Home
News

ஸ்மார்ட்வாட்சை தூக்கி எறிங்க.. ஸ்மார்ட்டான Noise Luna Ring வந்துவிட்டது.. ஆர்டர் உடனே போடலாமா?

நாய்ஸ் (Noise) நிறுவனம் இப்போது இந்தியாவில் புதிய புரட்சியை உருவாக்கப்போவது தெள்ளத்தெளிவாக தெரிய வந்துள்ளது. ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) பயனர்கள் எல்லாம் இனி விரைவாக ஸ்மார்ட் ரிங் (Smart Ring) மாடலுக்கு மாறப்போகிறார்கள். Noise இப்போது லூனா ரிங் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் (Smasung) நிறுவனம் மற்றும் போட் (boat) நிறுவனம் சமீபத்தில் அதன் ஸ்மார்ட் ரிங் சாதனங்களின் மாடல்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து அடுத்தபடியாக, இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாய்ஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட் ரிங் சாதனமான நாய்ஸ் லூனா ரிங் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்வாட்சை தூக்கி எறிங்க.. ஸ்மார்ட்டான Noise Luna Ring வந்துடுச்சு

இது ஒரு பிட்னஸ் மற்றும் ஹெல்த் ட்ராக்கர் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிட்னஸ் மற்றும் ஹெல்த் டிராக்கர் அம்சத்திற்காக ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்கள், விரைவில் அவர்கள் கைகளில் உள்ள ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை கழட்டி எறிந்துவிட்டு. விரைவாக இந்த லூனா ஸ்மார்ட் ரிங் சாதனத்தை அணிய துவங்கப் போகிறார்கள்.

ஸ்மார்ட் ரிங் பிரிவிற்குள் நாய்ஸ் நிறுவனம் முதல் முறையாக கால்பதிக்கிறது. அதன் முதல் சாதனமான இந்த நாய்ஸ் லூனா ரிங் (Noise Luna Ring) சாதனத்தின் மூலம் இந்தியாவில் நிறுவனம் புதிய மாற்றத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிகிறது. நாய்ஸ் லூனா ரிங் அதன் அல்ட்ரா-லைட்வெயிட் மற்றும் 3 மிமீ நேர்த்தியான வடிவமைப்புடன் வசதியான பொருத்தத்தை வழங்குகிறது.

அதன் போர்-ஜெட் தர டைட்டானியம் மற்றும் வைரம் போன்ற உறுதியான ஜொலிக்கும் வடிவமைப்பை பெற்றுள்ளது. இது ஸ்கிராட்ச் மற்றும் அரிப்புக்கு எதிராக நீடித்து உழைக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்ஃபிராரெட் ஃபோட்டோபிளெதிஸ்மோகிராபி (PPG - Infrared Photoplethysmography) சென்சார்கள் உடன் வருகிறது.

ஸ்மார்ட்வாட்சை தூக்கி எறிங்க.. ஸ்மார்ட்டான Noise Luna Ring வந்துடுச்சு

இது தோல் வெப்பநிலை சென்சார்கள் மற்றும் 3 ஆக்சிஸ் ஆஸிலோமீட்டர் உள்ளிட்ட மேம்பட்ட சென்சார்களுடன், இது உடலியல் பிரிக்வேன்சிகளைத் துல்லியமாகக் கண்காணிக்கிறது. இந்த நாய்ஸ் லூனா ரிங் சாதனத்தின் உள் அமைப்பு துல்லியமான சென்சார்களால் அமைக்கப்பட்டுள்ளது. Noise இன் இந்த லூனா ரிங் மூன்று முக்கிய மதிப்பெண்களில் செயல்படக்கூடிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.

பயனரின் தூக்கம் (sleep), தயார்நிலை (Readiness) மற்றும் ஆக்டிவிட்டி (activity), மேம்பட்ட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான கண்காணிப்பு சாதனமாக இந்த டிவைஸ் வெளிவந்துள்ளது. இந்த சாதனம் பல்வேறு நிறங்களில் வருகிறது. இதன் வெப்பநிலை சென்சார் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் உடல் வெப்பநிலை மாற்றங்களை அளவிடுகிறது.

இது தவிர, இதில் உள்ள இதயத் துடிப்பு மற்றும் SpO2 சென்சார்கள் முக்கிய ஆரோக்கிய கண்காணிப்புகளை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து கண்காணிக்கின்றன. இது நீடித்து நிலைக்கும் 7 நாள் ஆயுள் கொண்ட பேட்டரி உடன் வருகிறது. 60 நிமிடத்தில் இந்த ஸ்மார்ட் ரிங் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது. இது NoiseFit ஆப்ஸ் உடன் இயங்குகிறது. இந்த லூனா ஸ்மார்ட் ரிங் iOS 14 மற்றும் அதற்கு மேற்பட்ட சாதனங்களுடன் இணக்கமானது.

ஸ்மார்ட்வாட்சை தூக்கி எறிங்க.. ஸ்மார்ட்டான Noise Luna Ring வந்துடுச்சு

அதேபோல், ஆண்ட்ராய்டு போன்களை பற்றி பேசுகையில், இது ஆண்ட்ராய்டு 6 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளுடன் இணக்கமானது. புளூடூத் லோ-எனர்ஜி (BLE 5) தொழில்நுட்பத்தால் இது இயக்கப்படுகிறது. இது 50மீ வரை வாட்டர் ரெசிஸ்டன்ஸ் திறன் கொண்டது. Noise இன் இந்த சமீபத்திய தயாரிப்பு Philips Biosensing தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

இது ஏழு அளவுகள் மற்றும் ஐந்து வண்ணங்களில் வருகிறது. இது சன்லைட் கோல்டு (Sunlit Gold), றோஸ் கோல்டு (Rose Gold), ஸ்டர்டாஸ்ட் சில்வர் (Stardust Silver), லூனார் பிளாக் (Lunar Black) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) போன்ற நிறங்களில் இது வாங்க கிடைக்கும். இதன் முன்பதிவு இன்று முதல் Noise தளத்தில் துவங்கியுள்ளது. அறிமுக சலுகையாக நிறைய தள்ளுபடியையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise Luna Ring With Fitness and Health Tracking Feature Launched In India Check Pre-Booking and Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X