நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நோக்கிய 2.4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். பின்பு பல்வேறு புதிய அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ளது.

இந்த நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 உடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இந்த சாதனத்திற்கு கடந்த ஆண்டில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்ததை தொடர்ந்து தற்போது ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் பிரான்சில் உள்ள பயனர்களுக்குமட்டும் கிடைத்துள்ளதாகவும், விரைவில் மற்ற நாடுகளில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் 2022 பாதுகாப்பு பேட்சுடன் ஆண்ட்ராய்டு 12 அப்டேட்-ஐ பெறத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போதுநோக்கியா 2.4 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறுஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, ஆனால்தற்போது ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்

இந்த நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே ஒரு முழு சார்ஜில் 2 நாட்கள் வரை இந்த ஸ்மார்ட்போனை அருமையாக பயன்படுத்த முடியம். அதேபோல் கூகுள் அசிஸ்டன்ட் பட்டன், கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத், ஜிபிஎஸ் + க்ளோனாஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 189 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications