Home
News

வாங்குனா இந்த ஸ்மார்ட்வாட்ச் தான் வாங்கணும்.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் கால்லிங்.. 7 நாள் பேட்டரி.. விலை என்ன

கம்மி விலையில் 1.46' இன்ச் பெரிய AMOLED டிஸ்பிளே, ப்ளூடூத் கால்லிங் (Bluetooth calling), 7 நாள் பேட்டரி (Battery), கணக்கில்லாத வாட்ச் ஃபேஸ் கஸ்டமைசேஷன், 24 x 7 ஹெல்த் கண்காணிப்பு போன்ற பல அம்சங்கள் இந்த வாட்சில் உள்ளது.

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்வாட்ச் மாடலனது நாய்ஸ் (Noise) பிராண்டில் இருந்து இப்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாய்ஸ்ஃபிட் எண்டேவர் (NoiseFit Endeavour) என்ற மிரட்டலான ஸ்மார்ட்வாட்சை பற்றியது. இது புளூடூத் அழைப்பு அம்சத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இந்த வாட்ச் நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 மேக்ஸ் (Noise ColorFit Pro 5 Max) இன் அறிமுகத்தை தொடர்ந்து வெளியாகிறது.

வாங்குனா இந்த ஸ்மார்ட்வாட்ச் தான் வாங்கணும்.. AMOLED டிஸ்பிளே..

இந்த புதிய நாய்ஸ் எண்டேவர் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ஒரு கண்ட்ரோல் கிரௌன் அம்சத்தை ஆதரிக்கும் பட்டன் உடன் வருகிறது. இது புஷ் பட்டன் கொண்ட ஒரு வட்ட டயல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்குகிறது. புதிய நாய்ஸ் எண்டேவர் (NoiseFit Endeavor) ஆனது 1.46' இன்ச் கொண்ட பெரிய AMOLED டிஸ்பிளேவை வழங்குகிறது.

இது கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ் முகங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள நாய்ஸ் ட்ரு சிங்க் (Noise True Sync) தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. இது பாஸ்ட் பேரிங் அம்சம் மற்றும் புளூடூத் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு அம்சத்தை ஆதரிக்கிறது. வாய்ஸ் கால் அம்சத்தை மிகவும் துல்லியமாக வழங்க இன்டெர்னல் மைக் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இது 24×7 ஹார்ட் ரேட் மானிட்டர் கண்காணிப்பு அம்சம், SpO2 அளவீடு அம்சம், ஸ்லீப் மானிட்டர் அம்ச கண்காணிப்பு, மன அழுத்த கண்காணிப்பு மற்றும் பெண் சுழற்சி கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நாய்ஸ் ஹெல்த் சுய்ட் (Noise Health Suite) அம்சத்துடன் வருகிறது. இதில் 100+ ஸ்போர்ட்ஸ் மோட் (sports mode) மற்றும் நாய்ஸ்ஃபிட் (NoiseFit mobile apps) மொபைல் ஆப்ஸ் அம்சத்துடன் வருகிறது.

நாய்ஸ்ஃபிட் எண்டெவர் சிறப்பம்சம் (NoiseFit Endevor specificaiton):
- 1.46″ ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்பிளே
- 600 nits பீக் ஓரைட்னஸ்
- கிரௌன் மற்றும் புஷ் பட்டன்
- நாய்ஸ் ட்ரு சிங்க் (Noise Tru Sync) தொழில்நுட்பம்
- புளூடூத் காலிங்
- Android மற்றும் iOS உடன் இணக்கமானது
- 100+ வாட்ச் ஃபேஸ்
- 24×7 இதய துடிப்பு கண்காணிப்பு,
- SpO2 கண்காணிப்பு,
- ஸ்லீப் மானிட்டர்,
- 100+ ஸ்போர்ட்ஸ் மோட்
- எமெர்ஜென்சி SOS அம்சம்
- IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு
- நோட்டிபிகேஷன் டிஸ்பிளே
- வெதர் ரிப்போர்ட்
- அலாரம்
- கேமரா கண்ட்ரோல்
- மியூசிக் கண்ட்ரோல்,
- கால்குலேட்டர்.

விலை மற்றும் விற்பனை விபரம்:
NoiseFit Endeavour கேமோ பிளாக் (Camo Black), ஜெட் பிளாக் (Jet Black), வின்டேஜ் பிரவுன் (Vintage Brown), டீல் ப்ளூ (Teal Blue) மற்றும் பையரி ஆரஞ்சு (Fiery Orange) வண்ணங்களில் வருகிறது. இது Noise இணையதளத்தில் இருந்து கிடைக்கும் மற்றும் Amazon.in அறிமுக விலையில் ரூ. 2,999 டிசம்பர் 5 முதல் மதியம் 12 மணிக்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
NoiseFit Endeavour With AMOLED always ON display bluetooth calling and 100 watch face feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X