மீண்டும் வருகிறது Nokia 1100.. ஆனா இந்த முறை 5G உடன்.. 1TB ஸ்டோரேஜ்.. குவாட் கேமரா.. 3 நாள் நீடிக்கும் பேட்டரி
இந்தியர்களின் நம்பிக்கையை பல சகாப்தங்களாக வென்ற நிறுவனமாக நோக்கியா (Nokia) பார்க்கப்படுகிறது. நோக்கியா விரைவில் நோக்கியா 1100 5ஜி (Nokia 1100 5G) என்ற புதிய ஆண்ட்ராய்டு (android) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இது பற்றிய கூடுதல் தகவல் இதோ.
நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 1100 (Nokia 1100) மொபைல் சாதனம் மிகவும் புகழ்பெற்ற சாதனமாக இருந்தது. இந்த போனை யாராலும் மறக்க முடியாது. காரணம், இது செல்லுலார் மொபைல் (cellular mobile) மாடல்களில் மிகவும் உறுதியான போனாக அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாடலாக இருந்தது. இப்போது நோக்கியா நிறுவனம் இதே பெயரில் புதிய 5ஜி போன் (5G phone) சாதனத்தை அறிமுகம் செய்ய தயாராகியுள்ளது.

இந்த புதிய நோக்கியா 1100 5ஜி 2023 (Nokia 1100 5G 2023) போனை நிறுவனம் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யுமென்று சில லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. நோக்கியா 1100 5ஜி 2023 சாதனத்தை நிறுவனம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் முதற் பாதிக்குள் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 1100 5ஜி 2023 (Nokia 1100 5G 2023):
நோக்கியா 1100 5ஜி 2023 சாதனத்தின் அறிமுகத்திற்கு முன்பாக இந்த புதிய 5ஜி போனின் விலை என்ன? இதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது போன்ற முக்கியமான தகவல்கள் இப்போது லீக் செய்யப்பட்டுள்ளன. இந்த போனின் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். அதனை தொடர்ந்து இது என்ன விலையில் இந்தியாவிற்குள் விற்பனைக்கு வரும் என்பது பற்றியும் பார்க்கலாம்.
நோக்கியா 1100 5ஜி 2023 டிஸ்பிளே (Nokia 1100 5G 2023 display):
நோக்கியா 1100 5ஜி 2023 ஸ்மார்ட்போன் 6.8' இன்ச் கொண்ட சூப்பர் அமோலேட் (Super AMOLED) முழு HD+ டிஸ்பிளேவுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) உடன் பாதுகாக்கப்படுகிறது. இந்த போனின் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது குவாட் கேமரா அமைப்புடன் வரும் என்று கூறப்படுகிறது.
நோக்கியா 1100 5ஜி 2023 கேமரா (Nokia 1100 5G 2023 Camera):
இதில் 64 எம்பி + 32 எம்பி + 16 எம்பி + 5 எம்பி குவாட் ரியர் கேமராவும், முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமராவும் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில் இது 6ஜி அல்லது 8 ஜிபி ரேம் உடன் 64ஜிபி அல்லது 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்தில் இந்த போன் 1TB வரையிலான ஸ்டோரேஜ் உடன் வெளிவர வாய்ப்புள்ளது.
நோக்கியா 1100 5ஜி 2023 பேட்டரி (Nokia 1100 5G 2023 Battery):
இந்த நோக்கியா 1100 5ஜி சாதனம் 5600mah பேட்டரியை பேக் செய்யுமென்றும், இது குவிக் சார்ஜ் 4.0+ (Quick Charge 4.0+) பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 3 நாள் ஆயுளை வழங்கும் என்று லீக் குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5ஜி ஆதரவை ஆதரிக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 5ஜி (Qualcomm snapdragon 5G) சிப்செட் எதிர்பார்க்கப்படுகிறது. சரியான சிப்செட் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
நோக்கியா 1100 5ஜி 2023 விலை (Nokia 1100 5G 2023 Price):
இந்த போனின் சரியான அறிமுகம் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த நோக்கியா 1100 5ஜி 2023 (Nokia 1100 5G 2023) ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய சந்தையில் ரூ.15,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில தாமதங்கள் காரணமாக இதன் அறிமுகம் தள்ளிப்போய்யுள்ளது.


Click it and Unblock the Notifications








