பூமியின் வரலாற்றில் ஏற்படாத மிகப்பெரிய மாற்றம் 2020.! விஞ்ஞானிகள் சொன்ன உண்மை!

|

ஃபெடரல் விஞ்ஞானிகள் வியாழக்கிழமை அறிவித்த அறிவிப்பின் படி, இந்த 2020 ஆம் ஆண்டு பூமி கிரகத்திற்கான வெப்பமான ஆண்டாக இருக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிக வெட்பமான ஆண்டாக, இந்த 2020 ஆம் ஆண்டு இருக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவு. என்ன சொல்கிறது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஃபெடரல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ள அறிவிப்பு

ஃபெடரல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ள அறிவிப்பு

ஃபெடரல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ள அறிவிப்புப்படி கிட்டத்தட்ட 75% பூமியின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த ஆண்டு துவங்கி வெறும் முதல் மூன்று மாதங்கள் மட்டுமே கழிந்துள்ள நிலையில், பூமியின் அதிக வெப்பமான பதிவின் வரலாற்றுப் பட்டியலில் 2020ம் ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டது என்பது விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவலாக இருக்கிறது.

99.9 சதவீதம் பூமியின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

99.9 சதவீதம் பூமியின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

இந்த சமீபத்திய வெப்பநிலை பதிவானது, 2016 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட எல் நினோ (El Niño) வெப்பநிலை ஆண்டை மட்டுமே பின்னுக்குத் தள்ளி உள்ளது என்று தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமான NOAA தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ள வெப்பநிலையை வைத்துக் கணிக்கப்பட்ட தகவல் 99.9 சதவீதம் கண்டிப்பாக நிகழ வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: NOAAhttps://www.noaa.gov/

WHATSAPP இல் அடுத்து களமிறங்க தயாராகும் 2 சக்திவாய்ந்த அம்சங்கள் இவைதான்!WHATSAPP இல் அடுத்து களமிறங்க தயாராகும் 2 சக்திவாய்ந்த அம்சங்கள் இவைதான்!

El Niño என்றால் என்ன ?

El Niño என்றால் என்ன ?

முதலில் El Niño என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளலாம், எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஒரு வானிலை முறை. இந்த நேரத்தில், அசாதாரண காற்று பூமத்திய ரேகையிலிருந்து சூடான மேற்பரப்பு நீரை கிழக்கு மற்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவை நோக்கி நகர்த்துவதற்கு இந்த El Niño காரணமாகிறது. இருப்பினும், இவை இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் வழக்கத்தை விட மிகவும் பலவீனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசாதாரணமான வெப்பநிலை உருவாகுமா?

அசாதாரணமான வெப்பநிலை உருவாகுமா?

முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இந்த ஆண்டின் வெப்பநிலை அசாதாரணமானதாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். குறிப்பாக உலகளாவிய வெப்பநிலையைப் பாதிக்கும் வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் நீரின் இயற்கையான வெப்பமயமாதல் ஒரு வலுவான எல் நினோ இல்லாததால், இந்த ஆண்டு நிச்சயம் பூமியின் வெப்பம் மிகவும் அசாதாரணமானதாக இருக்கும் என்று NOAA இன் சுற்றுச்சூழல் தகவல் தேசிய மையத்தின் டெக் அர்ன்ட் கூறுகிறார்.

iPhone SE 2020 நம்பமுடியாத மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?iPhone SE 2020 நம்பமுடியாத மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

காரணம் இதுதான் - விஞ்ஞானிகள் சொன்ன உண்மை

காரணம் இதுதான் - விஞ்ஞானிகள் சொன்ன உண்மை

பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதங்களும், எல் நினோ உட்படுத்தப்படாத பதிவின் வெப்பமான மாதங்கள் என்று அவர் கூறினார். இந்த அசாதாரணமான பூமி வெப்பத்திற்கு முக்கிய காரணமாக நீண்டகாலமாக நாம் மக்கள் பயன்படுத்தி வரும் புகை படிவ எரிபொருட்களை எரிப்பதிலிருந்து, அதிகப்படியான கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேற்றப்படுவதனால் தான் நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வரலாற்றின் முதல் வெப்பமான ஆண்டாக 2020 இடம் பெறுமா?

வரலாற்றின் முதல் வெப்பமான ஆண்டாக 2020 இடம் பெறுமா?

ஒரு வேலை விஞ்ஞானிகளின் கணிப்புப்படி 2020ம் ஆண்டு வரலாற்றின் முதல் வெப்பமான ஆண்டாக இல்லாவிட்டாலும், பூமியின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஐந்து அதிகப்படியான வெப்பமான ஆண்டுகளில் பட்டியலில் நிச்சயம் 2020 ஆம் ஆண்டு இடம்பெறுவதற்கு 99.9 சதவீத வாய்ப்பு இருப்பதாகவும் NOAA கூறியுள்ளது.

NOAA வெளியிட்ட உலக வெப்பநிலை விபரம்

NOAA வெளியிட்ட உலக வெப்பநிலை விபரம்

இந்த ஆண்டு இதுவரை பூமியின் அதிக வெப்பம் கிட்டத்தட்ட உலகளவில் உள்ளது. குறிப்பாக ஐரோப்பா, ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, அட்லாண்டிக், இந்தியா மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்களின் சில பகுதிகளிலும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான வெப்பநிலை அதிகமாகவே காணப்பட்டுள்ளது என்று NOAA தெரிவித்துள்ளது. இந்த மூன்று மாத காலகட்டத்தில் எந்தவொரு நிலப்பரப்பிலும் அல்லது கடல் பகுதிகளிலும் குளிரான வெப்பநிலை பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகவெப்பம் கொண்ட ஆண்டின் பட்டியலில் முதலில் உள்ள ஆண்டு எது?

அதிகவெப்பம் கொண்ட ஆண்டின் பட்டியலில் முதலில் உள்ள ஆண்டு எது?

சமீபத்திய அறிவிப்பின்படி கடந்த மார்ச் 2020 தான் பூமியின் இரண்டாவது வெப்பமான மார்ச் மாதமாகும், இந்த பதிவு கடந்த மார்ச் 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பதிவிற்குப் பின்னால் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பமான 10 பதிவுகள் அனைத்தும் 1990 முதல் மார்ச் 2020ம் ஆண்டுக்கு மத்தியில் நடந்தேறியுள்ளது. உலகளாவிய வெப்பநிலை பதிவுகளில் முதல் இடத்தில் 1880 ஆம் ஆண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதியா இருந்தது இதுக்கு தானா: ஒரே திட்டம் அட்டகாச சலுகைகள்- இதுதான் Airtel!அமைதியா இருந்தது இதுக்கு தானா: ஒரே திட்டம் அட்டகாச சலுகைகள்- இதுதான் Airtel!

குளிரான லா நினா (La Niña) உருவாக வாய்ப்புள்ளதா?

குளிரான லா நினா (La Niña) உருவாக வாய்ப்புள்ளதா?

முன்னோக்கிப் பார்க்கும்போது, ​​கோடைக்காலத்தின் முடிவில் எல் நினோ அல்லது அதன் குளிரான லா நினா (La Niña) உருவாக வாய்ப்புள்ளது என்று NOAA விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், இந்த ஆண்டின் லா நினாவின் உருவாக்கம் வழக்கத்தைவிட 35% முதல் 40% வரை பின் உதிர்க்கலாம் மற்றும் குளிர்காலத்தின் துவக்கத்தில் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் பூமியின் வெப்பம்

அதிகரிக்கும் பூமியின் வெப்பம்

வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் சராசரி கடல் வெப்பநிலையால் குறிக்கப்பட்ட லா நினா, மிகவும் சுறுசுறுப்பான அட்லாண்டிக் சூறாவளி பருவத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வியாழக்கிழமை காலை செய்தியாளர்களுடன் ஒரு மாநாட்டு அழைப்பின் போது உலக வெப்பநிலை மற்றும் காலநிலை குறித்து NOAA அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
NOAA Says Earth Had Its Second Hottest March On Record : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X