நோக்கியா : திரும்ப வந்திருக்கேனு சொல்லு.!!

Written By:

திரும்ப வந்திருக்கேனு சொல்லு, என ஆரம்பிக்கும் இந்த வசனத்தைத் தான் சமீப காலமாக நம்ம பசங்க, தொடர்ச்சியாகப் பேசிட்டு வரும் வார்த்தை அல்லது தலைவர் வசனம்'னும் சொல்லலாம். இந்த வசனம் பழைய மொபைல் போன் நிறுவனத்திற்கும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கு.

ஒரு காலத்துல நாம போன் பேசவும், கீழே போடவும் பயன்படுத்திய நோக்கியா போன்களுக்குத் தான் தலைவர் வசனம் கச்சிதமாகப் பொருந்தியிருக்கு. புரியலையா, பழைய நோக்கியா 1100 போன்கள் அதே கம்பீரம் மற்றும் தரத்தோட விற்பனைக்கு வந்திருக்கு..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரீஃபர்பிஷ்டு

01

மற்ற நாடுகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களைச் சரி செய்து அதற்குப் புதிய தோற்றம் கொடுத்து விற்பனை செய்யும் வழிமுறையைத் தான் ரீஃபர்பிஷ்டு என அழைக்கப்படுகின்றது.

புதிது

02

நமக்கு இந்த வழிமுறை அதிகப் பிரபலம் இல்லை என்றாலும், நமக்கு மிகவும் பிடித்த நோக்கியா 1100 கருவியை ரீஃபர்பிஷ்டு முறையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

பயன்

03

இந்த வழிமுறையில் மொபைல் போன்களை வாங்கும் போது பழைய கருவிகளை புதிய தோற்றத்தில், குறைந்த விலையில், தகுந்த வாரண்டியில் பெற முடியும்.

ஈபே

04

அந்த வகையில் நோக்கியா 1100 கருவியானது தற்சமயம் ஷாப்க்ளூஸ் (ShopClues) மற்றும் ஈபே (Ebay) போன்ற தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றது.

வாரண்டி

05

குறைந்தபட்சம் 6 மாத காலம் வாரண்டியுடன் கிடைக்கும் நோக்கியா 1100 கருவியின் இன்றைய விலை ரூ.750 முதல் துவங்குகின்றது.

அம்சங்கள்

06

நோக்கியா 1100 அம்சங்கள் நம் அனைவருக்கும் நன்கு தெரிந்தவை தான். எனினும் அவற்றின் தனிச் சிறப்புகளை தொடர்ந்து பாருங்கள்.

பேட்டரி

07

நோக்கியா 1100 போனிற்கு ஒரு நாள் சார்ஜ் செய்தால் குறைந்த பட்சம் இரண்டு முதல் நான்கு நாட்களுக்குச் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

தரம்

08

நோக்கியா கருவிகள் ஸ்மார்ட்போன்களை போல் இல்லாமல் எத்தனை முறை கீழே விழுந்தாலும் தாங்கும். இதோடு நீரில் நனைந்தாலும் பிரச்சனையின்றி இயங்கும்.

கேமிங்

09

நோக்கியா 1100 போனில் ஸ்னேக், ஸ்பேஸ் இம்பாக்ட் போன்ற கேம்கள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு இவைகளை விளையாடும் போது போன் சூடாகும் என்ற கவலையில்லாமல் விளையாட முடியும்.

குறுந்தகவல்

10

வாட்ஸ்ஆப், மெசன்ஜர் போன்ற செயலிகள் இல்லை என்றாலும் அளவான பட்ஜெட்டில் அளவான குறுந்தகவல்களை மின்னல் வேகத்தில் டைப் செய்து அனுப்ப முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Nokia 1100 is back again and open to sales Online Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot