Noise i1 ஸ்மார்ட் கிளாஸ் கூலான அம்சங்களுடன் அறிமுகம்.. இதை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

|

Noise என்ற பிராண்ட் இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. ஆனால், சில வருடங்களுக்கு முன் இந்த இந்திய நிறுவனம் பற்றி யாருமே அறிந்திருந்ததில்லை என்றாலும், இப்போது இந்தியாவின் 5 தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தெரியாதவர்களுக்கு, Noise என்பது அணியக்கூடிய ஸ்மார்ட் பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான ஒரு இந்திய நிறுவனம் ஆகும்.

Noise பிராண்ட் உண்மையிலேயே நம்பகமான பிராண்ட் தானா?

Noise பிராண்ட் உண்மையிலேயே நம்பகமான பிராண்ட் தானா?

இப்போது, நாய்ஸ் நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் முதல் முறையாக ஸ்மார்ட் கிளாஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் கிளாஸ் சாதனத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளது, இந்த விலையில் இதை வாங்குவது சிறந்ததுதானா என்பதைத் தெரிந்துகொள்ளலாம் வாங்க. விஷயத்திற்கு நேரடியாக செல்வதற்கு முன்பாக, Noise என்ற பிராண்ட் உண்மையிலேயே நம்பகமான பிராண்ட் தானா என்று சிலருக்குச் சந்தேகங்கள் இருக்க கூடும்,

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி

சகோதரர்கள் அமித் மற்றும் கௌரவ் காத்ரியால் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. முதலில் ஸ்மார்ட்போன் கேஸ், கவர்கள் மற்றும் பாகங்கள் விற்பனை செய்த Noise என்ற நிறுவனம், 2018 ஆம் ஆண்டில், பிராண்ட் ஒரு முன்னோடி நிறுவனமாக மாறியது. சந்தையில் உள்ள சில பெரிய உலகளாவிய நிறுவனங்களுடன் போட்டியிட நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை விற்பனை செய்யத் தொடங்கியது.

இந்தியாவின் முதல் 5 பிராண்டுகளில் Noise

இந்தியாவின் முதல் 5 பிராண்டுகளில் Noise

ஜூன் 2020 படி, இந்தியாவில் குறைந்த விலையில் அதிக ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களை விற்பனை செய்த நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ப்ளூடூத் இயர்பட்ஸ் விற்பனையிலும் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. தரமான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரித்து, தனக்கென்ற சொந்த இடத்தை நிறுவியதன் மூலம் இந்தியாவின் முதல் 5 பிராண்டுகளில் Noise நிறுவனமும் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

முதல் ஸ்மார்ட் கிளாஸ் கண்ணாடி

முதல் ஸ்மார்ட் கிளாஸ் கண்ணாடி

Noise இன்று தனது முதல் ஸ்மார்ட் கிளாஸ் கண்ணாடியான 'i1' என்ற சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நுகர்வோருக்குத் தனித்துவமான மற்றும் ஃபேஷன் முன்னோக்கிய தொழில்நுட்ப அனுபவத்தை வழங்குவதற்காக Noise Labs இன் கீழ் உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட் கிளாஸ் சாதனமாகும். Noise நிறுவனத்தின் கூற்றுப்படி, i1 ஸ்மார்ட் கிளாஸ் சாதனம் ஸ்டைலான தோற்றத்தை வழங்குவது மட்டுமல்லாமல்,

100% வரை ஏன் சார்ஜ் செய்ய கூடாது தெரியுமா? இந்த மோசமான சார்ஜிங் பழக்கங்களை உடனே மாற்றுங்கள்100% வரை ஏன் சார்ஜ் செய்ய கூடாது தெரியுமா? இந்த மோசமான சார்ஜிங் பழக்கங்களை உடனே மாற்றுங்கள்

புதிய Noise i1 ஸ்மார்ட் கிளாஸ்

புதிய Noise i1 ஸ்மார்ட் கிளாஸ்

ஹேண்ட்ஸ் ஃப்ரீ அழைப்பு, மேக்னெட்டிக் சார்ஜிங், மியூசிக் பிளேயர் போன்ற பல அம்சங்களையும் வழங்குகிறது. இந்த புதிய Noise i1 ஸ்மார்ட் கிளாஸ் சாதனம் ரூ. 5,999 என்ற விலைக்கு இப்போது சலுகை விலையுடன் வாங்கக் கிடைக்கிறது. இது இப்போது Noise பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லிமிடெட் எடிஷன் பிரிவின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த i1 ஸ்மார்ட் கிளாஸ் சாதனம் ஒரு லிமிடெட் எடிஷன் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Noise i1 லிமிடெட் எடிஷன் தயாரிப்பா?

Noise i1 லிமிடெட் எடிஷன் தயாரிப்பா?

இந்த சாதனம் ஒரு லிமிடெட் எடிஷன் தயாரிப்பு என்பதால் அதை வாங்குவதற்கு நிறுவனத்திடமிருந்து 10 இலக்க இன்வைட் கோட் தேவை. இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் இரண்டு வடிவங்களில் கிடைக்கின்றன. Noise i1 ஆனது ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல், மோஷன் எஸ்டிமேஷன், மோஷன் கரெக்ஷன், அழைப்புகளுக்கான மைக்ரோஃபோன், மேக்னெட்டிக் சார்ஜிங் மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

Noise i1 சிறப்பம்சங்கள்

Noise i1 சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட் கிளாஸில் 47 கிராம் எடை கொண்ட கண்கண்ணாடிகள் தனித்தனி மைக் உடன் ஃபிரேமில் சேர்க்கப்பட்டுள்ளது. இது iOS மற்றும் Android உடன் இணைந்து வேலை செய்கிறது. இது புளூடூத் 5.1 வெர்ஷன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒன்பது மணிநேரம் வரை நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. கூடுதலாக, இது பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிக்கப்படுகிறது.

வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ்

வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ்

Noise நிறுவனத்தின் தகவல்படி, வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இது 120 நிமிட மியூசிக் பிளேபேக் அம்சத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸின் காது பக்கத்தில் இசையைக் கேட்க ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. வாய்ஸ் கால் அழைப்புகள் ஏற்கும் போது, இது பேசும் நபர்களின் குரலை மிக துல்லியமாகக் கேட்க அனுமதிக்கிறது. முன்பே சொன்னது போல், இதில் மைக் பொருத்தப்பட்டுள்ளது.

32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.9,999 மட்டுமா? என்ன பிராண்ட் எப்போ வாங்கலாம்? இதோ முழு விபரம்32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.9,999 மட்டுமா? என்ன பிராண்ட் எப்போ வாங்கலாம்? இதோ முழு விபரம்

99 சதவீத சூரிய கதிர் பாதுகாப்பு

99 சதவீத சூரிய கதிர் பாதுகாப்பு

இந்த ஸ்மார்ட் சன் கிளாஸ்கள் Noise Labs மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவை UVA/B லென்ஸ்கள் உடன் வருகிறது. இது உங்களின் கண்களை 99 சதவீத சூரிய கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது. கூடுதலாக, இது ப்ளூ லைட் பில்டரிங் கொண்ட தெளிவான லென்ஸ்கள் உடன் வருகிறது. இது லேப்டாப், டிவி, கம்ப்யூட்டர் ஸ்கிரீன் முன் நீண்ட நேரம் அணியும் போது கண் சோர்வைக் குறைக்க உதவுகிறது. இது வட்டம் மற்றும் சதுரம் ஆகிய இரண்டும் மாற்றக்கூடிய லென்ஸ்கள் உடன் வருகிறது.

IPX4 மதிப்பீடு பெற்ற ஸ்மார்ட் கிளாஸ்கள்

IPX4 மதிப்பீடு பெற்ற ஸ்மார்ட் கிளாஸ்கள்

Noise i1 ஆனது மல்டி டச் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. இவை இசையை இயக்குவதற்கும், குரல் உதவியாளரைச் செயல்படுத்துவதற்கும், அழைப்புகளை ஏற்கவும் நிராகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் IPX4 மதிப்பீடு பெற்றுள்ளது. இது ஸ்பிளாஷ் ரெஸிஸ்டண்ட் எதிர்ப்புத் திறன் கொண்டவை என்பதைக் குறிக்கிறது. Noise i1 iOS மற்றும் Android உடன் இணக்கமானது மற்றும் 10 மீட்டர் வயர்லெஸ் வரம்பைக் கொண்டுள்ளது.

இதன் அசல் விலை என்ன தெரியுமா? அம்மாடியோவ்!

இதன் அசல் விலை என்ன தெரியுமா? அம்மாடியோவ்!

அதுமட்டுமின்றி, இதில் மேக்னெட்டிக் சார்ஜிங், ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல், மோஷன் எஸ்டிமேஷன், மோஷன் காம்பென்சேஷன் (MEMS) மைக்ரோஃபோன் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது இப்போது ரூ. 5,999 விலையில் gonoise.com மூலம் வாங்க கிடைக்கிறது. இது நிலையான கருப்பு நிறம் மற்றும் ட்ரான்ஸ்பரென்ட் கண்ணாடிகளுடன் வருகிறது. Noise இணையதளம் இதன் அசல் விலை ரூ.12,999 என்று குறிப்பிட்டுள்ளது.

நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

Noise நிறுவனத்தின் அறிமுக சலுகையாக 53% தள்ளுபடியைத் தொடர்ந்து இதன் விலை ரூ. 5,999 ஆக குறைகிறது. இயர்போன்ஸ் அல்லது இயர்பட்ஸ் அணிந்து காதில் வலி ஏற்படுகிறது அல்லது தொந்தரவு ஏற்படுகிறது என்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட் கிளாஸ் ஒரு நல்ல தேர்வு. ஸ்மார்ட்டாக டிரெண்டியாக ஸ்டைலாக இருக்க விரும்பும் நபர்களுக்கு இது நல்ல சாய்ஸ். இந்த ஸ்மார்ட் கிளாஸ் Titan EyeX smart glass மற்றும் Qubo Go Audio sunglasses உடன் போட்டியிடும்.

Best Mobiles in India

English summary
Noise Launches i1 First Pair Of Smart Eyewear Glasses In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X