வந்துட்டேன்னு சொல்லு! Nokia பீச்சர் போன்களில் UPI பேமெண்ட் வந்தாச்சு!
பத்து வருடங்களுக்கு முன்பு பீச்சர் போன்களில் (Feature Phones) டிஜிட்டல் பேமெண்ட் வசதி இருந்திருந்தால் எப்படி இருக்கும். ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அதிகமான மக்கள் நோக்கியா (Nokia) போன்களை மட்டுமே பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அந்த அளவுக்கு நோக்கியா போன்களுக்கு வரவேற்பு இருந்தது.
இந்த வரவேற்பை மீண்டும் கொண்டுவர நோக்கியா நிறுவனம், "நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துடேன்னு" அப்படி சொல்லும்படி பிரம்மாண்ட அம்சத்தை பீச்சர் போன்களில் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த முழு தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். நம்மிடையே ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்பாடு அதிகரித்துவிட்டாலும், பீச்சர் போன்களுக்கான வரவேற்பு குறைந்தவிடவில்லை.

அதுவும் கோடிக்கணக்கான மக்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கும் நோக்கியாவின் பீச்சர் போன்களுக்கு சற்று அதிகமாகவே வரவேற்பு இருந்து வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்திய மக்களில் பலரும் பீச்சர் போன்களுக்கு மாறிவருகின்றனர். ஏனென்றால், அதில் டேட்டா கம்மியாக செலவாகும், பேட்டரி நீண்ட நேரம் வரும், எப்போதும் போனில் மூழ்கி இருக்க தோன்றாது.
ரூ.500, ரூ.1,000 என்று ரீசார்ஜ் செய்ய வேண்டியது கிடையாது. இப்படி பல நன்மைகள் பீச்சர் போன்களில் இருக்கிறது. ஒருவொரு குறையாக இருப்பது என்னவென்றால், பீச்சர் போன்களில் டிஜிட்டல் பேமெண்ட் (Digital Payment) வசதி இருக்காது. இன்றைய காலத்தில் டிஜிட்டல் பேமெண்ட் வசதி தேவைப்படுவதால், அது பீச்சர் போன்களுக்கு பெரும் பின்னடைவாகவே இருந்தது.
இதை உடைத்தெறிந்த நோக்கியா நிறுவனம், தனது இரண்டு பீச்சர் போன்களில் யுபிஐ பேமெண்ட் (UPI Payment) வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த வசதி மூலம் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும். இந்த வசதி நோக்கியா 105 4ஜி (Nokia 106 4G) மற்றும் நோக்கியா 106 4ஜி ( Nokia 105 4G ) ஆகிய இரண்டு போன்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன்கள் முன்னதாகவே வெளியாகிய நிலையில், இப்போது, யுபிஐ பேமெண்ட் வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன்களில் கொடுக்கப்பட்டுள்ள யுபிஐ 123பே (UPI 123PAY) மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும். இவற்றின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நோக்கியா 105 4ஜி அம்சங்கள்: இந்த போன் 1.8 இன்ச் எல்டிசி டிஸ்பிளே கொண்டுள்ளது. 128 எம்பி ரேம் உள்ளது. அதோடு மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ள முடியும். வயர்லெஸ் எப்எம் ரோடியோ (Wireless FM radio) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) உள்ளது. 1020 mAh பேட்டரி கொண்டுள்ளது. சார்கோல் (Black), ஓசன் ப்ளூ (Ocean Blue)ஆகிய கலர்களில் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரையில், ரூ.1,299 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 106 4ஜி அம்சங்கள்: 1.8 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. 128 எம்பி ரேம் உள்ளது. மெமரி கார்ட் பயன்படுத்திக் கொள்ளலாம். வயர்லெஸ் எப்எம் ரோடியோ (Wireless FM radio) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) உள்ளது. 1450 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. சார்கோல் (Charcoal), எம்ரால்டு கிரீன் (Emerald Green ), டெர்ராகோட்டா ரெட் (Terracotta Red) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரையில், ரூ.2,199ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








