43-இன்ச் ஸ்மார்ட் டிவி: வெறும் ரூ.14,999-விலையில் அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.!
20வாட்ஸ் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு மலிவு விலையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் நோபல் ஸ்கைடோ என்ற நிறுவனம் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை வெறும் 14,999-விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக எல்ஜி, சியோமி, சாம்சங், டிசிஎல் போன்ற நிறுவனங்களின் 43-இன்ச் டிவி மாடல்களின் விலை சற்று உயர்வாக இருக்கிறது, இதை தெரிந்தகொண்ட நோபிள் ஸ்கைடோ சற்று விலையை குறைத்து ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப உதவியுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது, இப்போது நோபிள் ஸ்கைடோ டிவி மாடலின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

43-இன்ச்:
43-இன்ச் கொண்ட நோபிள் ஸ்கைடோ டிவி மாடல் பெசல்-லெஸ் எல்இடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920 x 1080
பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஏ-பிளஸ் கிரேடு பேனல் மற்றும் சிறந்த வண்ணங்களை வழங்கும் தன்மையுடன் இந்த டிவி மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்:
இந்த ஸ்மார்ட் டிவி மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, பின்பு இஎம்ஐ வசதி மற்றும் தேர்வு செய்யப்பட்ட
வங்கி கார்டுகளை பயன்படுத்தி நோபிள் ஸ்கைடோ டிவி மாடலை வாங்கினால் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
43-இன்ச் கொண்ட நோபிள் ஸ்கைடோ டிவி 60ஜிகாஹெர்ட்ஸ் ஆதரவு மற்றும் வைஃபை, 2-எச்டிஎம்ஐ போர்ட், 2-யுஎஸ்பி போர்ட், போன்ற
பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது, மேலும் இணையதள வசதி கொண்ட ரீமோட் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

ஸ்பீக்கர்கள்:
20வாட்ஸ் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு மலிவு விலையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications