Home
News

தட்டித்தூக்கும் அம்சங்கள்.. ஆனால் பட்ஜெட் விலை.. புதிய Noise ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

பிரபல அசெஸ்சரிஸ் (Accessories) நிறுவனமான நாய்ஸ் (Noise), தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவில் அறிமுகம் செய்யதுள்ளது. நாய்ஸ் கலர்ஃபிட் குவாட் கால் (Noise ColorFit Quad Call) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் டிஃஎப்டி டிஸ்பிளே, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்களை கொண்டிருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

பெரும்பாலான மக்களுக்கு ஸ்மார்ட்வாட்ச்கள் (Smartwatch) பயன்படுத்துவது மிகவும் பிடித்துபோய் விட்டது. ஏனென்றால், ஸ்மார்ட்வாட்ச்களில் அவ்வளவு சிறப்பான அம்சங்கள் (Specifications) கொடுக்கப்படுகின்றன. நமது உடல்நலத்தில் கவனம் செலுத்தும் விதமாக, ஸ்மார்ட்வாட்ச்களில் ஹாட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் பிரஷர் மானிட்டர் (Blood Pressure Monitor), ஆக்சிஜன் லெவல் மானிட்டர் (Oxygen Level Monitor) , பாடி டெம்பரேச்சர் மானிட்டர் (Body Temperature Monitor) , ஸ்லீப்பிங் டைம் டிராக்கிங் (Sleeping Time Tracking), ஸ்டெப்ஸ் & காலோரிஸ் டிராக்கிங் (Step and Calorie Tracking) உள்ளிட்டவை உள்ளன.

தட்டித்தூக்கும் அம்சங்கள்.. ஆனால் பட்ஜெட் விலை.. புதிய Noise வாட்ச்!

பெண்களுக்காக மென்ஸ்சுரல் டிராக்கரும் (Menstrual Tracker) ஸ்மார்ட்வாட்ச்களில் உள்ளது. இவ்வளவு இருந்தும் புதுப்புது அம்சங்களை ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு நிருவவனங்கள் கொண்டுவருகின்றன. அப்படி நாய்ஸ் நிறுவனம், மெட்டாலிக் டிசைனில் அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்வாட்ச்சை மலிவான விலையில் களமிறக்கியிருக்கிறது. இந்த வாட்ச்சின் அம்சங்கள் பின்வருமாறு.

நாய்ஸ் கலர்ஃபிட் குவாட் கால் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள். இந்த வாட்ச் ஸ்லீக் மெட்டாலிக் டிசைனில் (sleek metallic design) உருவாக்கப்பட்டுள்ளது. 1.81 இன்ச் டிஃஎப்டி (TFT) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ப்ளூடூத் காலிங் (Bluetooth calling) வசதி உள்ளது. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI voice assistant) உள்ளது.

260mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்து பயன்படுத்தினால், தொடர்ந்து 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். இந்த நாய்ஸ் கலர்ஃபிட் குவாட் கால் ஸ்மார்ட்வாட்ச்சில் ஸ்லீப் மானிட்டர், ஹார்ட் ரேட் மானிட்டர், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர், ப்ரீத்திங் மானிட்டர், ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டர், மென்சுரல் டிராக் மானிட்டர் ஆகிய ஹெல்த் மானிட்டர்கள் உள்ளன.

100 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. IP67 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டீப் வைன் ( Deep Wine), கிரே (Gray), ரோஸ் பிங்க் (Rose Pink), ஜெட் பிளாக் (Jet Black), சில்வர் (Silver) மற்றும் ஸ்பேஸ் ப்ளூ (Space Blue) ஆகிய ஆறு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் குவாட் ஸ்மார்ட்வாட்ச்சின் விலையை பொறுத்தவரையில் ரூ. 1,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமேசான் மற்றும் நாய்ஸ் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise ColorFit Quad Call Smartwatch 7 days battery launched in India here is full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X