யார் சாமி நீ? ஸ்மார்ட்வாட்ச் வாங்குனா iPhone 15 இலவசமா? அதிரடி அறிவிப்பு.. என்ன மாடல்? என்ன விலை?
நாய்ஸ்ஃபிட் டிவிஸ்ட் கோ (NoiseFit Twist Go) ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை வெறும் ரூ.1,199 விலை கொடுத்து வாங்கினால், ஐபோன் 15 (iPhone 15) சாதனத்தை இலவசமாக தூக்கி செல்ல வாய்ப்புள்ளது என்று நாய்ஸ் (Noise) நிறுவனம் அறிவித்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
NoiseFit Twist Go: ஆம், சரியாக தான் படித்தீர்கள். புதிய நாய்ஸ்ஃபிட் டிவிஸ்ட் கோ (NoiseFit Twist Go) ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை முன்பதிவு செய்து, ஆர்டர் செய்து வாங்கும் வடிக்கையாளர்களில் இரண்டு நபர்களுக்கு ஐபோன் 15 சாதனத்தை இலவசமாக வெல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று நாய்ஸ் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இந்த இலவச ஐபோன் 15-ஐ பெற நாம் என்ன செய்யவேண்டுமென்ற தகவல் இதோ.

நாய்ஸ் (Noise): பிராண்ட் இப்போது அதன் ஸ்மார்ட்வாட்ச் வரிசையில் புதிதாக நாய்ஸ்ஃபிட் டிவிஸ்ட் கோ (NoiseFit Twist Go) ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.39" இன்ச் கொண்ட HD TFT LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 2.5D கர்வுடு கிளாஸ் டிஸ்பிளேவுடன் மெட்டல் பாடியை கொண்டுள்ளது. இது ரோடேடிங் கிரௌன் பட்டன் உடன் வருகிறது.
நாய்ஸ்ஃபிட் டிவிஸ்ட் கோ: இது ப்ளூடூத் கால்லிங் (Bluetooth calling) அம்சத்துடன் வருகிறது. இது நாய்ஸ் ட்ரூ சிங்க் டெக்னாலஜி (Noise Tru Sync technology) உடன் மிகவும் வேகமாக இணைகிறது. இந்த புதிய நாய்ஸ்ஃபிட் டிவிஸ்ட் கோ (NoiseFit Twist Go) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் டயல் பேட் (Dial pad) அம்சத்துடன் வருகிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை கையில் எடுக்காமல் நம்பரை டயல் செய்து வாய்ஸ் கால்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
நாய்ஸ்ஃபிட் ஆப்ஸ்: இந்த நாய்ஸ்ஃபிட் டிவிஸ்ட் கோ (NoiseFit Twist Go) ஸ்மார்ட்வாட்ச் ஸ்மார்ட்வாட்ச் இன்பில்ட் மைக்ரோபோன் உடன் வருகிறது. இது ஸ்பீக்கர் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ்ஃபிட் ஆப்ஸ் (NoiseFit Apps) உடன் இணக்கமாகிறது. இது 100+ வாட்ச் பேஸ் ஆதரவை கொண்டுள்ளது. இது 24x7 ஹார்ட் ரேட் மானிட்டர் மற்றும் SpO2 அம்சம், ஸ்லீப் ட்ராக்கிங், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மேண்ட் அம்சம் போன்றவற்றை ஆதரிக்கிறது.

100+ ஸ்போர்ட்ஸ் மோட்: இந்த நாய்ஸ்ஃபிட் டிவிஸ்ட் கோ (NoiseFit Twist Go) ஸ்மார்ட்வாட்ச் 100+ ஸ்போர்ட்ஸ் மோட் ஆதரவை வழங்குகிறது. இது வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஆதரவுடன் சிறப்பாக செயல்படுகிறது. இது IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது. இதில் மியூசிக் கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் கேமரா கண்ட்ரோல், கால்குலேட்டர், வெதர் ரிப்போர்ட் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.
விலை: NoiseFit Twist Go இப்போது சிலிகான் ஸ்ட்ராப் உடன் சில்வர் கிரே, ஜெட் பிளாக் மற்றும் ரோஸ் பிங்க் வண்ணங்களிலும், மெட்டாலிக் ஸ்ட்ராப் வகைகள் சில்வர் லிங்க், கோல்டு லிங்க், பிளாக் லிங்க், எலைட் சில்வர் மற்றும் எலைட் பிளாக் வண்ணங்களிலும் வருகின்றன. இது Amazon.in மற்றும் Noise இணையதளத்தில் ரூ. 1,199 என்ற அறிமுக விலையில் கிடைக்கிறது.
ஐபோன் 15 எப்படி வெல்வது: இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை 28ம் தேதி 12 மணிக்கு முன்பாக ப்ரீ-புக் செய்யும் நபர்களுக்கு ஐபோன் 15 வெல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. நீங்கள் வாங்கும் புதிய NoiseFit Twist Go ஸ்மார்ட்வாட்ச் உடன் #NoiseFitTwistGo என்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போஸ்ட் செய்ய வேண்டும். அடுத்தபடியாக இந்த போஸ்டை @go_noise உடன் டேக் செய்ய வேண்டும்.
யாருக்கு கிடைக்கும்: தேர்தெடுக்கப்படும் 2 லக்கி வெற்றியாளர்களுக்கு ஐபோன் 15 வெல்லும் வாய்ப்பு கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. வெற்றியாளரின் விபரங்கள் மார்ச் 9ம் தேதி அமேசான் தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications