சவுண்ட் சும்மா கிழி.. லோவ் பட்ஜெட்டில் ஹை-கிளாஸ் இயர்பட்ஸ்.. 45 ஹவர்ஸ் பேக்கப்.. டச் கன்ட்ரோல்.. எந்த மாடல்?
பட்ஜெட் விலையில் டச் கன்ட்ரோல், நாய்ஸ் கேன்சலேஷன், ஹைபர் சின்ங் டெக்னாலஜி, 45 மணி நேர பிளேபேக் டைம் போன்ற மிரட்டலான அம்சங்களுடன் நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 3 மற்றும் நாய்ஸ் ஏர் பட்ஸ் 3 ஆகிய 2 இயர்பட்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 3 அம்சங்கள் (Noise Air Buds Pro 3 Specifications): இந்த இயர்பட்ஸ் ஸ்லீக் மற்றும் லைட் வெயிட் (Sleek and Light Weight) டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. 13மிமீ டிரைவர்கள் கொண்டுள்ளது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது.
இந்த இயர்பட்ஸ் டச் கன்ட்ரோல் (Touch Control) வசதி கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக 30dB வரையில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் கொண்டுள்ளது. கேமிங் பிரியர்களை கவரும் விதமாக 45ms அல்ட்ரா லோவ் - லேட்டன்சி மோட் (Ultra Low Latency ) வருகிறது.
கிரிஸ்டல் கிளியர் காலிங் அனுபவத்துக்காக குவாட் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மைக்கில் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் டெக்னாலஜி (Environmental Noise Cancellation Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாய்ஸ் இயர்பட்ஸை ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு பிளேபேக் டைம் கொடுக்கும்.
இதற்கு டைப் - சி சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இன்ஸ்டாசார்ஜ் (Instacharge) சப்போர்ட் உள்ளதால், 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலும், தொடர்ந்து 180 நிமிடங்களுக்கு பிளேபேக் டைம் கிடைக்கும். ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப் போன்றவற்றில் நொடியில் கனெக்ட் செய்வதற்காக ஹைபர் சின்ங் டெக்னாலஜி (Hyper Sync Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் குயிக் பேரிங் (Quick Pairing) அட்டகாசமாக இருக்கும். IPX5 தர ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் (Splash and Sweat Resistance) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாய்ஸ் இயர்பட்ஸ்க்கு 1 வருட கம்பெனி வாரண்ட்டி வழங்கப்படுகிறது. அமேசான் (Amazon) மற்றும் நாய்ஸ் தளத்தில் (Noise) தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.
ஸ்பேஸ் பிளாக் (Space Black), சிரின் வைட் (Serene White), ஷேடோ கிரே (Shadow Grey) மற்றும் சேஜ் கிரீன் (Sage Green) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலையை தெரிந்துகொள்வதற்கு முன்பாக நாய்ஸ் ஏர் பட்ஸ் 3 இயர்பட்ஸின் அம்சங்களை தெரிந்துகொள்வோம்.
நாய்ஸ் ஏர் பட்ஸ் 3 அம்சங்கள் (Noise Air Buds 3 Specifications): இந்த இயர்பட்ஸ் லைட் வெயிட் டிசைன் கொண்டுள்ளது. இதிலும் 13மிமீ டிரைவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் வி5.3 கனெக்டிவிட்டி வருகிறது. டச் கன்ட்ரோல் மற்றும் கேமிங் மோட் வருகிறது.

45ms அல்ட்ரா லோவ் - லேட்டன்சி மோட் கொண்டுள்ளது. என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் டெக்னாலஜி கொண்ட குவாட் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 45 மணி நேரத்துக்கு பிளே பேக் டைம் கொடுக்கும். இதற்கும் டைப் - சி சார்ஜிங் சப்போர்ட் மற்றும் இன்ஸ்டா சார்ஜ் வசதி இருக்கிறது.
இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 200 நிமிடங்களுக்கு பிளேபேக் டைம் கிடைக்கும். குயிக் பேரிங்குக்காக ஹைபர் சிங்க் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. IPX5 தர ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் வருகிறது. இதற்கும் 1 வருட கம்பெனி வாரண்ட்டி கொடுக்கப்படுகிறது.
இந்த இயர்பட்ஸ் சிரின் வைட் மற்றும் ஜெட் பிளாக் ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலையை பொறுத்தவரை ரூ.1,399ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 3 இயர்பட்ஸ் விலை ரூ.1,799ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு இயர்பட்ஸ்களையும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் வாங்கிக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications