ப்ளூடூத் காலிங் உடன் புதிய ColorFit Pro 4 மற்றும் ColorFit Pro 4 Max.. விலை இவ்ளோ கம்மியா?

|

குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ப்ளூடூத் இயர்போன்ஸ் சாதனங்களை விற்பனை செய்வதில் இப்போது Noise நிறுவனத்திற்கு நிகரான நிறுவனம் இந்தியாவில் இல்லையென்றே நாம் கூறலாம். குறைந்த விலையில் அட்டகாசமான லுக் மற்றும் அம்சங்களுடன், பிரகாசமான நிறங்களில் ஸ்மார்ட் வாட்ச்களை தொடர்ந்து அறிமுகம் செய்து Noise நிறுவனம் தனக்கான ஒரு தனி இடத்தை இந்த சந்தையில் பிடித்துவிட்டது.

Noise வழங்கும் புதிய ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ்கள்

Noise வழங்கும் புதிய ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ்கள்

இப்படி இந்தியாவிற்குள் பிரபலமடைந்த Noise நிறுவனம் இந்தியாவில் அடுத்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனமாக ColorFit Pro 4 மற்றும் ColorFit Pro 4 Max ஆகிய இரண்டு புதிய வாட்ச்களை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் இதன் முந்தைய மாடலை விட பெரிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. சரியாக சொல்ல போனால், ColorFit Pro 4 ஸ்மார்ட் வாட்ச் 1.72' இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

முதல் முறையாக இவ்வளவு பெரிய டிஸ்பிளே

முதல் முறையாக இவ்வளவு பெரிய டிஸ்பிளே

அதேபோல், ColorFit Pro 4 Max ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ColorFit Pro 4 டிஸ்பிளேவை விட பெரிய சைசில் வருகிறது. ColorFit Pro 4 Max ஸ்மார்ட் வாட்ச் 1.8' இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களின் முக்கியமான சிறப்பம்சமே, இவை இரண்டும் புளூடூத் காலிங் ஆதரவை ஆதரிக்கின்றன. இத்துடன் 100 வகையான ஸ்போர்ட்ஸ் மோடு மற்றும் 100க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் செலெக்ஷனை கொண்டுள்ளன.

Noise ColorFit Pro 4 மற்றும் ColorFit Pro 4 Max விற்பனை எப்போது?

Noise ColorFit Pro 4 மற்றும் ColorFit Pro 4 Max விற்பனை எப்போது?

இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் இந்தியாவில் முதல் முறையாக அடுத்த வாரம் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வாட்ச்கள் அமேசானில் வாங்க கிடைக்கும். இது பல வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. Noise ColorFit Pro 4 மற்றும் Noise ColorFit Pro 4 Max அமேசான் இந்தியா தளம் மற்றும் நிறுவனத்தின் சொந்த இணையதளம் வழியாக வரும் ஜூலை 4 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.

சிறப்பு அறிமுக விற்பனையின் சலுகை

சிறப்பு அறிமுக விற்பனையின் சலுகை

சிறப்பு அறிமுக விற்பனையின் சலுகையாக Noise ColorFit Pro 4 ஸ்மார்ட் வாட்ச் வெறும் ரூ. 3,499 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சார்கோல் பிளாக், டீப் ஒயின், மிட்நைட் ப்ளூ, மின்ட் கிரீன், ரோஸ் பிங்க், சில்வர் கிரே, சன்செட் ஆரஞ்சு மற்றும் டீல் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கும். அதேபோல், Noise ColorFit Pro 4 Max வாட்ச் சாதனம் அறிமுக சலுகையில் ஒரு பகுதியாக ரூ. 3,999 விலையில் கிடைக்கும். இது நேவி கோல்ட், ரோஸ் கோல்ட், சில்வர் கிரே மற்றும் விண்டேஜ் பிரவுன் வண்ணங்களில் கிடைக்கும்.

Noise ColorFit Pro 4 வாட்ச் அம்சங்கள்

Noise ColorFit Pro 4 வாட்ச் அம்சங்கள்

Noise வழங்கும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் 60Hz புதுப்பிப்பு வீதம், 500 nits பிரைட்னஸ் உடன் 331 ppi பிக்சல் அடர்த்தியுடன் 1.72' இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. கலர்ஃபிட் ப்ரோ 4 வாட்சின் மெனுவிற்கு செல்லவும் மற்றும் வாட்ச் பேஸ்களை மாற்றவும் பயன்படுத்தக்கூடிய பல டச் கண்ட்ரோல் செயல்பாட்டுடன் இது வருகிறது. இது புளூடூத் அழைப்பு செயல்பாட்டையும் ஆதரிக்கிறது. இது புட்பால், சைக்ளிங், ரன்னிங் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 100 ஸ்போர்ட்ஸ் மோட்களுடன் வருகிறது.

Noise Health Suite அம்சம் கூட இருக்கா?

Noise Health Suite அம்சம் கூட இருக்கா?

இத்துடன் இதில் இதய துடிப்பு சென்சார் மற்றும் ஸ்லீப் மானிட்டர் போன்ற அம்சங்களும் இதில் இருக்கிறது. Noise Health Suite அம்சமும் இதில் உள்ளது. அலாரம், ஸ்டாக் அப்டேட்கள் போன்ற பல அம்சங்களை இந்த வாட்ச் கொண்டுள்ளது. Noise ColorFit Pro 4 Max ஸ்மார்ட் வாட்சின் அம்சங்களை பற்றிப் பார்க்கையில், இந்த டிவைஸ் 1.8' இன்ச் அளவு கொண்ட பெரிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது ஒரு Noise ஸ்மார்ட்வாட்ச்சில் இதுவரை இல்லாத மிகப்பெரிய டிஸ்பிளேவாகும்.

கம்மி விலையில் ஒரு பெஸ்ட் ஸ்மார்ட் வாட்ச்

கம்மி விலையில் ஒரு பெஸ்ட் ஸ்மார்ட் வாட்ச்

இதில் Amazon Alexa வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் புளூடூத் காலிங் ஆதரவைப் பெறுகிறது. இந்த டிவைஸும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களும் இதில் இருக்கிறது. இந்த டிவைஸில் இருக்கும் மற்றொரு முக்கியமான அம்சம், தாங்க முடியாத வெளிப்புற சத்தத்தைக் கண்டறியும் போது உங்களுக்குத் தெரிவிக்கும் அம்சத்தை உள்ளடக்கியது. ஸ்மார்ட்வாட்ச் IP68-மதிப்பிடப்பட்ட நீர்-எதிர்ப்பு வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 150 க்கும் மேற்பட்ட வாட்ச் முகங்களைப் பெறுகிறது.

Best Mobiles in India

English summary
Noise ColorFit Pro 4 and ColorFit Pro 4 Max with Bluetooth Calling Launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X