Home
News

வாங்குனா இப்படி ஒரு ஃபோர்ஸான வாட்சை தான் வாங்கணும்! விற்பனையில் புது NoiseFit Force!

ஸ்மார்ட்வாட்ச் என்று சொன்னதும் இந்தியர்களுக்கு இந்த பெயர் உடனே வந்து சென்றிருக்கும். அது தான் நாய்ஸ் (Noise) பிராண்ட் ஆகும். நாய்ஸ் நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் பல ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை கொண்டுள்ளது. அதில் ஒரு புதுவரவு தான் நாய்ஸ்பிட் ஃபோர்ஸ்.

NoiseFit Force ஸ்மார்ட் வாட்ச் சாதனம் தற்போது இந்தியாவில் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இது தற்போது அமேசான் தளம் வழியாக வெறும் ரூ.2,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இது ஒரு ப்ளூடூத் கால்லிங் சாதனமாகும். உங்கள் போனிற்கு வரும் அழைப்புகளை ஏற்க இந்த சாதனம் அனுமதிக்கிறது. சரி, இந்த விலைக்கு இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

வாங்குனா இப்படி ஒரு ஃபோர்ஸான வாட்சை தான் வாங்கணும்!

இது வட்ட வடிவ டயலுடன் வருகிறது. இதன் டிஸ்பிளே 1.32' இன்ச் அளவு கொண்ட 360 x 360 பிக்சல்கள் உடைய 386 ppi ஷார்ப்னஸ் உடன் வரும் LCD டிஸ்பிளேவாகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS உடன் இணக்கமானது. இது 300mah அளவு கொண்ட பேட்டரி உடன் வருகிறது. Noise நிறுவனத்தின் தகவல் படி, இந்த NoiseFit Force ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 7 முதல் 8 நாட்கள் வரை நீடித்து நிலைக்கும் ஆயுளை கொண்டுள்ளது.

இந்த சாதனம் ப்ளூடூத் வெர்ஷன் V5.0 உடன் செயல்படுகிறது. இது ப்ளூடூத் கால்லிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இந்த சாதனம் உங்கள் போனிற்கு வரும் அழைப்புகளை ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஏற்க அனுமதிக்கிறது. அதேபோல், உங்கள் போனை கையில் எடுக்காமல், உங்களுக்கு வரும் அழைப்புகளை வாட்ச் கண்ட்ரோல் மூலம் நிராகரிக்கவும் அனுமதிக்கிறது.

டெக்ஸ்ட் மெசேஜ் நோட்டிபிகேஷன்களை படிக்க இது உங்களை அனுமதிக்கிறது. இது தவிர, இதர ஸ்மார்ட் வாட்ச் அம்சங்கள் ஆன அலாரம், டைமர், பைண்ட் மை போன், மியூசிக் கண்ட்ரோல், ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்லீப் மானிட்டர், ஸ்டேப் கவுண்ட்டர், டிஸ்டன்ஸ், ஆக்டிவிட்டி, ஸ்போர்ட்ஸ் மோட் என்று பல அம்சங்களை இது ஆதரிக்கிறது. இது IP67 சான்றுடன், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவையும் கொண்டுள்ளது.

வாங்குனா இப்படி ஒரு ஃபோர்ஸான வாட்சை தான் வாங்கணும்!

இந்த NoiseFit Force ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 100+ வாட்ச் பேஸ் அம்சத்துடன் வருகிறது. உங்களுக்கு விருப்பமான படங்களையும் கஸ்டமைஸ் செய்து, அவற்றை வாட்ச் பேஸ் ஆக பயன்படுத்திக்கொள்ளவும் இந்த சாதனம் உங்களை அனுமதிக்கிறது. NoiseFit Force ஸ்மார்ட் வாட்ச் சாதனம் தற்போது குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் தளம் வழியாக இது வாங்க கிடைக்கிறது.

அமேசான் தளத்தில், சில குறிப்பிட்ட சலுகைக்கு பிறகு இந்த NoiseFit Force ஸ்மார்ட் வாட்ச் சாதனம் தற்போது வெறும் ரூ.2,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் மிரட்டலான அம்சங்களுடன், ப்ளூடூத் கால்லிங் அம்சத்தை எதிர்பார்க்கும் மக்கள், இந்த NoiseFit Force ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை உடனே வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
NoiseFit Force Smartwatch Goes On Sale With Offer Via Amazon India Check Price and Specification Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X