Home
News

பக்கா பிரீமியம்.. பாத்தா பட்ஜெட்.. டச் கன்ட்ரோல்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. நாய்ஸ் கேன்சலேஷன்.. எந்த மாடல்?

நம்ப முடியாத விலையில் டச் கன்ட்ரோல், மெட்டாலிக் டிசைன், நாய்ஸ் கேன்சலேஷன், ஃபாஸ்ட் சார்ஜிங், ஹைப்பர் சிங்க் டெக்னாலஜி போன்ற பிரீமியம் அம்சங்களுடன் நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ (Noise Air Buds Pro SE) இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ அம்சங்கள் (Noise Air Buds Pro SE Specifications): இந்த நாய்ஸ் இயர்பட்ஸ் பிரீமியம் மெட்டாலிக் பினிஷிங் (Metallic Finishing) டிசைன் கொண்டுள்ளது. இதில் 13மிமீ டிரைவர்கள் (13mm Drivers) வருகின்றன. மொபைல், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றில் எளிதாக கனெக்ட் செய்ய ஏதுவாக ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கா பிரீமியம்.. பாத்தா பட்ஜெட்.. டச் கன்ட்ரோல்.. ஃபாஸ்ட் சார்ஜிங்!

அதோடு குயிக் பேரிங் (Quick Pairing) சப்போர்ட்டுக்காக ஹைப்பர் சிங்க் டெக்னாலஜி (Hyper Sync Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரிஸ்டல் கிளியர் காலிங் அனுபவத்துக்காக என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் டெக்னாலஜி (Environmental Noise Cancellation Technology) கொண்ட குவாட் மைக் (Quad Mic) கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சிரி (Siri) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் உள்ளது. இந்த நாய்ஸ் இயர்பட்ஸ் டச் கன்ட்ரோல்ஸ் (Touch Controls) கொண்டுள்ளது. இதன் மூலம் வால்யூம் (Volume), மியூசிக் (Music), கால் (Call) மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) ஆகியவற்றை கன்ட்ரோல் செய்து கொள்ளலாம்.

இந்த இயர்பட்ஸில் அதிகபட்சமாக 30dB வரையில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கும். இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போட் கொண்ட பேட்டரி வருகிறது. இதை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு பிளேபேக் டைம் (Playback Time) டைம் கொடுக்கும்.

இதற்கு டைப் - சி சார்ஜிங் (Type-C) சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. அதோடு இன்ஸ்டாசார்ஜ் (Instacharge) சப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 180 நிமிடங்களுக்கு பிளே டைம் கிடைக்கும். இந்த பட்ஸ் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistance) கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் (Charging case) 33.5 கிராம் எடைக் கொண்டுள்ளது.

அதேபோல இயர்பட்ஸ் தலா 3.3 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே, காதுகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு, இந்த இயர்பட்ஸை பயன்படுத்த முடியும். இதற்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இதை ஆர்டர் செய்தால், இயர்பட்ஸ் (Earbuds), சார்ஜிங் கேபிள் (Charging Cable), யூசர் மேனுவல் (User Manual) மற்றும் வாரண்டி கார்டு (Waranty Card) கொடுக்கப்படுகிறது.

இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ இயர்பட்ஸ் லஸ்டர் பிளாக் (Lustre Black) மற்றும் ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியாவில் இன்று (செப்டம்பர் 29) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பிரீமியம் அம்சங்களை கொண்டிருந்தும், வெறும் ரூ.1,699க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை வெறும் அறிமுக சலுகை மட்டுமேயாகும்.

ஆகவே, விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நாய்ஸ் இயர்பட்ஸ் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் கோநாய்ஸ்.காம் (gonoise.com) ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. மலிவான விலையில் மெட்டாலிக் டிசைன், நாய்ஸ் கேன்சலேஷன், ஃபாஸ்ட் சார்ஜிங், டச் கன்ட்ரோல் போன்ற பிரீமியம் அம்சங்கள் வேண்டும் என்றால், இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ இயர்பட்ஸ் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise Air Buds Pro SE Earbuds With Metallic Finish Sale on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X