பதை யாரும் மறுக்க முடியாது. ஸ்மார்ட்போன்கள் (smartphone) அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, எல்லோருடைய கைகளிலும், வீடுகளிலும் குறைந்தது ஒரு நோக்கியா போன் (nokia phone) ஆவது இருந்தது என்பதே உண்மையாகும்.

அதிரடி ஆஃப்பர்.. ரூ.4000 விலையில் 4ஜி Volte.. Nokia 2660 Flip போன்..

உண்மையை சொல்ல போனால், நோக்கியா போன்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த ரசிகர் பட்டாளம் இன்றும் நோக்கியாவை பின்தொடர்ந்து வருகிறது. நோக்கியா ரசிகர்களை அதிகம் கவர்ந்த நோக்கியா போன் மாடல் எது? என்று கேட்டால், அது ஃபிலிப் போன்கள் (flip phones) என்று தாராளமாக நாம் சொல்லலாம். தற்போதைய சூழ்நிலையில், ஸ்மார்ட்போன்களில் ஃபிலிப் போன்கள் வாங்க வேண்டுமென்றால், ரூ.50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டியதுள்ளது.

ஆனால்,நோக்கியாவின் ஃபிலிப் போன்கள் இப்போதும் ரூ.5000 விலை புள்ளியில் விற்பனை செய்யப்படுகிறது. ஆம், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நோக்கியாவின் ஃபிலிப் போன்கள் தற்போதைய தொழில்நுட்பத்துடன் சேர்ந்து இயங்குகிறது. ஆம், இவை 4ஜி வோல்டி (4G Volte) இணக்கத்துடன் வருகிறது. நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் மாடல் நோக்கியா 2660 ஃபிலிப் போன் பற்றியது.

நோக்கியா 2660 ஃபிலிப் போன் (Nokia 2660 Flip Phone) இப்போது அமேசான் தாளத்தில் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த அட்டகாசமான நோக்கியா 2660 ஃபிலிப் போன் சாதனத்தை 25% தள்ளுபடியுடன் வாங்க முடியும். இந்த நோக்கியா 2660 ஃபிலிப் போன் இப்போது 5 வண்ணமயமான நிறங்களில் வருகிறது.

இது பாப் பிங்க் (Pop Pink), ரெட் (Red), லஷ் கிறீன் (Lush Green), ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) நிறங்களில் இப்போது வாங்க கிடைக்கிறது. இந்த நோக்கியா 2660 ஃபிலிப் 4ஜி வோல்டி கீபேட் போன் (Nokia 2660 Flip 4G Volte Keypad) அமேசானில் (Amazon.in) 25% தள்ளுபடிக்கு பிறகு, ரூ.4,449 என்ற சிறப்பு விலையில் இப்போது வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.5,899 ஆகும்.

இந்த மொபைலை வாங்க EMI விருப்பமும் உள்ளது. அதேபோல், இந்த போனை வாங்க நோ-காஸ்ட் EMI வசதியும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபோனுக்கான EMI ரூ.216 விலை முதல் துவங்குகிறது. இதன் நோ-காஸ்ட் EMI கட்டணம் மாதத்திற்கு ரூ.742 விலை முதல் தொடங்குகிறது. வெறும் 216 ரூபாய் செலவில் இந்த போனை வாங்கலாம் என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள்.

இந்த நோக்கியா 2660 ஃபிலிப் 4ஜி வோல்டி கீபேட் போனின் அம்சங்கள் பற்றி பேசுகையில், இது 2.8' இன்ச் TFT டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் நவிகேஷன் செய்ய மற்றும் மற்ற அம்சங்களை அணுக பெரிய சைஸ் எர்கோனோமிக் பட்டன்கள் (ergonomic buttons) வழங்கப்பட்டுள்ளன.இந்த ஃபோனின் ஃபிலிப் பன்க்ஷனாலிட்டி (Flip-Functionality) அம்சம் ஆனது, ஒரு எளிய ஃபிளிப் மூலம் வாய்ஸ் கால்ஸ் அழைப்பிற்கு பதிலளிக்கவும், கால்களை கட் செய்யவும் அனுமதிக்கிறது.

இந்த ஃபோன் Nokia Series 30+ இல் இயங்குகிறது மற்றும் 4G ஐ ஆதரிக்கிறது. இந்த போனில் லித்தியம் அயன் (Lithium Ion) 1450mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இது போனை 2 நாளுக்கு மேல் பயன்பாட்டில் வைக்கிறது. இந்த ஃபோன் 0.05 ஜிபி ரேம் மற்றும் 48 எம்பி இன்பில்ட் மெமரியுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஒரு 5MP கேமராவும் (camera) உள்ளது. கம்மி காசில் ஃபிலிப் போன் அனுபவத்தை அனுபவிக்க இது பெஸ்ட் மாடலாகும்.

Best Mobiles in India

English summary
Nokia 2660 Flip 4G Volte Keypad Mobile Phone Gets 25% Offer From Amazon India Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X