நச்ன்னு 3999 விலையில் இப்படி ஒரு எலைட் Smartwatch-ஆ? அடேங்கப்பா Noise பட்டையை கிளப்புதே!
நாய்ஸ் (Noise) நிறுவனம் புதிதாக நாய்ஸ் விஷன் 3 (Noise Vision 3) என்ற எலைட் ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனத்தை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. எலைட் லுக்கில், தரமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.
வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விபரம், மற்றும் விலை பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம். நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸ் வரிசையில் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் அறிமுகமாகியுள்ளது. Noise Vision 3 மிகப்பெரிய டச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 1.96' இன்ச் அளவு கொண்ட AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ப்ளூடூத் v5.0 இணக்கத்துடன் இயங்கும் வாய்ஸ் கால்ஸ் அம்சத்தையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் பன்ங்க்ஷனல் கிரவுன் பட்டன் உடன் வருகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்வாட்ச் அம்சத்தை ஸ்க்ரோல் செய்துகொள்ளலாம். அட்வான்ஸ் ப்ளூடூத் கால்லிங் அம்சத்துடன் வருகிறது. இது இன்பில்ட் மைக் உடன் வருகிறது. 150+ ஸ்மார்ட்வாட்ச் பேஸ் அம்சத்துடன் வருகிறது. கிளாசிக் பிரவுன், ஜெட் பிளாக் எலைட் எடிஷன், கிளாசிக் பிளாக், கிளாசி சில்வர் எலைட் எடிஷன், ஜெட் பிளாக், பிரோஸ்ட் கிரீன் ஆகிய நிறங்களில் வருகிறது.
பிட்னஸ் பார் அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 100+ ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது. 150 கிளவுட் வாட்ச் பேஸ் அம்சத்துடன் வருகிறது. கஸ்டமைசப்பில் வாட்ச் பேஸ் அம்சத்துடன் வருகிறது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் டஸ்ட் ரசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. கெஷ்டர் கண்ட்ரோல் 2 UI அம்சத்துடன் வருகிறது.
உங்கள் போனை கையில் எடுக்காமலே நேரடியாக உங்கள் கைகளுக்கே அணைத்து தகவல்களையும் கொண்டு சேர்க்கும் படி, இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. வெதர் ரிப்போர்ட், ஸ்டாக் அப்டேட்ஸ், ஸ்டாக் டிராக்கிங், கால்குலேட்டர், மியூசிக் கண்ட்ரோல் போன்ற பல அம்சங்களை இந்த Noise Vision 3 ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. உங்கள் உடலின் ஆரோக்கியத்தை தடை இல்லாமல் கண்காணித்துகொள்ள இந்த வாட்ச் நாய்ஸ் ஹெல்த் சுய்ட் அம்சத்துடன் வருகிறது.
இந்த Noise Vision 3 வாட்ச் சாதனம் 24*7 முழு நேர ஹார்ட் ரேட் கண்காணிப்பு சென்சார் உடன் வருகிறது. இது SpO2 அம்சம், பிரீத் பிராக்ட்டீஸ் அம்சத்துடன், ஸ்ட்ரெஸ் மெஷர்மென்ட், ஸ்லீப் மானிட்டர் போன்ற அம்சங்களை இந்த சாதனம் கொண்டுள்ளது. நாய்ஸ் பிட் ஆப்ஸ் உடன் இந்த சாதனம் இன்னும் ஏராளமான பயனை வழங்குகிறது.
பேட்டரி ஆயுள் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 7 நாள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. ப்ளூடூத் கால்லிங் அம்சத்துடன் Noise Vision 3 ஸ்மார்ட்வாட்ச் 2 நாள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. இது 1 வருட உத்தரவாதத்திடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், கிளாசிக் பிரவுன், கிளாசிக் பிளாக் போன்ற ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ரூ.3,999 விலையில் வருகிறது.
கிளாசி சில்வர் எலைட் எடிஷன், ஜெட் பிளாக் எலைட் எடிஷன் ஆகிய எலைட் எடிஷன் ஸ்மார்ட்வாட்ச் ரூ.4,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








