ஸ்டைலான லுக்கில் Smartwatch வேண்டுமா? அப்போ இந்த Noise வாட்சை தான் வாங்கணும்!
நாய்ஸ் நிறுவனம் புதிதாக நாய்ஸ்பிட் பியூஸ் பிளஸ் (NoiseFit Fuse) என்ற ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, Noise அதன் சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் சாதனமாக புது நாய்ஸ்பிட் டிவிஸ்ட் ப்ரோ (NoiseFit Twist Pro) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
NoiseFit Twist Pro ஆனது ஸ்டைலான லெதர் ஸ்ட்ராப் மற்றும் 1.4' இன்ச் அளவு கொண்ட HD AMOLED டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் வட்ட வடிவ டயல் நேர்த்தியான வடிவமைப்புடன் ஸ்டைலான லுக் உடனே வருகிறது. இது, புதிய ட்ரெண்டிங் ஸ்மார்ட் வாட்ச் அம்சமான வாட்ச் கிரௌன் பட்டன் உடன் வருகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்வாட்ச் இன் அம்சங்களை எளிதாக வழிசெலுத்தலை செயல்படுத்துகிறது.

இந்த புதிய NoiseFit Twist Pro ஸ்மார்ட்வாட்ச் ஆனது TruSync தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது. இது சமீபத்திய புளூடூத் v5.3 அம்சத்தை பயன்படுத்தி மேம்பட்ட அழைப்புக்கான சிங்கிள் சிப் BT அழைப்பு அம்சத்தை கொண்டுள்ளது. Noise Buzz மூலம், பயனர்கள் சமீபத்திய அழைப்பு பதிவுகளை அணுகலாம் மற்றும் 10 தொடர்புகள் வரை நேரடியாக சேமிக்க அனுமதிக்கிறது.
NoiseFit Twist Pro ஆனது Noise Health Suite அம்சத்துடன் ஒருங்கிணைந்து வருகிறது. இந்த ஹெல்த் சுய்ட் அம்சத்தின் மூலம் ஸ்மார்ட்வாட்ச் பயனர்கள் அவர்களின், ஆரோக்கியத்தை கண்காணிக்க அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பயனர்களின் இதயத் துடிப்பு, SpO2 அளவு, ஸ்லீப் மானிட்டர், மன அழுத்த நிலை மற்றும் பிரீத் கண்ட்ரோல் போன்ற விஷயங்களை கண்காணிக்கிறது.
இந்த NoiseFit Twist Pro ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தில் கூடுதலான அம்சங்களை கொண்டுள்ளது. உதாரணமாக இதில் இன்பில்ட் டெய்லி நோட்டிபிகேஷன் ஹெல்த் அம்சம் உள்ளது. அதேபோல், இந்த சாதனம் வெதர் ரிப்போர்ட் மற்றும் அப்டேட்களை உடனுக்குடன் உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இன் பேட்டரி ஆயுளை பொறுத்த வரை இது 7 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது.
NoiseFit Twist Pro ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ஆனது IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. இது பல்வேறு சூழல்களில் நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 100-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் முகங்களுடன் வருகிறது. அதேபோல், இந்த NoiseFit Twist Pro ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 120 ஸ்போர்ட்ஸ் மோடுகளைக் கொண்டுள்ளது.
NoiseFit Twist Pro பரந்த அளவிலான கஸ்டமைஸ் விருப்பங்களை வழங்குகிறது. கூடுதல் தனிப்பயனாக்கம் மற்றும் உற்பத்தித்திறன் அம்சங்களுக்காக NoiseFit ஆப்ஸை பயன்படுத்தலாம். இதன் மூலம் பயனர்கள் தங்கள் அனுபவத்தை மேலும் மேம்படுத்திக்கொள்ளலாம். NoiseFit Twist Pro வாட்ச் ஜெட் பிளாக், சில்வர் கிரே, விண்டேஜ் பிரவுன், டீப் ஒயின் மற்றும் கோபால்ட் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
NoiseFit Twist Pro ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தின் விலை ரூ. 2,199 மட்டுமே. இது Amazon.in மற்றும் gonoise.com ஆகிய இரண்டிலும் இன்று முதல், அதாவது ஜூலை 8, 2023 முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் ஸ்டைலான மற்றும் அட்டகாச அம்சத்துடன் ஸ்மார்ட் வாட்ச் வேண்டுமா? அப்படியானால் இந்த NoiseFit Twist Pro உங்களுக்கானது.


Click it and Unblock the Notifications








