அடேங்கப்பா.. சத்தமின்றி மெசேஜஸ் செயலியில் புதிய வசதியை கொண்டு வந்த கூகுள்.. முழு விவரம்..
வாட்ஸ்அப், சிக்னல் போன்ற குறுந்தவல் செயலிகளுக்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் தனது மெசேஜஸ் ஆப் செயலியில் (Google Messages) தொடர்ந்து புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் மெசேஜஸ் ஆப் செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
அதேபோல் கூகுளின் மெசேஜஸ் செயலியில் ஆர்.சி.எஸ் எனப்படும் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.. குறிப்பாக வாட்ஸ்அப், சிக்னல் போன்ற செயலிகளுக்குப் போட்டியை வலுப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் மெசேஜஸ் செயலியில் இந்த புதிய வசதியை வழங்கி உள்ளது.

மெசேஜஸ் செயலியில் எமோஜி ரியாக்ஷன்ஸ் அம்சம், யூடியூப் வீடியோக்களை மெசேஜஸ் செயலியில் இருந்தபடி பார்க்கும் வசதி போன்ற ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த வரிசையில் மெசேஜஸ் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் வாய்ஸ் நோட்ஸ் (Voice Notes) அம்சத்தில் தற்போது புத்தம் புதிய வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.
மெசேஜஸ் செயலியில் வாய்ஸ் நோட்ஸ் அம்சம் மூலம் பயனர்கள் சிறிய வாய்ஸ் நோட்-ஐ ரெக்கார்டு செய்து அதனை மெசேஜஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். தற்போது வெளியாகி உள்ள நாய்ஸ் கேன்சலேஷன்(Noise Cancellation) எனும் புதிய வசதி மூலம் பயனர்கள் வாய்ஸ் நோட் ரெக்கார்டு செய்யும் போது வெளிப்புற சத்தத்தை தவிர்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போது முதற்கட்டமாக இந்த நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation) வசதி கூகுள் மெசேஜஸ் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காகச் செயலியில் நாய்ஸ் கேன்சலேஷன் பெயரில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதை பயன்படுத்தும் போது வாய்ஸ் நோட்-களில் வெளிப்புற சத்தம் எதுவும் பதிவாகாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வாய்ஸ் நோட்-இல் வழங்கப்படும் புதிய நாய்ஸ் கேன்சலேஷன் வசதி தற்போது டெஸ்டிங் கட்டத்தில் தான் உள்ளது. எனவே இந்த புதிய வசதி எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த நாய்ஸ் கேன்சலேஷன் வசதி அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் கூகுள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் (Gmail)அக்கவுண்ட்கள் நிரந்தரமாக டெலிட் (Delete) செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கூகுள் நிறுவனம் கொண்டுள்ளது.
குறிப்பாக நிறுவனம் மூலம் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இலவசம் என்பதால், கூகுள் அக்கவுண்ட் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை தொடங்கினால் போதும், கூகுள் நிறுவனத்தின் யூடியூப் (YouTube), குரோம் (Chrome), பிளே ஸ்டோர் (Play Store), டாக்ஸ் (Docs), சீட்ஸ் (Sheets), மேப்ஸ் (Maps) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜிமெயில் அக்கவுண்ட்டை 24 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்தால், அந்த அக்கவுண்ட் நிரந்தரமாக நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படி நீக்கும் பணி வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிமெயில் பயனர்கள் சற்று பரபரப்பு அடைந்துள்ளனர்.
நீங்கள் உங்களது கூகுள் அக்கவுண்ட்டை 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். அதாவது உங்களது ஜிமெயிலை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இதில் இமெயில் அனுப்பதல், பெறுதல் கட்டாயமாகும். அதேபோல கூகுள் டிரைவில் ஆடியோ, வீடியோ, போட்டோ, டாக்குமெண்ட்ஸ் போன்ற டேட்டாக்களை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது, அதை டவுன்லோட் செய்ய மறக்காதீர்கள். கூகுள் அக்கவுண்ட்டுடன் சிங்க் (Sync) செய்யப்பட்டிருக்கும் பிளே ஸ்டோர், குரோம், டாக்ஸ் அல்லது த்ர்ட் பார்ட்டி ஆப்களை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








