Home
News

ஒரே ஒரு அம்சத்தால் Smartwatch கலாச்சாரமே மாறப்போகிறது! பட்டையை கிளப்பும் புது Noise ColorFit Ultra 3!

ஸ்மார்ட்வாட்ச்-களின் (Smartwatch) பரிணாமம் கொஞ்சம் கொஞ்சமாக புதுமையடைந்து வருகிறது. உதாரணமாக முதலில் ஸ்மார்ட்வாட்ச்கள் வெறும் ஃபிட்னஸ் பேண்ட் ஆக மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்தது. பிறகு இதில் வாய்ஸ் காலிங் அம்சம்மெல்லாம் வர துவங்கியது. இப்போது ஒரு புது அம்சம் புதிய-ஸ்மார்ட்வாட்ச்களில் களமிறங்க துவங்கியுள்ளது.

அப்படி என்னப்பா புது அம்சம்? என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு கேட்கிறது. வாருங்கள் சொல்கிறோம். ஸ்மார்ட்வாட்ச்களில் இப்போது ஃபன்க்ஷனால் கிரௌன் (Functional Crown) இருப்பது தான் புது ட்ரெண்டாகிவிட்டது. ஸ்மார்ட்வாட்சின் பக்கவாட்டில் சுழலும் கிரௌன் பட்டன்களை வழங்க சில நிறுவனங்கள் துவங்கியுள்ளன. இது மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரே ஒரு அம்சத்தால் Smartwatch கலாச்சாரமே மாறப்போகிறது!

Noise பிராண்ட், இந்தியாவில் அதன் ColorFit தொடரில் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா 3 (Noise ColorFit Ultra 3) என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது. இந்த Noise ColorFit Ultra 3 ஆனது Noise ColorFit Ultra 2 Buzz ஸ்மார்ட்வாட்சிற்குப் பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம், Noise பிரீமியம் அம்சங்களையும் அனுபவங்களையும் பயனர்களுக்கு மலிவு விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த Noise ColorFit Ultra 3 ஸ்மார்ட்வாட்ச் இன் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது 1.96' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது புளூடூத் காலிங் மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது. இது ஒரு சதுர பளபளப்பான மெட்டாலிக் சேஸிஸ் மற்றும் ஃபன்க்ஷனால் கிரௌன் உடன் வருகிறது. டிஸ்பிளே பிரகாசத்தை நீங்கள் தேர்வு செய்ய 4 வெவ்வேறு AOD அம்சத்துடன் ஆல்வேஸ் ஆன் ஆதரவை வழங்குகிறது. இது 150+ வாட்ச் பேஸ்களையும் ஆதரிக்கிறது.

உங்கள் விருப்பப்படி, சிலிகான், லெதர் அல்லது மெட்டாலிக் ஸ்ட்ராப் களுடன் ஸ்மார்ட்வாட்சை இணைக்க இந்த சாதனம் அனுமதிக்கிறது. Noise ColorFit Ultra 3 புளூடூத் காலிங் அம்சத்துடன்வருகிறது. இது TruSync அனுபவம் மூலம் தெளிவான மற்றும் நிலையான குரல் அழைப்புகளை வழங்குவதாக Noise கூறியுள்ளது. இது புளூடூத் 5.3 உடன் இயங்குகிறது. இது 30 ஸ்டாண்ட்பை டைம் நேரத்துடன் 7 நாட்கள் வரை நீடிக்கும், 300mAh பேட்டரியை பேக் செய்துள்ளது.

ஒரே ஒரு அம்சத்தால் Smartwatch கலாச்சாரமே மாறப்போகிறது!

Noise ColorFit Ultra 3 ஸ்மார்ட்வாட்ச் அதன் தனியுரிம Noise Health Suite இன் கீழ் ஏராளமான உடற்பயிற்சி அம்சங்களை வழங்குகிறது. இது 100+ ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது. இதில் SpO2 மானிட்டர், இதய துடிப்பு சென்சார் போன்ற அம்சங்கள், ஸ்டெப் டிராக்கர், ஸ்லீப் மானிட்டர், செயல்பாட்டு வரலாறு மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. இது அதிகாரப்பூர்வ IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது .

ரிமோட் கேமரா ஷட்டர், DND மோட், கேஸ்டர் கண்ட்ரோல், போன்ற அம்சங்களுடன் இந்த Noise ColorFit Ultra 3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் ரூ.4,499 என்ற அறிமுக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுக விலையானது Noise அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆனால், Amazon மற்றும் ஆஃப்லைன் கடைகள் மூலம் கிடைக்கும் விலைகள் பட்டியல் இதோ. லைஃப்ஸ்டைல் எடிஷன் மாடலின் விலை ரூ.4,499. கிளாசிக் எடிஷன் விலை ரூ.4,999 மற்றும் எலைட் எடிஷன் விலை ரூ.5,499 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise ColorFit Ultra 3 With AMOLED Display and Bluetooth Calling Launched In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X