தலைவன் வேற ரகம் டோய்.. வெறும் ரூ.999-க்கு இப்படி ஒரு TWS Earbuds-ஆ? காதுல வச்சா ஆளை அசத்துது.. எந்த மாடல்?
நாய்ஸ் (Noise) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஒரு மலிவு விலை TWS இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் சாதனத்தை நாய்ஸ் நிறுவனம் நாய்ஸ் பட்ஸ் ட்ரூப்ர் (Noise Buds Trooper) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. வெறும் ரூ. 1000 விலைக்குள் ஒரு புதிய TWS இயர்பட்ஸ் சாதனத்தை நீங்கள் வாங்க ஆசைப்படுகிறீர்கள் என்றால் தாராளமாக இந்த டிவைஸை நீங்கள் தேர்வு செய்யலாம். காரணம் இது 45 மணி நேர பிளேபேக் நேரத்தோடு வருகிறது. இன்னும் பல அம்சங்களை நிரப்பியுள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நாய்ஸ் பிராண்ட் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் ட்ரூப்ர் TWS இயர்பட்ஸ் (Noise Buds Trooper TWS Earbuds) சாதனம் 13mm டிரைவர்ஸ் உடன் மிகவும் நேர்த்தியான வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் ட்ரூப்ர் (Noise Buds Trooper) சாதனம் குவாட் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்ப (Quad Mic Environmental Noise Cancellation Technology) அம்சத்துடன் வருகிறது.

அஹாஹா.. ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு இந்த புதிய Noise Buds Trooper இயர்பட்ஸ் சாதனத்தில் நாய்ஸ் நிறுவனம் சில அம்சங்களை வழங்கியுள்ளது. அவற்றில், முதலில் குறிப்பிட வேண்டுமென்றால், இந்த இயர்பட்ஸ் இன் வடிவமைப்பை நாம் கட்டாயம் குறிப்பிட வேண்டும். காரணம், இது ரூ.999 விலைக்குள் வைசர் டிசைன் உடன் LED லைட் அம்சத்தை வழங்குகிறது. இது இந்த மலிவு விலையில் கிடைக்கும் ஒரு சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இது கேமிங் மற்றும் வீடியோ அனுபவத்தை சிறக்க செய்யும் ஆடியோ அனுபவத்தை இந்த இயர்பட்ஸ் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனத்தில் நிறுவனம் இன்ஸ்டாசார்ஜ் தொழில்நுட்பத்தை (Instacharge Technology) வழங்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் வெறும் 10 நிமிடங்கள் Noise Buds Trooper இயர்பட்ஸ் சாதனத்தை சார்ஜ் செய்தால் போதும் 150 நிமிட பிளே நேரத்தை உங்களால் அனுபவிக்க முடியும்.
இந்த Noise Buds Trooper TWS Earbuds சாதனம் ஹைப்பர் சிங்க் கனெக்ஷன் தொழில்நுட்பத்துடன் (Hyper Sync connection technology) வருகிறது. இதன் மூலம் உங்கள் சந்தானத்துடன் இந்த இயர்பட்ஸ் வேகமாக இணைகிறது. இது 40ms லோ-லேடன்சி ஆதரவுடன் கேமர்களுக்கான சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இது IPX5 ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது. இது ப்ளூடூத் v5.3 (Bluetooth v5.3) இணக்கத்துடன் வருகிறது.
இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் ட்ரூப்ர் TWS இயர்பட்ஸ் (Noise Buds Trooper TWS Earbuds) சாதனம் 1 வருட வாரன்டியுடன் க்நைட் பிளாக் (Knight Black), மைட்டி வைட் (Mighty White), ஃபையரி எல்லோவ் (Fiery Yellow) மற்றும் ஸ்டோர்ம் கிரெய் (Storm Grey) ஆகிய 4 வண்ணங்களில் வருகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் இப்போது வெறும் ரூ. 999 என்ற மலிவு விலையில் அமேசான் வழியாக மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications