Home
News

புரட்டி எடுக்கும் லூனா ரிங்.. ஹெல்த் மானிட்டர்.. 6 நாட்கள் பேட்டரி.. டைட்டானியம் பாடி.. என்ன விலை?

ஒரு ஸ்மார்ட்வாட்ச்க்கு நிகரான ஹெல்த் மானிட்டர்கள், வாட்டர் ரெசிஸ்டன்ட், 6 நாட்கள் பேட்டரி பேக்கப், ஆப் கன்ட்ரோல் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் நாய்ஸ் லூனா ரிங் (Noise Luna Ring) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு அம்சங்கள், விற்பனை விவரங்கள் இதோ.

இப்போதெல்லாம், ஸ்மார்ட்வாட்ச் இல்லாத கைகளை பார்க்க முடிவதில்லை. ஏனென்றால், ஸ்மார்ட்வாட்ச்கள் வெறும் பந்தாவுக்காக மட்டுமல்லாமல், ஹெல்த் மானிட்டர்கள், ரீமைண்டர்கள் போன்ற அத்தியாவசிய அம்சங்களுடன் வருகின்றன. ஒரு சிறிய வாட்ச்சில் அவ்வளவு அம்சங்கள் வருவதே வியப்பாக இருக்கும் காலத்தில் அதைவிட சிறிய ரிங்கில் (Rings) அந்த அம்சங்கள் வந்துவிட்டன. அந்த வரிசையில், நாய்ஸ் லூனா ரிங் விற்பனைக்கு வந்துள்ளது.

புரட்டி எடுக்கும் லூனா ரிங்.. ஹெல்த் மானிட்டர்.. 6 நாட்கள் பேட்டரி!

நாய்ஸ் லூனா ரிங் அம்சங்கள் (Noise Luna Ring Specifications): இந்த ஸ்மார்ட் ரிங் அல்ட்ரா-லைட் வெயிட் (Ultra Light Weight) மற்றும் ஸ்லீக் (Sleek) டிசைன் கொண்டுள்ளது. டயமண்ட் கோட்டிங் (Diamond Coating) கொண்ட டைட்டானியம் பாடி (Titanium Body ) கொண்டிருக்கிறது.

இந்த ரிங்கில் 70+ ஹெல்த் மெட்ரிக்ஸ் (Health Metrics) கொடுக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் லேவ் எனர்ஜி 5 (BLE 5) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரீன் எல்இடி கொண்ட ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), ரெட் எல்இடி கொண்ட பிளட் ஆக்ஸிஜன் சென்சார் (Blood Oxygen Sensor) வருகிறது.

அதோடு இன்பிராரெட் ஃபோட்டோபிளெதிஸ்மோகிராபி (Photoplethysmography) சென்சார் மற்றும் ஸ்கின் டெம்பரேச்சர் சென்சார் (Skin Temperature Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆக்சிஸ் ஆக்சிலேரோமீட்டர் (3 Axis Accelerometer) வருகிறது. இந்த டேட்டாக்களை பகுப்பாய்வு செய்ய இன்-பில்ட் அல்கோரிதம் (In-built Algorithms) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரிங்குடன் கனெக்ட் செய்யும் ஸ்மார்ட்போன்களில் ஐஓஎஸ் 14 (iOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 6 (Android 6) ஓஎஸ் அல்லது அதற்கு மேலான ஓஎஸ் இருக்க வேண்டும். இந்த நாய்ஸ் லூனா ரிங்கில் 50 மீட்டர்கள் டெப்த் சப்போர்ட் கொண்ட வாட்டர்-ரெசிஸ்டன்ட் (Water-Resistant) வருகிறது.

இதன் மூலம் ஸ்லீப்பிங் மானிட்டரிங் (Sleeping Monitoring), ரெடினஸ் மானிட்டரிங் (Readiness Monitoring), டெய்லி ஆக்டிவிட்டி மானிட்டரிங் (Daily Activity Monitoring), எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO2 Monitoring), ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring) ஆகிவற்றை செய்து கொள்ள முடியும்.

இந்த ரிங்கை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 6 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இதனை ஃபுல் சார்ஜ் செய்ய 90 முதல் 12 நிமிடங்கள் தேவைப்படும். இந்த ரிங் 7 சைஸ்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்காக வயர்லெஸ் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஸ்டார்டஸ்ட் சில்வர் (Stardust Silver), லூனார் பிளாக் (Lunar Black), மிட்நைட் பிளாக் (Midnight Black) உள்ளிட்ட 5 கலர்களில் கிடைக்கிறது.

இதன் சைஸ்களுக்கு ஏற்றவாறு 3 முதல் 4 கிராம் வரையில் எடைக் கொண்டுள்ளது. 8 மிமீ அகலம், 2.8 மிமீ தடிமன் கொண்டுள்ளது. இந்த ரிங்கை லூனா ரிங் ஆப் (Luna Ring App) மூலம் பயன்படுத்தலாம். ஹெல்த் மானிட்டரிங் டேட்டாக்களை அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த நாய்ஸ் லூனா ரிங்கின் விலை ரூ.21,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அறிமுக சலுகையாக வெறும் ரூ.14,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது. கோநாய்ஸ்.காம் (gonoise.com) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்மார்ட்வாட்ச் மீது ஆர்வம் இல்லாதவர்கள் அதற்கு மாற்றாக இந்த ஸ்மார்ட் ரிங்கை பயன்படுத்தலாம், ஆனால், சற்று விலை கூடுதலாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise Luna Ring With Health and Fitness Tracker On Sale in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X